என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சதத்தை தவறவிட்ட ஓமர்சாய்: தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 245 ரன்களை நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்களை எடுத்தது.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
Next Story






