என் மலர்
புதுச்சேரி
ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ஒரு சில சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே தண்டவாளம் சீரமைப்பு மற்றும் பேக்கிங் எந்திரம் மூலம் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் பயனின்றி கிடக்கும் தண்டவாளங்களை அகற்றும் பணியும் நடக்கிறது. ரெயில் போக்குவரத்து முழுமையாக தொடங்குவதற்குள் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகம் நகரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது58) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பாப்பாத்தி.
இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் தற்போது தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
இந்தநிலையில் மது குடித்துவிட்டு வந்த அர்ச்சுனனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவி வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் மன வருத்தம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று வீடு திரும்பிய பாப்பாத்தி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அர்ச்சுனன் மகன் அருள்பிரசாத் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பேடி 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டு இருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.கவர்னர் மாளிகை புகார் பெறும் அலுவலகம் அல்ல.
அவர் எந்த புகாரை பெற்றாலும் முதல்- அமைச்சர் வழியாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை அல்ல. அவர் விசாரணை அதிகாரியும் அல்ல. புகார்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை.
கவர்னர் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயகத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயல்படுகிறார். மக்கள் மத்தியில் தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
அவர் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். தனிப்பட்ட முறையில் அவருக்கு புகார் பெற அதிகாரம் இல்லாத நிலையில் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளேன் என்பது நம்ப முடியாதது.
அரசியலமைப்பு சட்டத்தையோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையோ அவர் மதிப்பது கிடையாது. பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்.
புதுவை மக்களின் வளர்ச்சிக்கு கவர்னர் எதுவும் செய்யவில்லை. திட்டங்களை தடுத்து நிறுத்தியதுதான் அவரது சாதனை. தொடர்ந்து புதுவை மக்களுக்கு அவர் துரோகம் செய்து வருகிறார். இவரால் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி மூன்று மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதத்துடன் பட்ஜெட் தொகை செலவிடப்பட்டுவிடும். அடுத்த மாதத்துக்கான அரசின் செலவினத்துக்கு புதிதாக பட்ஜெட் போட வேண்டும். இதற்காக புதுவை சட்டசபை விரைவில் கூட உள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டு உள்ளார். அந்த கடிதத்தில் பட்ஜெட், வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.
பாகூர்:
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது24). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான பரணிக்கும், சண்முகா நகரை சேர்ந்த அன்பு, சந்தோஷ் ஆகியோர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அன்பு மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மோகனை வழிமறித்து நீ எப்படி பரணியுடன் பழகலாம்? என கூறி தகராறு செய்தனர்.
மேலும் கையில் வைத்திருந்த கத்தியால் மோகனை வெட்டினார்கள். மேலும் தொடர்ந்து பரணியுடன் பழகினால் கொலை செய்து விடுவோம் என்று மீண்டும் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர்.
இதனை பார்த்து பயந்து போன மோகன் அலறல் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே அன்புவும், சந்தோசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மோகன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பு, சந்தோஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
புதுவையில் கடந்த தை மாதம் அறுவடை செய்யப்பட்ட சம்பா பருவத்திற்கு பிறகு சொர்ணவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகினர்.
110 முதல் 120 நாட்கள் வளரக்கூடிய நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்தனர். நெல் செழித்து வளர தொடங்கியபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும், விவசாய பணிகளுக்கு மத்திய அரசு தளர்வு அளித்ததால் உரமிடுதல், களை எடுத்தல் பணிகளை முடித்து தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.
புதுவையில் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், நெட்டப்பாக்கம், ஏம்பலத்தில் நெல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால், நெல்லை விற்க சென்றால் கடந்த ஆண்டு ரூ.1300 வரை விலைபோன மூட்டைக்கு ரூ.900 முதல் ரூ.ஆயிரம் வரையே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் முத்துப்பிள்ளை தோட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மூர்த்தி அவருடைய மனைவி- 2 மகள்களுடன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் மகள்கள் மூர்த்தியை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
இதனால் மன வருத்தம் அடைந்த மூர்த்தி முத்துப்பிள்ளை தோட்டத்தில் உள்ள தனது தம்பி அய்யப்பனுடன் 6 மாதமாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மூர்த்தி மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தினமும் குடித்து விட்டு சோகமாக இருந்தார்.
