search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    ஹர்திக் பாண்ட்யா

    முதல் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.

    மொகாலி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். குறிப்பாக கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் சிக்சர் விளாசி அசத்தினார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார். ஹேசில்வுட் 2 விக்கெட், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    Next Story
    ×