என் மலர்
விளையாட்டு
- இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
- 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது
கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.
ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ரோகித் இதுபோன்று அதிரடியில் இறங்குகிறார்
- ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யருக்கு உதவியாக இருக்கிறது
உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 83 ரன்னில் சுருண்டது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் குவித்தது. அதன்பின் இந்தியா 40 ஓவரில் 232 ரன்கள் சேர்த்தது. பந்து பழசு ஆகஆக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 326 ரன்கள் அடிக்க ரோகித் சர்மாவின் அதிரடிதான் முக்கிய காரணம்.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அணுகுமுறை (attacking batting approach) அணிக்கு சிறந்த வகையில் உதவியாக இருக்கிறது என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா குறித்து விக்ரம் ரத்தோர் கூறுகையில் "இது முற்றிலும் ரோகித் சர்மாவின் யோசனைதான். அவர் இந்த முன்முயற்சியை எடுத்துள்ளார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சிரமமாக இருக்கும்போது, இதுபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பார்க்கிறார். இது அணிக்கு சிறந்த முறையில் பலன் அளித்து வருகிறது. அவர் மட்டும்தான் இதில் முன்னிலை வகிக்கிறார்.
முடிந்தவரை அதிக ரன்கள் குவிக்க பார்க்கிறோம். ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தால் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் நங்கூரமாக நிற்பதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள அது வழிவகுக்கும்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார்.
- கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் 49-வது சதத்தை சமன் செய்தார்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இலங்கை அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸிடம், சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு வாழ்த்துகள் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
இன்னொரு முறை இந்த கேள்வியை கேளுங்கள் என்ற குசால் மெண்டிஸ், நிருபரும் கேள்வியை கேட்க, குசால் மெண்டிஸ் கேள்வியை புரிந்து கொண்டு, நான் எதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கனும்? என்றார். பின்னர் சிரித்துக் கொண்டே அருகில் உள்ளவர்களிடம் கேட்பதுபோன்று வலது பக்கம் திரும்பினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதோடு சாதனைப்படைத்த ஒரு வீரருக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததாக விமர்சனமும் செய்யப்பட்டு வருகிறது.
- நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்
- ஆப்கானிஸ்தான் இரண்டு முக்கிய அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.
இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
ஆஸ்திரேலியா (7-ல் 5 வெற்றி), நியூசிலாந்து (8-ல் 4 வெற்றி), பாகிஸ்தான் (8-ல் 4 வெற்றி), ஆப்கானிஸ்தான் (7-ல் 4 வெற்றி), இலங்கை (7-ல் 2 வெற்றி), நெதர்லாந்து (7-ல் 2 வெற்றி) இந்த ஆறு அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
ஆஸ்திரேலியா
தற்போது 10 புள்ளிகளுடன 3-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.
நியூசிலாந்து (4 வெற்றி)
நியூசிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வி முடிவை பொறுத்து தகுதி பெற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மீதமுள்ள போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.
பாகிஸ்தான் (4 வெற்றி)
பாகிஸ்தான் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய நியூசிலாந்து அணியின் நிலையை போன்றதுதான். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டில் நியூசிலாந்தை விட அதிகம் வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை இங்கிலாந்திடம் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை அணிகள் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
ஆப்கானிஸ்தான் (4 வெற்றி)
ஆப்கானிஸ்தான் தற்போது 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறுவது அவர்களுக்கு கடினமான ஒன்று.
ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில தோல்வியை சந்திக்க வேண்டும்
இலங்கை (2 வெற்றி)
4 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் தோல்விகளை சந்திக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட வெளியேற வேண்டியதுதான்.
நெதர்லாந்து (2 வெற்றி)
4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து இலங்கையை போன்ற சூழ்நிலைதான். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகும்.
எப்படி இருந்தாலும் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம்.
- ஷ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார்.
கொல்கத்தா:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :
நாங்கள் கடந்த மூன்று போட்டிகளாகவே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். துவக்கத்திலேயே விக்கெட்டை இழந்திருந்தாலும் டீசன்ட்டான ரன் குவிப்பை வழங்கினோம். அதன் பின்னர் பவுலர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து வெற்றியை தேடி தந்தனர்.
விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீது நாங்கள் இன்னும் நம்பிக்கை வைப்போம்.
முகமது ஷமி அணிக்குள் வந்ததிலிருந்தே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில்லும் நானும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுகிறோம். நாங்கள் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோன்று ஜடேஜா எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் மூன்று விதமான வடிவத்திலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது.
- ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.
