search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    புதிய சாதனை படைத்த நியூசிலாந்து அணி வீரர் கப்தில்
    X

    புதிய சாதனை படைத்த நியூசிலாந்து அணி வீரர் கப்தில்

    • டி20 உலக்கோப்பைக்கான வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
    • பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார்கள்.

    வெலிங்டன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் உலகக்கோப்பைக்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தன.

    'சூப்பர்12' சுற்றில் நேரடியாக விளையாடும் முன்னணி அணியான நியூசிலாந்து நேற்று வரை வீரர்களை அறிவிக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

    வேகப்பந்து வீரர் ஆடம் மிலின், பின்ஆலன், மிச்சேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலகக்கோப்பையில் ஆடுகிறார்கள். இந்த அணியில் 35 வய்தான மார்ட்டின் கப்திலும் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் அதிக டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை கப்தில் படைத்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் கப்தில் விளையாட உள்ளார். மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் 6 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

    கானே வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், பின் ஆலன், கான்வாய், கிளன் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரியல் மிச்சேல், ஜிம்மி நீசம், பிரேஸ்வெல், சான்ட்னெர், சோதி, டிரென்ட் போல்ட் பெர்குசன், ஆடம் மிலின்.

    Next Story
    ×