search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கேன் வில்லியம்சன் காட்டடி.. வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    கேன் வில்லியம்சன் காட்டடி.. வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×