கொல்கத்தா:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்த பின்னர் இன்னிங்ஸ் இடைவேளையில் (தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு முன்) விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதோடு தொடக்க ஓவர்கள் கடந்து மிடில் ஓவர்களின் போது பந்து சற்று நின்று திரும்பி வந்தது. மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு பந்து மிகவும் மெதுவாக ஆனதால் நான் இறுதிவரை சற்று கவனத்துடன் விளையாட எண்ணினேன்.
அப்படி நான் விளையாடும் போது டீம் மேனேஜ்மென்டிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் இந்த போட்டியை இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்றும் என்னை சுற்றி மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் எனக்கு அவர்கள் செய்தி அனுப்பி இருந்தனர்.
அதன்படியே நான் இறுதிவரை நிற்க வேண்டும் என்று ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடினேன். மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்த்திக் பாண்ட்யா இந்த தொடரில் இல்லை என்பதால் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை விட்டால் கூட அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே போட்டியில் கடைசிவரை நான் நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி விளையாடியதால் சதமும் அடித்தேன். இப்படி எனக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
- விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார்.
பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், கே.எல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
ஆனால், ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இதில், குயின்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார், தொரடர்ந்து, தெம்பா பவுமா-11, அய்டன் மார்க்ரம்-9, ஹெயின்ரிச் கிளாசன்-1, ராசி வேன் டெர் துசன்-13, டேவிட் மில்லர்-11, கேஷவ் மகாராஜ்-7, மாக்ரோ ஜான்சன்-14, காகிசோ ரபாடா-6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், தென் ஆப்பிரக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம், இந்திய அணி 243 ரன்களில் இமாலய வெற்றியை அடைந்தது.
- பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நியூசிலாந்து நிர்ணயித்தது
- அசராத சேவாக் தனது பதிலில் 2 காரணங்களுக்கு நன்றி கூறுங்கள் என்றார்
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பெங்களூரூவில் நேற்று போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது.
பிறகு பாகிஸ்தான் ஆடிய போது மழையின் காரணமாக டக்வர்த்-லூயிஸ்-ஸ்டர்ன் (Duckworth-Lewis-Stern) முறைப்படி இலக்குகள் மாற்றப்பட்டது. அப்போது புதிய இலக்கை அடைய ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் திறமையை பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்தனர்.
இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சாதனையாளருமான வீரேந்தர் சேவாக், தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் ஜமானின் ஆட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் "ஜமான் பேட்டிங்கில் 'ஜஜ்பே' (வெல்லும் வெறி) குறையவே இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
"ஜஸ்பே" என்பதை "ஜஜ்பே" என சேவாக் குறிப்பிட்டுள்ளதாக கூறிய ஒரு பாகிஸ்தானியர் "நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி சொல்ல 'ஜஸ்பே' ஒரு 13-ஆவது காரணமாகும்" என பதிலளித்தார்.
இதன் மூலம் மறைமுகமாக சேவாக்கை கிண்டல் செய்து விட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்ததாகவும் அந்த பாகிஸ்தானியர் கருதினார்.
ஆனால், '13 முறை நன்றி' பதிலுக்கு அசராத சேவாக், "தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?" என கேள்வி எழுப்பினார்.
இதுவரை ஐசிசி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 8 முறை தோற்ற பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. அதே போல் சில வருடங்களாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், பல நிதி அமைப்புகளிடம் கடன் பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.
இரண்டையும் குறிப்பிட்டு தனது நடுநிலையான பாராட்டை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சேவாக்கின் பதிலை சமூக வலைதளங்களில் பலரும் "சேவாக்கின் அதிரடி" என பாராட்டி வருகின்றனர்.
- விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
- பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் இந்திய அணி ஆட்டத்தின் முடிவில், 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும்.
இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்ரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
விராட் கோலி அடித்த சதத்தை பாராட்டி கற்பனை நயத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.
கடந்த ஏப்ரலில்தான் சச்சின் தனது 50வது வயதை எட்டினார். இதை மறைமுகமாக குறிப்பிட்டு, இந்த 50ஐ எட்டுவதற்கு அவருக்கு ஒரு வருடம் (365 நாட்கள்)ஆனதையும், விராட் கோலிக்கு தற்போது இலக்காக இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எடுக்க வேண்டிய 50வது சதத்தையும் குறிப்பிட்டு "எனக்கு 365 நாட்கள் ஆனது. உங்களால் விரைவிலேயே எட்ட முடியும்" என அழகாக பாராட்டியுள்ளார்.
- இந்தியா 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
- சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முடிவில், 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும், இந்த போட்டியில் ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்ரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
- விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்
பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் வீழ்ந்தார், விரோட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக, விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருவரும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
- கொல்கத்தாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உலக கோப்பை தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.






