என் மலர்
விளையாட்டு
- உலகக் கோப்பையில் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
- இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அதோடு இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியின் சாதனைத் துளிகள் விவரம்...
1. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மோர்கன் (17), கெய்ல் (16), மார்ட்டின் கப்தில் (11), பஹர் ஜமான் (11) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
2. ஒருநாள் போட்டியில் 2-வது அதிவேக இரட்டை சதம் இதுவாகும். இஷான் கிஷன் 126 பந்தில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
3. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 (நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185) சாதனை படைத்திருந்தனர்.
4. 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி 202 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174 (நாட்அவுட்) ரன்களும் குவித்திருந்தனர்.
5. உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (215) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
6. சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.
7. உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
8. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.
9. உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
10. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சட்ரன் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றார்.
- நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே நிலையில் உள்ளன.
- நெதர்லாந்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, மற்ற 3 அணிகள் தோல்வியடைந்தால் ரன்ரேட் மூலம் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டியுள்ளது.
இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது.
இன்று இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெதர்லாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தும் விடும்.
ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால், கடைசி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். மேலும், அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்தியாவையும் வீழ்த்த வேண்டும். இது சாத்தியமற்றது.
நியூசிலாந்து நாளை இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒருவேளை தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து, நெதர்லாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதன்பின் ரன்ரேட் அடிப்படையில் நான்கு அணிகளில் ஒன்று அரையிறுதிக்கு முன்னேறும்.
இதே நிலைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும். இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற முனைப்பு காட்டும். இதனால் வரவிருக்கும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மும்பை:
உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்து திணறியது.
லபுசேன் 14 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 6 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.
- 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
மும்பை:
உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.
டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்து திணறி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது.
புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்திய அணி கோப்பையை 2-வது முறையாக வென்று அசத்தியது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது.
சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளைப் பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், அர்ஜெண்டினா அணி 3-வது இடத்திலும், பெல்ஜியம் அணி 4-ம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஹாக்கி அணி 5-ம் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது. இதில் உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது.
இந்திய அணி இப்போது 83 தரவரிசைப் புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காமல் இருந்தது ஆகியவற்றின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் சதமடித்தார்.
மும்பை:
உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்னும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 12 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் பொறுப்புடன் ஆடினார். இவர் முதல் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.
- இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
- வங்காளதேசம் தனது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது.
சிட்டகாங்:
டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியா 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.
- இன்னும் ஒரு வெற்றியை ருசித்தால் அரைஇறுதியை உறுதி செய்து விடும் நிலையில் உள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இன்று ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை ருசித்தால் அரைஇறுதியை உறுதி செய்து விடும் நிலையில் உள்ளது.
Toss news from Mumbai ?
— Dr Syed Hassan Raza Mashadi-CBA? (@DrHassanRazaCBA) November 7, 2023
Afghanistan have opted to bat first against Australia ?#CWC23 #AUSvAFG pic.twitter.com/nqw8X8xRIs
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 6-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.
- கடைசி மூன்று ரன்களின் விராட் கோலியின் சுயநலம் இருந்தது- முகமது ஹபீஸ்.
- ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது- வெங்கடேஷ் பிரசாத்.
இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி இதுவரை 543 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளது. அவரது ஸ்கோரில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொல்கத்தாவில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி தனது 49-வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.
இதற்கிடையே விராட் கோலி சுயநலமாக விளையாடினார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன். இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49-வது ஓவரில், அவர் சதத்தை எட்டுவதற்கு ஒரு ரன் எடுக்க விரும்பினார், அவர் அணிக்கு முதலிடம் கொடுக்கவில்லை.
கோலி நன்றாக விளையாடவில்லை என்று நான் கூறவில்லை, அவர் 97 ரன்களை எட்டும் வரை அவர் அழகாக பேட்டிங் செய்தார். அவர் எடுத்த கடைசி மூன்று சிங்கிள்களின் நோக்கத்தைப் பற்றி பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிக்காமல் ஒரு ரன்னாக எடுத்தார். எப்போதும் தனிப்பட்ட மைல்கல்லுக்கு மேல் அணிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் கோலி மீதான விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-
விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதியே. ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது. இவ்வளவு சாதித்த பின்பும் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதியே" என்று பதிவிட்டுள்ளார்.
- ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்.
- நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் தோற்கடித்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார்.
இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிகாட்டி டைம் அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.
வங்காளதேச அணி விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
ஷாகிப்-அல்-ஹசன் மற்றும் வங்காளதேச அணியின் செயல் வெளிப்படையாக அவமானகரமானது. பீல்டிங்குக்கு இடையூறு அல்லது பந்து வீசுவதற்கு முன்பே கிரீசைவிட்டு நான் வெளியேறி இருந்து அவுட் கொடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இரண்டு நிமிடங்களில் களத்தில் இருந்தேன். நான் கிரீசில் இருந்தபோதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன.
நான் ஹெல்மெட்டை காட்டிய பிறகு வங்காளதேச அணியினர் மேல்முறையீடு செய்ததாக நடுவர்கள் கூறினார்கள்.
எனது இரண்டு நிமிடங்கள் முடிவடையாததால், பொது அறிவு எங்கே என்று கேட்டேன். இதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிருஷ்டவசமாக ஹெல்மெட்டின் பட்டை உடைந்தது. அந்த சமயத்தில் இதுபோன்று (டைம் அவுட்) வேறு அணியும் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. எனது உபகரணம் செயலிழந்தது. இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. ஹெல்மெட் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது.
ஷாகிப்-அல்-ஹசன் மீதும் வங்காளதேச அணி மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற விளையாடுங்கள். அது விதிகளுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் நான் இரண்டு நிமிடங்களுக்குள் களத்தில் இருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. விக்கெட் வீழ்ந்ததில் இருந்து நான் கிரீசுக்குள் நுழையும் வரையும் எனது ஹெல்மெட் உடைந்த பிறகு இன்னும் 5 வினாடிகள் மீதி இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் நடுவர்கள் மீது இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். 146 ஆண்டு கால சர்வ தேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் ஆவார்.
- இங்கிலாந்து ஏழு ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- நெதர்லாந்து ஏழு ஆட்டத்தில் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புனேவில் நாளை நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.
நெதர்லாந்து 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் பெறும். ஆனாலும் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.
2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு, தற்போதைய உலக கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். எனவே முதல் 8 இடங்களுக்குள் செல்ல இரு அணிகளும் வெற்றிக்காக போராடும்.
- சகீப் 82 ரன்களிலும் ஷண்டோ 90 ரன்களிலும் மேத்யூஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
- இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி அசலங்காவின் சதத்தால் 279 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது. முதல் 2 விக்கெட்டுகளை 41 ரன்களில் இழந்தது. அதனையடுத்து சகீப் - ஷண்டோ ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். முதலில் நிதானமாக விளையாடி இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாடினர். சகீப் 82 ரன்களிலும் ஷண்டோ 90 ரன்களிலும் மேத்யூஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 10 ரன்களிலும் மஹ்முதுல்லாஹ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வங்காளதேசம் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இருந்து கிட்டத்தட்ட இலங்கை அணி வெளியேறியது.






