என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக பராக் விளையாடினார்.
    • 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 19-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக ரியான் பராக் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும்.
    • அதுபோல நாங்களும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன்.

    உலகக் கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் கடைசி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடும். அதேபோல முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். அதுபோல எங்கள் அணியும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கு அந்தந்த அணிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதலில் தோல்விகளை தழுவினாலும் பின்னர் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளோம். நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என நினைக்கிறேன். முதல் 2 இடங்களில் இருக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை வெல்வது மிகவும் கடினம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.
    • டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    கொல்கத்தா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது ஜடேஜா வீசிய பந்தில் வான் டேர் டுசென் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கப்பட்டு அவுட் ஆனார். முதலில் ஜடேஜா வீசிய பந்து அவர் காலில் பட்ட போது அவுட் கேட்கப்பட்டது. அப்போது நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். பின்னர் ஜடேஜா ரிவ்யூ கேட்குமாறு கேப்டன் ரோகித்திடம் கேட்டார். அதன் பின் ரிவ்யூ கேட்கப்பட்டது. அப்போது ரீப்ளேவில் பந்து லெக் திசையில் வருவது போல இருந்தது. ஆனால், மிடில் ஸ்டம்ப்பில் பந்து படுவதாக ரீப்ளேவில் காட்டப்பட்டது.

    இந்நிலையில் டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    இது குறித்து ஹசன் ராசா கூறியதாவது:-

    ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். இங்கே நாம் டிஆர்எஸ் கேட்கப்பட்டது பற்றி பேச வேண்டும். டுசென் பேட்டிங் செய்யும் போது, பந்து லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்ப்பில் படுகிறது. அது எப்படி சாத்தியம்? அந்த பந்து லைனில் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்ப் நோக்கி தான் போனது. எல்லோரையும் போல நானும் என் கருத்தை சொல்கிறேன். இதை நாம் கவனிக்க வேண்டும். டிஆர்எஸ்-இல் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன்.

    புதுடெல்லி:

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றிபெற்றது. இதில், இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில், சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில்:-

    உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விராட் கோலியின் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனையை பார்க்கும்போது அது நம்பமுடியாத அளவில் உள்ளது

    விராட் கோலி 49வது சதம் விளாசிவிட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்துவிட்டார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நம்பமுடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் குவித்தது.
    • வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் பெரேரா களமிறங்கினர்.

    பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய குசல் பெரேரா 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மெண்டீஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்திலேயே நிசங்கா 41 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சதீரா - அசலங்கா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சதீரா 41 ரன்களில் இருந்த போது சகீப் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அசலங்கா - தனஞ்செயா ஜோடி சேர்ந்து ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செயா தேவையில்லாமல் இறங்கி வந்து அடிக்க முற்பட்டு 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா சதம் அடித்து அசத்தினார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    • விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சதம் விளாசிய விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி அணிக்காக விளையாடாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன், இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49- வது ஓவரில், அவர் தனது சொந்த சதத்தை பதிவு செய்ய ஒரு ரன் எடுக்க நினைத்தார். மேலும் அவர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    ரோகித்தும் சுயநல கிரிக்கெட்டையும் விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் தனக்காக விளையாடாமல் இந்தியாவுக்காக விளையாடுகிறார். விராட் நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் 97 ரன்களை எட்டும் வரை அழகாக பேட்டிங் செய்தார். ஆனால் கடைசியாக எடுத்த 1 ரன்கள் குறித்து நான் பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிப்பதற்குப் பதிலாக 1 ரன்னை தேடினார். அவர் 97 அல்லது 99 ரன்களில் வெளியேறினால் யார் கவலைப்படுகிறார்கள். நம் தனிப்பட்ட மைல்கல்லை விட அணிதான் எப்போதுமே மேலே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
    • ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார்.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 135 ரன்கள் இருந்த போது சமீரா அவுட் ஆனார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார்.

    3 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் களத்திற்குள் வந்து உடனே ஹெல்மெட் பிரச்சனை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். அந்த ஹெல்மெட் வருவதற்கு காலதாமதம் ஆனதால் நடுவர் அவுட் கொடுத்தார்.

    மேத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார். ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் மேத்யூஸ் வெளியேறினார்.

    இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.

    • தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியிலும் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கேட்ச், ரன் அவுட் பிடிக்காத ரோகித்துக்கு வழக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் விருதை அறிவிக்கும் பீல்டிங் பயிற்சியாளர், இந்த முறையும் புதுவிதமாக விருதை அறிவித்தார். இந்த முறை நடமாடும் கேமரா மூலம் விருது வழங்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐய்யர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அந்த கேமரா இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து இறுதியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து அவருக்கு கொடுத்தது. உடனே கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரோகித்தை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
    • வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

    இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று 38வது போட்டி நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  

    • இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
    • 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது

    கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.

    குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.

    ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ரோகித் இதுபோன்று அதிரடியில் இறங்குகிறார்
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யருக்கு உதவியாக இருக்கிறது

    உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 83 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் குவித்தது. அதன்பின் இந்தியா 40 ஓவரில் 232 ரன்கள் சேர்த்தது. பந்து பழசு ஆகஆக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 326 ரன்கள் அடிக்க ரோகித் சர்மாவின் அதிரடிதான் முக்கிய காரணம்.

    ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அணுகுமுறை (attacking batting approach) அணிக்கு சிறந்த வகையில் உதவியாக இருக்கிறது என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விக்ரம் ரத்தோர் கூறுகையில் "இது முற்றிலும் ரோகித் சர்மாவின் யோசனைதான். அவர் இந்த முன்முயற்சியை எடுத்துள்ளார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சிரமமாக இருக்கும்போது, இதுபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பார்க்கிறார். இது அணிக்கு சிறந்த முறையில் பலன் அளித்து வருகிறது. அவர் மட்டும்தான் இதில் முன்னிலை வகிக்கிறார்.

    முடிந்தவரை அதிக ரன்கள் குவிக்க பார்க்கிறோம். ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தால் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் நங்கூரமாக நிற்பதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள அது வழிவகுக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார்.
    • கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 49-வது சதத்தை சமன் செய்தார்.

    அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இலங்கை அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிருபர் ஒருவர், இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸிடம், சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு வாழ்த்துகள் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

    இன்னொரு முறை இந்த கேள்வியை கேளுங்கள் என்ற குசால் மெண்டிஸ், நிருபரும் கேள்வியை கேட்க, குசால் மெண்டிஸ் கேள்வியை புரிந்து கொண்டு, நான் எதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கனும்? என்றார். பின்னர் சிரித்துக் கொண்டே அருகில் உள்ளவர்களிடம் கேட்பதுபோன்று வலது பக்கம் திரும்பினார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதோடு சாதனைப்படைத்த ஒரு வீரருக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததாக விமர்சனமும் செய்யப்பட்டு வருகிறது.

    ×