என் மலர்
விளையாட்டு
- நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார்.
- கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார்.
உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார். அவர் 2 சிக்சர்கள் அடித்தார்.
இதன்மூலம் ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார். ஒரே ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். ரோகித்சர்மா 25 ஆட்டத்தில் 60 சிச்ர்கள் அடித்துள்ளார். அவர் டிவில்லியர்ஸ் (தென்ஆப்பி ரிக்கா) சாதனையை முறி யடித்தார்.
டிவில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு 58 சிக்சர்கள் (18 இன்னிங்ஸ்) அடித்து இருந்தார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 56 சிக்சர்களும் (2019), அப்ரிடி (பாகிஸ்தான்) 48 சிக்சர்களும் (2002) அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார். அவர் 24 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் மார்கனை முந்தினார். இங்கிலாந்து கேப்டனாக பணியாற்றிய அவர் 2019 உலகக் கோப்பையில் 22 சிக்சர்கள் அடித்து இருந்தார்.
மேலும் ரோகித்சர்மா சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரர் வரிசையில் 14 ஆயிரம் ரன்னை கடந்தும் சாதனை படைத்தார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-லோகேஷ் ராகுல் ஜோடி 208 ரன் குவித்தது. உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு இது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மைக்கேல் கிளார்க்-பிராட் ஹோட்ஜ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர்-ராகுல் ஜோடி முறியடித்தது.
ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் அதிவேக சதமாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 63 பந்தில் சதம் அடித்திருந்தார். அதை ராகுல் முறியடித்தார்.
- இந்திய அணியில் நேற்று ‘டாப் 5’ வீரர்கள் முதல் முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர்.
- இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2 முறை இதுமாதிரி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்தது.
இந்திய அணியில் நேற்று 'டாப் 5' வீரர்கள் முதல் முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர்.
ரோகித்சர்மா 61 ரன்னும், சுப்மன்கில் 51 ரன்னும், விராட்கோலி 51 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 128 ரன்னும், லோகேஷ் ராகுல் 102 ரன்னும் எடுத்தனர். 2 சதமும், 3 அரைசதமும் அடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2 முறை இதுமாதிரி சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்திலும் (5 அரைசதம்) 2022-ம் ஆண்டு சிட்னியில் நடந்த போட்டியிலும் (1 சதம் + 4 அரைசதம்) அந்த அணியின் 'டாப் 5' வீரர்கள் 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.
இந்த ஆண்டில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 8-வது முறையாக 350 ரன்னுக்கு மேல் குவித்துள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக முறை 350 ரன்னுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை புரிந்தது. இதற்கு முன்பு 2019-ல் இங்கிலாந்து 7 தடவை எடுத்து இருந்தது.
உலகக் கோப்பையில் 7-வது முறையாக இந்தியா 400 ரன்னுக்கு மேல் குவித்து 2-வது இடத்தை பிடித்தது. தென்ஆப்பிரிக்கா 8 தடவை 400 ரன்னுக்கு மேல் எடுத்து உள்ளது.
உலகக் கோப்பையில் இந்திய அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். 2007-ல் பெர்முடாவுக்கு எதிராக 413 ரன் குவித்ததே அதிகபட்சமாகும்.
- ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை.
- வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார்.
லண்டன்:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 6-ந் தேதி டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூசுக்கு வழங்கப்பட்ட வினோதமான 'அவுட்' சர்ச்சையை கிளப்பியது. சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த மேத்யூஸ் தனது 'ஹெல்மெட்'டில் வார் அறுந்து விட்டதால் மாற்று 'ஹெல்மெட்' கொண்டு வரும்படி வெளியில் இருந்த சக வீரரை அழைத்தார்.
இதனால் அவர் பேட் செய்ய காலதாமதமாகி விட்டதாகவும், 'டைம்டு அவுட்'டின் படி விக்கெட் வீழந்ததாக அறிவிக்கும்படியும் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். உலகக் கோப்பை போட்டி விதிமுறைப்படி ஒரு வீரர் 'அவுட்' ஆனால் அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்துக்குள் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். அந்த விதியை மேத்யூஸ் மீறி விட்டதாக கூறி நடுவர்கள் அவருக்கு 'அவுட் 'வழங்கினர்.
ஹெல்மெட் பிரச்சினையால் தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய் விட்டது என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை. வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ் பெற மறுத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் மேத்யூஸ் தான். மேத்யூசுக்கு அவுட் வழங்கியது சரி தான் என்று ஒரு தரப்பினரும், சரியில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிமுறையை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) மேத்யூஸ் 'அவுட்' சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இலங்கை வீரர் மேத்யூசுக்கு நடுவர்கள் 'டைம்டு அவுட்' வழங்கிய தீர்ப்பு சரியானதாகும்.
ஹெல்மெட் வார் அறுந்தது குறித்து மேத்யூஸ் நடுவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அது குறித்து அவர் நடுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி சக வீரர்களுக்கு சைகை காட்டியிருக்கிறார். நடந்ததை நடுவர்களிடம் விளக்கி அதனை சரி செய்ய நேரம் கேட்டு இருந்தால் அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற அனுமதித்திருக்கக்கூடும். அத்துடன் டைம்டு அவுட்டுக்கான சாத்தியக்கூற்றில் இருந்தும் தப்பித்து இருக்கலாம்.
பேட்டிங் செய்வதில் ஏற்பட்ட காலதாமத நேரத்தை நிறுத்தி வைக்கும்படி மேத்யூஸ் கேட்காததாலும், 2 நிமிடம் கடந்து விட்டதாக எதிரணியால் அப்பீல் செய்யப்பட்டதாலும் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது சரியானதாகும். நடுவர்கள் ஆட்ட விதிமுறையின்படியே நடவடிக்கை எடுத்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல்-ஹக் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.
