என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tennis ball cricket"

    • கிரிக்கெட்டுக்கு அடித்தளமாக இருக்கும் டென்னிஸ் பால், இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.
    • டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    கிரிக்கெட்டுக்கு அடித்தளமாக இருக்கும் டென்னிஸ் பால், இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. அதில் சில நடுவர் மற்றும் வீரர்கள் குறித்த காமெடியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

    அந்த வகையில் ஒரு டென்னிஸ் பால் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவர் தனது முதுகால் கேட்ச் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்ஸ்மேன் அடித்த பந்து கீப்பர் கையில் பட்டு அவர் முதுகிலேயே விழுந்தது. அதனை கீழே விழாமல் கையை வைத்து தடுத்துகொண்டார்.

    கிரிக்கெட்டில் வித்தியசமான பேட்டிங் ஸ்டைல், பந்து வீச்சு ஸ்டைல் ஏன் பேட்டிங்கின் போது வித்தியசமான ஷாட் கூட இருக்கும். ஆனால் இப்படி ஒரு கேட்ச்சை யாரும் பாத்திருக்க முடியாது என்றே சொல்லலாம்.

    ×