என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்களை எடுத்தது.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.
- பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4-வது மற்றும் கடைசி அணி எது என்பதில் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன. நியூசிலாந்து நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.743 ஆக உள்ளது.
பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் (ரன் ரேட் +0.036) உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.
ஆனால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தின் ரன் ரேட்டை கடக்க முடியும். ஒரு வேளை இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன்களை குவித்து பின்னர் இங்கிலாந்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு முடிந்து விடும்.
பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இல்லாததால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினமானது.
8 புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தானின் ரன் ரேட்-0.338 ஆக உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டில் நியூசிலாந்து, பாகிஸ்தானை முந்துவது இயலாத காரியம்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
- இதில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.
சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
அதேபோல், சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ், வங்காளதேசத்தை சேர்ந்த நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூசும் வென்றுள்ளனர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் ரச்சின் ரவீந்திரா.
- அந்த தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்தது.
நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் விதம், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. பரபரப்பான போட்டியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது.
அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரது பாட்டி திருஷ்டி சுற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது பற்றிய எக்ஸ் பதிவில், "இத்தகைய குடும்பத்தில் இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். தாத்தா, பாட்டிகள் தேவதைகளை போன்றவர்கள். அவர்களின் நினைவுகள் மற்றும் ஆசிர்வாதம் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக ரச்சின் ரவீந்திரா இருந்து வருகிறார். கடந்த போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரச்சின் ரவீந்திரா, சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் தனது பெயரை கோஷமிட்ட தருணம் சிறுவயது கனவை நிறைவேற்றும் வகையில் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் முக்கிய போட்டி தொடர்களில் விளையாடவில்லை. இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் சென்றார். அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கூறும்போது, "ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடுவார். தற்போது அவர் பயிற்சி செய்யமாட்டார். வீரர்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பதால் அவருடன் அணியை பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கைக்கு எதிராக 172 ரன் இலக்கை 23.2 ஓவரில் சேஸிங் செய்ததால் நல்ல ரன்ரேட்.
- பாகிஸ்தான் இங்கிலாந்தை 273 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.
15-ந்தேதி நடைபெறும் முதல் அரைஇறுதியில் இந்தியாவுடன் மோதுவது நியூசிலாந்தா அல்லது பாகிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-
அரைஇறுதியில் விளையாடுவது சிறப்பானது. ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவது கடும் சவாலானதாக இருக்கும். அதை எதிர்நோக்கி இருக்கிறோம்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆடுகளத்தில் பந்து மெதுவாக சென்றது. ரன் சேஸிங்கில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினம் என்பதால், நியூசிலாந்து ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியாவுடன் டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
- ஹர்திக் பாண்டயாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்.
இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது.
டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் கோப்பையில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடையவும், தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகுவதற்காகவும் ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
இதனால் யார் கேப்டனாக செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே, துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். டி20, ஒருநாள் போட்டிக்கான அணியில் முன்னணி வீரராக செயல்பட்டு வருகிறார்.
அதேவேளையில் ஆசிய கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இவரும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. என்றபோதிலும், சூர்யகுமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு கேப்டன் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
- நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.
2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
+0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.
- முதலில் ஆடிய இலங்கை 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 172 ரன்களை எடுத்து வென்றது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா அதிரடியாக ஆடி 25 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ரவீந்திரா 42 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். 3வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் இலங்கை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். தனஞ்செய டி சில்வா 19 ரன்னும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மதுஷனகா 19 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.
- 2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது
- கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன
ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் 20-20 ஐபிஎல் (IPL) தொடரை போல், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட அணிகளுடன் டபிள்யுபிஎல் (WPL) எனும் போட்டித்தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தால் (BCCI) இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மும்பை இண்டியன்ஸ், யு.பி. வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் என 5 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற்றன. முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது.
கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.
2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வரும் 2024 வருடத்திற்கான டபிள்யுபிஎல் போட்டித்தொடருக்கு டிசம்பர் 9 அன்று ஏலம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறப்போகும் இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும்.
கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.
தற்போதைய சாம்பியன்களான மும்பை இண்டியன்ஸ் அணி தங்களிடம் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்தி விட்டது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகள், இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ என இரு நகரங்களில் மட்டுமே நடைபெற போகின்றன.
இத்தொடரில் 5 அணிகளும் ஒன்றுடன் ஒன்று இரு முறை போட்டியிடும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறும்.
கடந்த அக்டோபர் மாதம், பி.சி.சி.ஐ. (BCCI), 5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியல், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும்.






