என் மலர்
விளையாட்டு
- போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.
- தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.
இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 7 ஆயிரம் போலீசார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- ரோகித் சர்மா உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
- சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார் ரோகித் சர்மா.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோகித் சர்மா அதிரடி சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 556 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா முதல் இடத்திலும், 553 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் 2-வது இடத்திலும், 476 சிக்சர்கள் அடித்த அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல், உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா .
- ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.
- 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அனைத்து ரசிகர்களும் விராட் கோலி -நவீன் உல் ஹக் மோதல் குறித்து ஆவளுடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். டுவிட்டரில் கூட mango என்ற வார்த்தை டிரெண்ட் ஆனது. நவீன் பேட்டிங் செய்த போது ரசிகர்கள் விராட் கோலி என ஆர்பரித்தனர். அதேபோல விராட் கோலி பேட்டிங் செய்த போது நவீன் பந்து வீசினார்.
அப்போது ரசிகர்கள் மீண்டும் விராட் கோலி என கோஷமிட்டனர். அப்போது விராட் கோலி வேண்டாம் என கைசைகை மூலம் காட்டினார். இதனையடுத்து நவீன் உல் ஹக் ஓடி வந்து விராட் கோலியை கட்டியணைத்து இருவரும் கைகுலுக்கி சிரித்தனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
- இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிவில் விராட் கோலி 55 ரன்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்களையும் குவித்தனர்.
- ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
- ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 84 பந்துகளில் 131 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி, உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். அதிக சதங்கள் அடித்திருந்த வீரர்களில் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
இத்துடன் உலகக் கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 272 ரன்களை எடுத்தது.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.
ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- டெல்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.
சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
- தென்ஆப்பிரிக்கா முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்தது
- ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியடைந்து இருந்தது
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.
டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை போட்டியின் 10-வது லீக் ஆட்டம் லக்னோவில் நாளை (12-ந்தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 102 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணி 428 ரன் குவித்து சாதனை படைத்தது. குயின்டன் டி காக், வான்டர் டூசன் உள்ளிட்ட 3 வீரர்கள் சதம் அடித்தனர். மார்க்ராம் அதிவேகத்தில் (49 பந்து) சதம் அடித்து சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சுமித், வார்னர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும்.
- 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழு தகவல்
- இருந்தபோதிலும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை
இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஆடவில்லை.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை அடைவதற்கு சுப்மன் கில்லுக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 14-ந்தேதி நடைபெறும் ஆட்டத்திலும், வங்காளதேசத்துக்கு எதிராக 19-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என கருதப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
இதற்கிடையே ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் பேக்-அப் வீரராக அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
- இந்த போட்டியில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டன
- இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தனர்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இலங்கை 344 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் எளிதாக சேஸிங் செய்தது.
இந்த போட்டி பல்வேறு சாதனைகளை கண்டுள்ளது. அதனைப் பார்ப்போம்
1. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் (131 நாட்அவுட்) படைத்துள்ளார்.
2. உலக கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்
3. இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களை கண்ட போட்டி என்ற சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர்.
4. இலங்கை அணிக்கெதிராக தோல்வியை சந்திக்காமல் அதிக வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. 8 முறை உலக கோப்பையில் இலங்கையில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்
5. இரு அணிகளிலும் 4-வது வீரர் சதம் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும். சமர விக்கரமா 108 ரன்களும், ரிஸ்வான் 131 ரன்களும் அடித்தனர்.
6. உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
7. இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது
- இலங்கை அணி 344 ரன்கள் குவித்திருந்தது
- 48.2 ஓவரிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தான் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
345 இலக்கை எட்டியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து 328 ரன்களை எட்டிப்பிடித்தது.
2019-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வங்காளதேசம் 322 ரன்களை எட்டிப்பிடித்துள்ளது. 2015-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்காளதேசம் 319 ரன்களையும், 1992-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கை 313 ரன்களையும் எட்டிப்பிடித்துள்ளது.
- ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
ஐதராபாத்:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா ௧௦௮ ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






