என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் என 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
    • ரஷிய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி.

    சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் என 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.

    ரஷிய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    1900ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின்போது முதல் முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 123 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

     

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார்.
    • பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 2 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் 3-வது போட்டியில் ஆடுகின்றன.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக கோப்பை என்பதால் மிக கூடுதலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    கடந்த மாதம் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா 228 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் (2018 முதல் கடந்த மாதம் வரை) இந்தியா 4-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். இதே போல விராட் கோலி தொடர்ச்சியாக 2-வது அரைசதத்தை அடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

    மேலும் கே.எல். ராகுலும் நல்ல நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுடன் நேர்த்தியாக ஆடினார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன்கில் முதல் 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. அகமதாபாத்தில் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் இடம் பெறுவாரா? என்பது உறுதியில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

    ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். அவர் 6 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானிடம் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கவனமுடன் பந்து வீசுவது அவசியமாகும்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நெதர்லாந்தை 81 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை சேஸ் செய்து உலக கோப்பையில் சாதனை படைத்தது.

    இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி கடைசியாக லண்டன் ஓவல் மைதானத்தில் 2017-ம் ஆண்டு ஜூனில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்னில் தோற்கடித்து இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்தியாவை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சதம், அரை சதத்துடன் 199 ரன்கள் குவித்துள்ளார். அப்துல்லா ஷபீக் தனது முதல் உலக கோப்பை ஆட்டத்திலேயே சதம் அடித்து முத்திரை பதித்தார். இது தவிர சவுத் ஷகீல், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.

    கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் ஆசம் முதல் 2 ஆட்டத்திலும் மோசமாக ஆடினார்.

    பந்துவீச்சை பொறுத்தவரை ஹசன் அலி 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் ரவூப் 5 விக்கெட் எடுத்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    1.30 லட்சம் பேர் அமரும் இந்த ஸ்டேடியத்தில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 7 ஆயிரம் போலீசாரும், 4 ஆயிரம் ஊர்காவல்ப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஸ்டேடியத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி தான் இந்த போட்டியை முதலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டது.

    • சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.
    • தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டிக்காக தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் காவி நிறத்தில் இருந்தன. தொப்பியும் காவி நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது.

    ஆனால், தமிழக வீரர் அஸ்வின் மட்டும் காவிக்குப் பதிலாக நீல தொப்பி அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    இது தமிழகத்தில் காவிக்கு இடமில்லை என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஐ.ஓ.சி. செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • தடையால் ரஷிய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும்.

    மும்பை:

    சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது.

    கிழக்கு உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை ரஷியா தங்களுடன் இணைத்தது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

    தடை காரணமாக ரஷிய வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் ரஷிய நாட்டு பெயரில் பங்கேற்க முடியாது. அவர்கள் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார்.
    • ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் - பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

     

    ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார்.

    இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்படி போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர கேசவ் மகாராஜ், தப்ரிஸ் சம்சி மற்றும் யன்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • தென் ஆப்பிரிக்கா வீரர் டிகாக் 109 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.


    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் - பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

    இதனையத்து மார்க்ரம் - கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும் கிளாசன் 29 ரன்னில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் பீல்டிங் சற்று மோசமாக இருந்தது. 48 ஓவரில் இரண்டு கேட்ச் மிஸ் செய்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு போட்டி பல வருடங்களாக நடைபெறவில்லை
    • களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வது வழக்கம்

    ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    2012-ஆம் வருடத்திற்கு பிறகு ஐசிசி தொடரிலும், ஆசியா கோப்பை தொடரிலும் மட்டுமே இரு அணிகளும் சந்தித்து வருகின்றன. இருதரப்பு போட்டி நீண்டகாலமாக நடைபெறவில்லை.

    விளையாட்டு போட்டியாக இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையே போர் நடப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ரசிகர்கள் ஏற்படுத்துவதும், அதே போல் களத்தில் இரு அணி வீரர்களும் தீவிரமாக மோதி கொள்வதும் வழக்கம்.

    ஆனால், சமீப காலங்களில் மைதானத்திற்கு வெளியே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஆரோக்கியமான நட்பு நிலவி வருகிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் குழந்தைக்கு அன்பு பரிசளித்தார்.


     



    கடந்த 2022ல் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடரின் போது இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃபின் குழந்தையை கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.


     



    ஆகஸ்ட் 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினயின் போது ஏற்பட்ட கலவரத்தில், பாகிஸ்தான் வீரர் ஃபசல் மெஹ்மூத்தை கலவரக்காரர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு காப்பாற்றியது சரித்திரத்தில் பதிவான நிகழ்வாகும்.

