search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலியால் போல்டு ஆனதால்தான் இந்த விமர்சனம்: ஹபீஸை கிண்டல் செய்த வாகன்
    X

    விராட் கோலியால் போல்டு ஆனதால்தான் இந்த விமர்சனம்: ஹபீஸை கிண்டல் செய்த வாகன்

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார்.
    • கடைசி மூன்று ரன்கள் எடுக்கும்போது, விராட் கோலியின் சுயநல உணர்வை பார்த்தேன் என ஹபீஸ் விமர்சனம்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சதன் செய்தார்.

    விராட் கோலி இந்த சதத்தை மிகவும் மந்தமாக அடித்தார். அதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. பந்து பேட்டிற்கு மிகவும் மெதுவாக வந்ததுதான். இதனால் பொறுமையாக கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று சதம் அடித்தார்.

    ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான முகமது ஹபீஸ், விராட் கோலி சதத்தில் சுயநல உணர்வை கண்டேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன், விராட் கோலி பந்து வீச்சில் முகமது ஹபீஸ் க்ளீன் போல்டாகும் படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "நீங்கள் விராட் கோலி பந்தில் போல்டாகினீர்கள். இதனால்தான் தொடர்ந்து அவரை சீண்டி வருவதாக என்று நான் பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×