- 24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டியில் ஆடி 22 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஆமதாபாத்:
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. நடப்பு தொடரில் 8 விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் முந்தைய ஆட்டத்தில் 6.3 ஓவர்கள் பந்து வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் உல்-ஹக் சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டியில் ஆடி 22 விக்கெட்டும், 27 இருபது ஓவர் போட்டியில் ஆடி 34 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
- ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர்.
- டெண்டுல்கரின் இந்த சாதனையையும் விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்த உலக கோப்பையில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.
நெதர்லாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த உலக கோப்பையில் அவர் 5-வது அரைசதம் எடுத்தார். 2 செஞ்சூரியும் அடித்து இருந்தார்.
விராட்கோலி 7-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் டெண்டுல்கர், சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) சாதனையை கோலி சமன் செய்தார். டெண்டுல்கர் 2003 உலக கோப்பையிலும் (1 சதம் + 6 அரைசதம்), சகீப்-அல்-ஹசன் 2019 உலக கோப்பையிலும் (2 சதம் + 5 அரைசதம்) 7 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 50 ரன்னுக்கு மேல் எடுத்தால் கோலி புதிய சாதனை படைப்பார்.
மேலும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் இருந்து குயின்டன் டி காக்கையும் (தென்ஆப்பி ரிக்கா) கோலி முந்தினார்.
அவர் 9 ஆட்டங்களில் 594 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் இல்லை என்பதால் சராசரி 99 ஆகும். குயின்டன் டி காக் 4 சதத்துடன் 591 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ரச்சின் ரவீந்திரா 565 ரன்னும், ரோகித்சர்மா 503 ரன்னும் எடுத்துள்ளார்.
ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர். அவர் 2003 உலக கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார். டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 80 ரன் தேவை. இதேபோல டி காக்கும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் உள்ளார்.
- இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஷ்ரேயஸ் அய்யர், கேஎல் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 2-வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. கொலின் அக்கர்மேன்- மேக்ஸ் ஓ டவுட் நிதானமாக விளையாடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அக்கர்மேன் 35 ரன்னிலும் மேக்ஸ் ஓ டவுட் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.India won by 160 runs
- 2015ல் டி வில்லியர்ஸ் அடித்த 58 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
- 2019ல் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது
இந்தியாவில் அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் இதுவரை இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் ரசிகர்கள் உற்சாகம் அடையும் அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி, நவம்பர் 19 அன்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதுவரை பேட்டிங்க், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்தியா கோப்பையை வெல்வது எளிது என நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டிகளை கண்டு வருகின்றனர்.
இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
நவம்பர் 12 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து நெதர்லாந்திற்கு 411 என இலக்கு நிர்ணயித்தனர்.
இதில் களமிறங்கிய இந்திய கேப்டனும் முன்னணி வீரருமான ரோகித் சர்மா, 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
தனது 61 ரன் குவிப்பின் போது ரோகித் சர்மா 2 சாதனைகளை நிகழ்த்தினார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருட காலகட்டத்தில் ஒரு வீரர் அடிக்கும் சிக்சர்களுக்கான கணக்கெடுப்பில், ரோகித், இதுவரை 60 சிக்சர்களை அடித்துள்ளார். இதுவரை 2015ல் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் அடித்திருந்த 58 சிக்சர்கள்தான் அதிக எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையை முறியடித்தார்.
இது மட்டுமின்றி மற்றொரு சாதனையையும் ரோகித் புரிந்தார்.
ஐசிசி உலக கோப்பைக்கான ஒரு போட்டி தொடரின் போது, ஒரு அணியின் கேப்டன் அடிக்கும் அதிக சிக்சர்கள் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பில், 24 சிக்சர்கள் அடித்து ரோகித் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இயான் மோர்கன் அடித்த 22 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்து வந்தது. ரோகித் அந்த சாதனையையும் முறியடித்தார்.
இந்தியாவிற்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளதால் ரோகித்தின் சிக்சர் கணக்குகளும், அவரது சாதனைகளும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
- கேப்டன் ரோகித் சர்மா 61 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.
- ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 61 மற்றும் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 51 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. போட்டி முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை குவித்தது. ஷ்ரேயஸ் அய்யர் 128 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 102 ரன்களை குவித்தார். நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார்
- 2008ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி ஏலத்தில் தேர்வானார்
இந்தியாவில், அக்டோபர் 5 அன்று தொடங்கிய ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டித்தொடரில், தற்போது நடைபெறுவது 13-வது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இன்று கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் முக்கியமான போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், விராட் கோலி அடித்த 49 சதங்களை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அந்த அரங்கிற்கு செல்லும் வழி நெடுக கோலியின் முதல் சதத்தில் இருந்து அவரது 49-வது சதங்களையும் குறிப்பிடும் விதமாக 49 கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், விராட் கோலி.
கடந்த 2008ல், ஐ.பி.எல். (IPL) 20 ஓவர்கள் போட்டிக்கான அணிகளில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இவர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கோலிக்கு கர்நாடகாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Karnataka: ICC Men's Cricket World Cup | Ahead of India Vs Netherlands, 49 cut-outs of Indian cricketer Virat Kohli showing his 49 centuries, put up at M Chinnaswamy Stadium in Bengaluru. pic.twitter.com/ixA4dy2J6n
— ANI (@ANI) November 12, 2023
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
- பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
- தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
- ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக , வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூறிய அவர், தனது குழந்தைகளும் தீபாவளி வாழ்த்து கூறுவதை பதிவிட்டுள்ளார்.






