search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்
    X
    நெல்

    நெல் கொள்முதல் விலை குறைவு- புதுவை விவசாயிகள் வேதனை

    நெல் கொள்முதல் விலை குறைந்த விலைக்கே கேட்கப்படுவதால் புதுவை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த தை மாதம் அறுவடை செய்யப்பட்ட சம்பா பருவத்திற்கு பிறகு சொர்ணவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகினர்.

    110 முதல் 120 நாட்கள் வளரக்கூடிய நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்தனர். நெல் செழித்து வளர தொடங்கியபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனாலும், விவசாய பணிகளுக்கு மத்திய அரசு தளர்வு அளித்ததால் உரமிடுதல், களை எடுத்தல் பணிகளை முடித்து தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    புதுவையில் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், நெட்டப்பாக்கம், ஏம்பலத்தில் நெல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால், நெல்லை விற்க சென்றால் கடந்த ஆண்டு ரூ.1300 வரை விலைபோன மூட்டைக்கு ரூ.900 முதல் ரூ.ஆயிரம் வரையே விலை கேட்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    Next Story
    ×