search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி
    X

    டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி

    • ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர்.
    • டெண்டுல்கரின் இந்த சாதனையையும் விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்த உலக கோப்பையில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.

    நெதர்லாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த உலக கோப்பையில் அவர் 5-வது அரைசதம் எடுத்தார். 2 செஞ்சூரியும் அடித்து இருந்தார்.

    விராட்கோலி 7-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் டெண்டுல்கர், சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) சாதனையை கோலி சமன் செய்தார். டெண்டுல்கர் 2003 உலக கோப்பையிலும் (1 சதம் + 6 அரைசதம்), சகீப்-அல்-ஹசன் 2019 உலக கோப்பையிலும் (2 சதம் + 5 அரைசதம்) 7 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.

    நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 50 ரன்னுக்கு மேல் எடுத்தால் கோலி புதிய சாதனை படைப்பார்.

    மேலும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் இருந்து குயின்டன் டி காக்கையும் (தென்ஆப்பி ரிக்கா) கோலி முந்தினார்.

    அவர் 9 ஆட்டங்களில் 594 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 போட்டியில் அவுட் இல்லை என்பதால் சராசரி 99 ஆகும். குயின்டன் டி காக் 4 சதத்துடன் 591 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ரச்சின் ரவீந்திரா 565 ரன்னும், ரோகித்சர்மா 503 ரன்னும் எடுத்துள்ளார்.

    ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தது சாதனை படைத்தவர் டெண்டுல்கர். அவர் 2003 உலக கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார். டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட்கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 80 ரன் தேவை. இதேபோல டி காக்கும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் உள்ளார்.

    Next Story
    ×