என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விராட் கோலிக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கனும்: வைரலாகும் இலங்கை அணி கேப்டன் வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விராட் கோலிக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கனும்: வைரலாகும் இலங்கை அணி கேப்டன் வீடியோ

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார்.
    • கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 49-வது சதத்தை சமன் செய்தார்.

    அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இலங்கை அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது நிருபர் ஒருவர், இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸிடம், சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு வாழ்த்துகள் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

    இன்னொரு முறை இந்த கேள்வியை கேளுங்கள் என்ற குசால் மெண்டிஸ், நிருபரும் கேள்வியை கேட்க, குசால் மெண்டிஸ் கேள்வியை புரிந்து கொண்டு, நான் எதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கனும்? என்றார். பின்னர் சிரித்துக் கொண்டே அருகில் உள்ளவர்களிடம் கேட்பதுபோன்று வலது பக்கம் திரும்பினார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதோடு சாதனைப்படைத்த ஒரு வீரருக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததாக விமர்சனமும் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×