என் மலர்
விளையாட்டு
- 2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது
- கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன
ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் 20-20 ஐபிஎல் (IPL) தொடரை போல், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட அணிகளுடன் டபிள்யுபிஎல் (WPL) எனும் போட்டித்தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தால் (BCCI) இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மும்பை இண்டியன்ஸ், யு.பி. வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் என 5 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற்றன. முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது.
கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.
2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வரும் 2024 வருடத்திற்கான டபிள்யுபிஎல் போட்டித்தொடருக்கு டிசம்பர் 9 அன்று ஏலம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறப்போகும் இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும்.
கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.
தற்போதைய சாம்பியன்களான மும்பை இண்டியன்ஸ் அணி தங்களிடம் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்தி விட்டது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகள், இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ என இரு நகரங்களில் மட்டுமே நடைபெற போகின்றன.
இத்தொடரில் 5 அணிகளும் ஒன்றுடன் ஒன்று இரு முறை போட்டியிடும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறும்.
கடந்த அக்டோபர் மாதம், பி.சி.சி.ஐ. (BCCI), 5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியல், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும்.
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
- மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
பெங்களூரு:
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.இன்றைய ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார்.
- கடைசி மூன்று ரன்கள் எடுக்கும்போது, விராட் கோலியின் சுயநல உணர்வை பார்த்தேன் என ஹபீஸ் விமர்சனம்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சதன் செய்தார்.
விராட் கோலி இந்த சதத்தை மிகவும் மந்தமாக அடித்தார். அதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. பந்து பேட்டிற்கு மிகவும் மெதுவாக வந்ததுதான். இதனால் பொறுமையாக கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று சதம் அடித்தார்.
ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான முகமது ஹபீஸ், விராட் கோலி சதத்தில் சுயநல உணர்வை கண்டேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன், விராட் கோலி பந்து வீச்சில் முகமது ஹபீஸ் க்ளீன் போல்டாகும் படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "நீங்கள் விராட் கோலி பந்தில் போல்டாகினீர்கள். இதனால்தான் தொடர்ந்து அவரை சீண்டி வருவதாக என்று நான் பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
- மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயார் ஆகவில்லை டைம்அவுட் முறையில் அவுட்.
- ஷாகிப் அல் ஹசன் திரும்பப் பெற மறுப்பு தெரிவித்ததால், மேத்யூஸ் கடும் விமர்சனம்.
உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராகவில்லை என நடுவர் "டைம்அவுட்" முறையில் அவுட் கொடுத்தார். இதனால் பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார்.
வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முறையீடு செய்ததால் நடுவர் அவுட் கொடுத்தார். மேத்யூஸ் ஷாகிப் அல் ஹசனிடம் சென்று முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டார். ஆனால், ஷாகிப் அல் ஹசன் மறுத்துவிட்டார். இதனால் வங்காளதேச அணியின் செயல் அவமானகரமானது என மேத்யூஸ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும் என மேத்யூஸ் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேத்யூஸ் சகோதரர் டிரெவிஸ் கூறுகையில் "வங்காளதேச அணியின் சீனியர் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இலங்கையில் வரவேற்பு கொடுக்கப்பட மாட்டாது. விளையாடுவதற்காக இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும்.
நாங்கள் இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில், விளையாட்டு வீரர்களுக்கான ஸ்பிரிட் அவரிடம் இல்லை. மேலும், மனிதாபிமானத்தை அவர் காட்டவில்லை. அவர் மற்றும் அவர் அணியிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் சர்வதேச போட்டி அல்லது டி20 லீக் (லங்கா பிரிமீயர் லீக்) போட்டிகளில் விளையாட வந்தால், அவர் மீது கல்வீசப்படும். இல்லாவிடில், ரசிகர்கள் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.
- நியூசிலாந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரித்து வைப்பது அவசியம்.
- இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், நெருக்கடியின்றி விளையாடும்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது. இதனால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என முக்கியமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
தற்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் தலா நான்கில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதிக ரன்ரேட் வைத்திருந்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் நியூசிலாந்து இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மைதானம் ரன் குவிக்க சாதகமானது. இதனால்தான் கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 400 ரன்களுக்கு மேல் குவித்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தானின் தொடக்க வீரர் பஹர் ஜமான் அதிரடியாக விளையாடி சதம அடிக்க, மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இன்று சிறப்பாக விளையாடி வெற்றிக்காக முயற்சிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது. இதனால் இன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லலாம்.
இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர்தான் பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து 11-ந்தேதி விளையாட இருக்கிறது. இன்று நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் கூட, இங்கிலாந்துக்கு எதிராக ரன்ரேட் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்ப உள்ளது. இதனால் நியூசிலாந்து வெற்றி பெறுவதுடன் ரன்ரேட்டை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. புள்ளிகள் பட்டியலில் எந்த இடம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கும். இதனால் நெருக்கடி இன்றி இலங்கை வீரர்கள் விளையாடுவார்கள். நியூசிலாந்துக்கு இது முக்கியமான போட்டி என்பதால் வெற்றிக்காக விளையாடுவார்கள். இதனால் அந்த அணியின் ரன் குவிப்பு தொடர வாய்ப்புள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ரசிகர்கள் ரன் குவிப்பை காணலாம்.
- பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதமடிக்க, இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நெதர்லாந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
புனே:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றுது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 87 ரன்னில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார்.
இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.
- பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
புனே:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 18 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 28 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும், பட்லர் 5 ரன்னிலும், மொயின் அலி 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 87 ரன்னில் வெளியேறினார்.
பென் ஸ்டோக்சுடன், கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானம் காட்டிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் மிரட்டியது.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.
பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார். பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் அனைத்து ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வெற்றி கண்டுள்ளது.
புனே:
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளுக்கும் இது சம்பிரதாய மோதல் தான்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வெற்றி கண்டுள்ளது.
- இம்ராகிம் சதம் ஆப்கானிஸ்தானை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது.
- 70 ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் சிறந்த ஆட்டத்தை விளையாடியது.
ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் இப்ராகிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.
பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் (128 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 201*) ருத்ரதாண்டவம் ஆட ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இப்ராகிம் சட்ரனின் அற்புதமான சதம், ஆப்கானிஸ்தானை சிறந்த நிலையில் வைத்திருந்தது. அவர்கள் 2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி, 70-வது ஓவர் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டம் மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.
மேக்ஸ் நெருக்கடியில் இருந்து மேக்ஸ் அதிரடி! எனது வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் ஆட்டம் (மேக்ஸ்வெல் இரட்டை சதம்).
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- உலகக் கோப்பையில் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
- இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அதோடு இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியின் சாதனைத் துளிகள் விவரம்...
1. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மோர்கன் (17), கெய்ல் (16), மார்ட்டின் கப்தில் (11), பஹர் ஜமான் (11) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
2. ஒருநாள் போட்டியில் 2-வது அதிவேக இரட்டை சதம் இதுவாகும். இஷான் கிஷன் 126 பந்தில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
3. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 (நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185) சாதனை படைத்திருந்தனர்.
4. 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி 202 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174 (நாட்அவுட்) ரன்களும் குவித்திருந்தனர்.
5. உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (215) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
6. சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.
7. உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
8. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.
9. உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
10. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சட்ரன் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றார்.