    1987ல் இருதரப்பு தொடர் இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்களின் போது நடைபெற்றது. இரு தரப்பு வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதும் இதனால் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் நீச்சல் குளமே நிறம் மாறியதாக அப்போதைய விக்கெட் கீப்பர் கிரண் மோரே தெரிவித்திருந்தார்.

    90களில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் பரஸ்பர நட்பை வெளியே காட்டி கொள்ளாமல் இருப்பது வழக்கம். இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களின் தனிப்பட்ட அழைப்பிற்காக இந்தியா வரும் போது இரு நாட்டு வீரர்களும் நட்சத்திர ஓட்டல்களில் சந்திப்புகளை முடித்து கொள்வார்கள். பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் தனக்கு ரசிகர்கள் அதிகம் என கூறியதற்காக ஷஹித் அஃப்ரிதி ஒரு முறை அந்நாட்டில் நீதிமன்றத்திற்கு செல்ல நேர்ந்தது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கும் போது, அவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து தனது சமகால நண்பர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


     



    2021ல் இந்தியாவின் பழம்பெரும் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி ஒரு சீக்கிய வழிபாட்டிற்காக பாகிஸ்தான் சென்ற போது அவருடைய சமகால பாகிஸ்தான் வீரர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாமை, "உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர்" என புகழ்ந்திருந்தார். கோலி கடந்த செப்டம்பர் மாதம், இலங்கை கண்டியில் உள்ள பல்லேகெலெ மைதானத்தில் பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் உடன் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்ததும் வைரலானது.

    நேற்றைய இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கு எதிராக கூச்சலிட்ட போது அவ்வாறு செய்ய வேண்டாம் என விராட் கோலி அவர்களை கேட்டு கொண்டார். இவ்வருட ஐபிஎல் தொடரின் போது இவர்களிருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.




     


    போட்டியை போட்டியாக மட்டுமே பார்க்கும் மனநிலை, ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் வளர்ந்து வருவதை ஆரோக்கியமான மாற்றமாக கருதுவதாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.
    • அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடவில்லை.

    சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.

    அங்கு அவர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் இந்திய அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் வெளியேறுவார். அவர் 2 போட்டியில் விளையாடி 47 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குஜராத் செல்கிறார். அதாவது, ஒருநாள் உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்த போட்டியே காண குஜராத் செல்கிறார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஆகியோருக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • நான் எனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளேன்.
    • உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தது சிறப்பானது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதுபற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை.

    புதுடெல்லி:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய இந்தியா 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 84 பந்தில் 131 ரன்கள் எடுத்தார். மேலும் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். ரோகித்சர்மா 7 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் (6 சதம்) சாதனையை முறியடித்தார். அதேபோல் பல சாதனைகளையும் படைத்தார்.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    எங்களுக்கு நல்ல வெற்றியாக அமைந்தது. தொடக்கத்திலேயே உத்வேகத்தை பெறுவது முக்கியம். அழுத்தத்தை உள்வாங்கி களத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அதை செய்தோம். வெவ்வேறு திறன்களை கொண்ட வீரர்களை பெற்று இருப்பது அணிக்கு நல்லதாக அமைந்துள்ளது. சுதந்திரமாகவும், அச்சமின்றியும் விளையாடும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    இதுபோன்ற திறமைகள் ஒன்றாக சேர்ந்து வரும் போது உங்களுடைய அணியும் நல்ல இடத்தில் இருக்கும். கடந்த போட்டியை போல எங்களது வீரர்கள் அழுத்தத்தை உள்வாங்கி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் திறமையை கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பற்றிய வெளிப்புற பேச்சுகளால் நாங்கள் கவலைப்படவில்லை. வெளிப்புறத்தில் நடப்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே அணியின் கலவை, ஆடுகளம் அப்போட்டியில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்

    நான் எனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளேன். உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தது சிறப்பானது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதுபற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை.

    ஏனென்றால் முன்னோக்கி செல்ல நீண்ட வழி இருக்கிறது. எனது கவனத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவேன். முடிந்தவரை அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது எனது பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது.
    • வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த 8-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 2-வது ஆட்டம் நடக்கிறது. இது உலக கோப்பை போட்டி தொடரின் 9-வது லீக் ஆட்டமாகும். இதில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, வில்யங், மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் போல்ட், ஹென்றி, சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. வங்காளதேச அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

    அந்த அணியில் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசன் சாண்டோ, முஷ்பிகுர் ரகுமான், மெகதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லக்னோவில் இன்று நடக்கும் 10-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    ×