என் மலர்
விளையாட்டு
- ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
- இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டி இருந்தது.
இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.
இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சூழல். இருப்பினும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்து.
இதனால், அரையிறுதிக்கு 4வது அணியாக நியூசிலாந்து முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
- இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, பாபர் அசாம் 38 ரன்கள், முகமது ரிஸ்வான் 36 ரன்கள், சவுட் ஷகீல் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
பகார் சமான், இஃப்திகர் அகமது, ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.
35.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.
களத்தில், அகா சல்மான் மற்றும் ஷஹீன் அஃப்ரிதி ஜோடி விளையாடினர். சல்மான் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு, அஃப்ரிதியுடன் முகமது வாசிம் ஜோடி சேர்ந்தார்.
79 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.
இதில், அஃப்ரிடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முகமது வாசிமுடன் ராஃப் ஜோடி சேர்ந்தார். இதில், ஹரிஸ் ராஃப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனால், அரையிறுதியில் 4வது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
- ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் ரன்களை குவித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தார்.
போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
307 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ச் அதிரடியாக ஆடி 177 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 307 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டஸ்கின் அகமது முஸ்தாஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து.
- நான் அதுபோன்ற டிரெசிங் ரூமில் இருந்தால் அப்படித் தான் நினைப்பேன்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

"இந்த ஆண்டு போட்டியை பார்க்கும் போது, இந்தியா இதுவரை விளையாடியதை போன்ற மனநிலையில் எதிர்கொள்ளும் நினைப்பில் இருக்கும். இதுவே அவர்களின் மனநிலையாக இருக்கும், நான் அதுபோன்ற டிரெசிங் ரூமில் இருந்தால் அப்படித் தான் நினைப்பேன். இதுவரை இந்த வழிமுறை நல்ல பலன் கொடுத்துள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நிலைமை கைமீறி சென்றுவிடும்."
"அவர்கள் தோல்வியை சந்திக்காமல் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன். இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அரையிறுதி சமயத்தில் ஏதேனும் போட்டியில் எதிர்பார்க்காத முடிவு கிடைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படலாம். அவர்கள் இதுபோன்ற அச்சம் கொள்ளாமல், எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிட வேண்டும்," என்று விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்து உள்ளார்.
- வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
- ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தனர்.

இவருடன் ஆடிய மஹமதுல்லா 32 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் மெஹிடி முறையே 21 மற்றும் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து, முதலில் களமிறங்குகிறது.
கொல்கத்தா:
உலக கோப்பை தொடரின் 44-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்குகிறது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- வருகிற 21-ந்தேி முதல் டிசம்பர் 25-தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
- போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.10 லட்சமாகும்.
சென்னை:
90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி வருகிற 21-ந்தேி முதல் டிசம்பர் 25-தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
35 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழு வதும் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீனியர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர், மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் ஸ்னூக்கர், சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் போட்டிகள் நடைபெறுகிறது.
பங்கஜ் அத்வானி, ஆதித்ய மேத்தா, ரபாத் ஹபீப், வித்யா பிள்ளை, பிரிஜேஷ் தமானி, ஸ்ரீகிருஷ்ணா சூர்ய நாராயணன், அனுபமா ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.10 லட்சமாகும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்க தலைவர் பி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.
- முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
- பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
கோவை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 38-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது.
16 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் மீட்டர் ஆட்டத்தில் அரியானா வீரர் நிஷாந்த் 5 நிமிடம் 27.02 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர்கள் மொத்தம் 170 புள்ளிகளை குவித்தனர். பெண்கள் பிரிவில் அரியானா 244 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அரியானா கைப்பற்றியது. அந்த அணி 411 புள்ளிகளை பெற்றது. தமிழ்நாடு 362 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசம் 238 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
- கிரிக்கெட்டுக்கு அடித்தளமாக இருக்கும் டென்னிஸ் பால், இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.
- டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டுக்கு அடித்தளமாக இருக்கும் டென்னிஸ் பால், இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. அதில் சில நடுவர் மற்றும் வீரர்கள் குறித்த காமெடியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் ஒரு டென்னிஸ் பால் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவர் தனது முதுகால் கேட்ச் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்ஸ்மேன் அடித்த பந்து கீப்பர் கையில் பட்டு அவர் முதுகிலேயே விழுந்தது. அதனை கீழே விழாமல் கையை வைத்து தடுத்துகொண்டார்.
கிரிக்கெட்டில் வித்தியசமான பேட்டிங் ஸ்டைல், பந்து வீச்சு ஸ்டைல் ஏன் பேட்டிங்கின் போது வித்தியசமான ஷாட் கூட இருக்கும். ஆனால் இப்படி ஒரு கேட்ச்சை யாரும் பாத்திருக்க முடியாது என்றே சொல்லலாம்.
- புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
புனே:
உலக கோப்பை தொடரின் 43வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
- 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.






