என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    அரியாங்குப்பத்தில் கார் டிரைவருக்கு கத்திக்குத்து- 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

    அரியாங்குப்பத்தில் கார் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது24). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான பரணிக்கும், சண்முகா நகரை சேர்ந்த அன்பு, சந்தோஷ் ஆகியோர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அன்பு மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் மோகனை வழிமறித்து நீ எப்படி பரணியுடன் பழகலாம்? என கூறி தகராறு செய்தனர்.

    மேலும் கையில் வைத்திருந்த கத்தியால் மோகனை வெட்டினார்கள். மேலும் தொடர்ந்து பரணியுடன் பழகினால் கொலை செய்து விடுவோம் என்று மீண்டும் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

    இதனை பார்த்து பயந்து போன மோகன் அலறல் சத்தம் போட்டார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே அன்புவும், சந்தோசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மோகன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பு, சந்தோஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×