என் மலர்
நீங்கள் தேடியது "மார்ட்டின் கப்தில்"
- சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
- சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான மார்ட்டின் கப்தில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். வெள்ளி நிறத்திலான பெரணி செடி பதிந்த நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ'டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி.
எனது மனைவி லாரா, அழகான குழந்தைகள் ஹார்லி, டெடி அவர்களுக்கும் நன்றி. எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீதான். நான் அதற்காக கடமைப்பட்டுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி.
38 வயதாகும் மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணிக்காக 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலக்கோப்பைக்கான வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார்கள்.
வெலிங்டன்:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் உலகக்கோப்பைக்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தன.
'சூப்பர்12' சுற்றில் நேரடியாக விளையாடும் முன்னணி அணியான நியூசிலாந்து நேற்று வரை வீரர்களை அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
வேகப்பந்து வீரர் ஆடம் மிலின், பின்ஆலன், மிச்சேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலகக்கோப்பையில் ஆடுகிறார்கள். இந்த அணியில் 35 வய்தான மார்ட்டின் கப்திலும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அதிக டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை கப்தில் படைத்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் கப்தில் விளையாட உள்ளார். மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் 6 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
கானே வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், பின் ஆலன், கான்வாய், கிளன் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரியல் மிச்சேல், ஜிம்மி நீசம், பிரேஸ்வெல், சான்ட்னெர், சோதி, டிரென்ட் போல்ட் பெர்குசன், ஆடம் மிலின்.
- நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடந்தது.
- தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 40 ரன்கள் விளாசினார்.
எடின்பர்க்:
ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு இரண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுகிறது. நியூசிலாந்து-ஸ்காட்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி எடின்பர்க் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
பின் ஆலென் சதம் (101 ரன், 56 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 40 ரன்கள் விளாசினார். முன்னதாக கப்தில் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார்.
35 வயதான கப்தில் இதுவரை 116 இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2 சதம், 20 அரைசதம் உள்பட 3,399 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே இந்தியாவின் ரோகித் சர்மா (3,379 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.