மேலும் அவருக்கு உடல் நலக் குறைபாடும் இருப்பதால் மன வேதனையில் இருந்த அவர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.
காலையில் அவருடைய தம்பி மனைவி எழுந்து பார்த்த போது வீட்டு பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் மூர்த்தி வேட்டியால் தூக்குபோட்டு தொங்கினார்.
பின்னர் இது குறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று புதியதாக கொரோனா வந்த 4 பேரில் ஒருவர் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர். கொம்பாக்கத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 38 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரும், சென்னையில் புதுவை சேர்ந்த ஒருவரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இதனால் புதுவையில் கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
புதுவையின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக கடற்கரை சாலை உள்ளது.
கடற்கரை சாலையில் காலையும், மாலையும் ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம். மேலும், குடும்பம் குடும்பமாக புதுவை மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளும் கடற்கரை சாலையில் கூடுவர்.
இதையடுத்து கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி புதுவையில் கடற்கரை சாலை மூடப்பட்டது. மேலும் கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் நடைபயிற்சிக்கு வர முடியாதவர்கள் வீட்டு அருகில் வீதியிலும், மொட்டை மாடியிலும் நடைபயிற்சி செய்தனர். ஊரடங்கால் மக்கள் வீதியில் நடக்கவே தடை விதிக்கப்பட்டு பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கின் 5-வது கட்ட அறிவிப்பில் புதுவை கடற்கரை சாலையின் தடை நீக்கப்பட்டது. 75 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கடற்கரை சாலையையொட்டி போடப்பட்ட தடுப்புகள் அதிகாலை அகற்றப்பட்டன.
இதனையடுத்து நடைபயிற்சிக்கு மக்கள் வந்தனர்.இருப்பினும் வழக்கம் போல் பெருமளவிலான மக்கள் நடை பயிற்சிக்கு வரவில்லை. குறைந்த அளவில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தனர்.
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாகவே புதுவை அரசு கடற்கரை சாலையை மூடி சமூக பரவலுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என நடைபயிற்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரவை கூட்டம் இந்தநிலையில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து புதுவையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நேற்று மாலை கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் சுர்பீர்சிங், பிரசாந்த் குமார் பாண்டா, ஜூலியட் புஷ்பா, கலெக்டர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஏற்கனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைகளின் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதன்படி வரும் 8-ந் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
அதேபோல் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களை பார்சலில் மட்டுமே தர வேண்டும். ஆனால் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு வரும் 8-ந்தேதி முதல் பொதுமக்கள் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம். வணிக வளாகமும் அன்றைய தினம் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது. நாங்களும் கல்வியாளர்களின் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். புதுச்சேரியில் விமான சேவைகளை தொடங்கவும் அனுமதி அளிப்போம்.
புதுச்சேரி கடற்கரை பூங்காக்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும். சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், மது பார்களை திறக்க அனுமதி இல்லை. மாநிலங்களுக்கிடையே மக்கள் தடையின்றி செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் நாம் எல்லைப் பகுதியை தற்போது கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய தேவையின்றி பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், தொழிற்சாலை பணிகள், விவசாய பணிக்காக புதுச்சேரிக்கு வரலாம். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டருடன் புதுச்சேரி கலெக்டர் ஆலோசனை நடத்தி விதிமுறைகளை வகுப்பார். அந்த மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க மருத்துவக் குழுக்களை நியமித்துள்ளோம். புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்கலாம். தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களை கொண்டு பணி செய்யலாம். அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணி செய்யலாம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.






