என் மலர்
விளையாட்டு
- 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம்.
- ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்க முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இமாமிற்கும் எனக்கும் பார்ட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம். ஆனால் எங்களால் சரியாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்து கொண்டனர். அப்போது தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 6 சிக்சர்கள் விளாசினார்.
- சாகித் அப்ரிடி 351 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.
6 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 சிக்சர் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவருக்கு முன்னர் சாகித் அப்ரிடி 351 சிக்சருடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 331 சிக்சருடன் 2-வது இடத்தில் உள்ளனர்.
- இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களை குவித்தார்.
- ஸ்ரேயாஸ் அய்யர் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய இவர் 63 பந்துகளில் 86 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய சுப்மன் கில் 16 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. போட்டி முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும், கே.எல். ராகுல் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
- இந்தியா தரப்பில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் தன் பங்கிற்கு 49 ரன்களை எடுத்த போது, பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி நடையை கட்டினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது.
இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
- மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில் கொண்டு மேக்மைட்ரிப் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், இந்த போட்டியை காண இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பர பதிவில், பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால், பயனர்கள் கீழ்கண்ட வார்த்தைகளை தெரிவித்து மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்படி பாகிஸ்தான் அணி பத்து விக்கெட்டுகள் அல்லது 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 50 சதவீதமும், 6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 30 சதவீதமும், 3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 10 சதவீதமும் தள்ளுபடி பெறலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது. இத்துடன் ரசிகர்கள், BoysPlayedWell, EkShaheenHaar அல்லது NoMaukaMauka போன்ற குறியீடுகளை பயன்படுத்தலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பான பதிவு வெளியான சில மணி நேரங்களில், அதிக வைரல் ஆனது. பலர், இத்தகைய விளம்பரம் வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டனர். சிலர், நாம் தான் போட்டியை நடத்துகிறோம், நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யக் கூடாது என்ற வகையில் கருத்து பதிவிட்டனர். மேலும் சிலர், இது உண்மையான கிரிக்கெட்-க்கு அர்த்தம் கிடையாது என்று பதிவிட்டனர்.
மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பரத்திற்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக், "அன்பு மற்றும் காதலில் கிடைக்காத சந்தோஷம், பாகிஸ்தான் தோற்றால் கிடைத்துவிடுகிறது. இப்படி யார் அழைப்பார்கள். இது மேக்மைட்ரிப்-இன் சரியான விளையாட்டு," என்று குறிப்பிட்டுள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
- பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும்.
- பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.
இந்த நிலையில் நடப்பு உலக கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரு நாடுகள் இடையே சீரற்ற உறவு, பகைமை உணர்வு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்வுபூர்வமாகி விடுவார்கள். ஏதோ தாங்களே விளையாடுவது போல் அவர்களின் ஆர்ப்பரிப்பும், சீற்றமும், ஆக்ரோஷமும் களத்தையே சூடாக்கி விடும். அதனால் தான் பரமஎதிரிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை இப்போதே உசுப்பேற்றி இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் சூப்பர். பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.

'ஸ்விங்' செய்வதில் வல்லவரான பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலியை தொடக்க கட்ட ஓவர்களில் சமாளிப்பது மிகவும் முக்கியம். அதை சாதுர்யமாக செய்து விட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைவதற்கு வழிபிறக்கும். அத்துடன் யாராவது ஒருவர் செஞ்சுரி அடித்தால் 300-ஐ எளிதில் கடந்து விடலாம்.
டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.
கடந்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 128 ரன்னில் சுருட்டி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது நிச்சயம் இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும். மேலும், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. 7 முறை போட்டுத் தாக்கிய இந்தியா அந்த எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலக கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.
அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலுசேர்க்கிறார்கள். 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.
சரிசம பலத்துடன் இரு அணிகளும் கோதாவில் குதிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பதால் நெருக்கடி முன்பை விட எகிறி நிற்கும். பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்ட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது ஐசிசி.
- செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சிராஜ் மற்றும் மலானைப் பின்னுக்குத் தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.
இதேபோல, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.
- துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
- கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.
போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
- பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் என 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
- ரஷிய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி.
சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் என 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷிய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின்போது முதல் முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 123 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
- துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
- சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.






