என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோய் தொற்று பரிசோதனை
    X
    கொரோனா நோய் தொற்று பரிசோதனை

    புதுவையில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று

    புதுவையில் கணவன்-மனைவி உள்பட இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று புதியதாக கொரோனா வந்த 4 பேரில் ஒருவர் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர். கொம்பாக்கத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.

    இதனால் புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 38 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரும், சென்னையில் புதுவை சேர்ந்த ஒருவரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.இதனால் புதுவையில் கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.



    Next Story
    ×