என் மலர்
புதுச்சேரி
மண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜனதா முதல்- அமைச்சர் என கோஷமிட்டு வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி. அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளரான இவர் தனது பிறந்தநாளை மண்ணாடிப்பட்டு பகுதியில் கொண்டாடினார். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார்.
அப்போது விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை, அவரது ஆதரவாளர்கள் வருங்கால முதல்- அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் தாமரை ஆட்சி மலரும், பா.ஜனதா முதல்- அமைச்சர் வேட்பாளர் வாழ்க என கோஷமிட்டு வரவேற்றனர். மேலும் சிலர் அமைச்சருக்கு பா.ஜனதா கட்சி காவி துண்டு அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதுமட்டுமன்றி, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட பேனர்களில் அமைச்சர் நமச்சிவாயத்தின் படத்தை தவிர, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாருடைய படமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராகுல் (வயது 20) காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் புதுவைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.66 ஆயிரத்தை எடுத்து மொபட்டில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அவர் சாரம் வேலன் நகர் அருகே போகும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் அவரது மொபட் மீது மோதியது. இதில் ராகுல் நிலை தவறி கீழே விழுந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவன், அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் ராகுல் அதை தடுத்துவிட்டார். அப்போது மற்றொருவன் மொபட்டின் சாவியை எடுத்து இருக்கையின் கீழ் பகுதியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.66 ஆயிரத்தை எடுத்து சென்றுவிட்டான்.
இது குறித்து ராகுல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். கல்லூரி மாணவர் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, மர்மநபர்கள் பணத்தை பறித்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
புதுவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சுகாதாரத்துடன் செயல்படுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றி வந்தோம். தற்போது இவற்றுடன் சேர்த்து நோய்த்தடுப்பூசி செயல்முறையை நோக்கி நகர்கிறோம்.
முதல்கட்டமாக 21 ஆயிரத்து 820 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் 2-ம் கட்டத்தில் காவல்துறையினர், வருவாய் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு போடப்படும். இந்த தடுப்பூசியை புதுச்சேரி மக்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தடுப்பூசி போடப்படும்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கவனிக்கிறோம். இதுதொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி அழைப்பு வழியாக உங்களுக்கு நமது சுகாதாரத்துறையில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அழைப்பு வரும். அவ்வாறு அழைப்பு வராதவர்கள் அழைப்பு வரும்வரை காத்திருக்கவும். சுகாதாரத்துறை மூலமாக வெளிவரும் செய்திகளை தொடர்ந்து கவனித்து வரவும்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
சென்னை, காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து பிடிக்கவேண்டும் என மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் தலைமையில், நகர போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ள விக்ரம் சாரா பாய் சாலையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதனை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அதிரடிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் நாகை மாவட்டம் சம்மந்தன்பேட்டை அமிர்தாநகரை சேர்ந்த கலைவாணன் மகன் கலைக்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது.
இவர் காரைக்காலில் 4 மோட்டார் சைக்கிள்கள், சென்னை மெரினா கடற்கரையில் 10 மோட்டார் சைக்கிள்கள் திருடியதாகவும், அந்த மோட்டார் சைக்கிள்களை நாகை, நாகூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்றதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கலைக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின்பேரில் அவரது வீட்டிலும், அவர் அடையாளம் காட்டிய நபர்களிடம் இருந்தும் 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.
திருட்டு வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காரைக்கால் போலீசாரை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் பாராட்டினார்.
புதுவை மாநிலம் பாகூர் அருகே மதுகுடித்த இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் லாரி உரிமையாளர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் சாவடி அய்யா நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மகன் மனோஜ் நந்தன் (வயது 30), லாரி உரிமையாளர். நேற்று காணும் பொங்கலையொட்டி அவர் தனது நண்பர்கள் கார்த்தி, பிரதாப் உள்ளிட்ட 5 பேருடன் புதுவை மாநிலம் பாகூர் அருகே சோரியாங்குப்பம் மதுக்கடைக்கு வந்தார். அங்கு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு கடையின் பின்புறமுள்ள காலிமனையில் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது அவர்களுக்கு அருகில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக அமர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனை மனோஜ்நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர்.
அப்போது, ரகளையில் ஈடுபட்ட கோஷ்டிக்கும், மனோஜ் நந்தன் கோஷ்டிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதல் உருவானது.
இதில் ஆத்திரமடைந்த எதிர் கோஷ்டியினர் அருகில் கிடந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களை வீசி மனோஜ்நந்தன் தரப்பினரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ்நந்தன், அவரது நண்பர் கார்த்தியை வெட்டினர்.
இதில் மனோஜ்நந்தனுக்கு மார்பு, முதுகு பகுதியிலும், கார்த்திக்கு உடலில் சில இடங்களிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த மோதலின்போது மனோஜ்நந்தனின் மற்ற நண்பர்களும் ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் சரிந்து விழுந்த மனோஜ்நந்தன் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து கத்திவெட்டில் காயமடைந்த இடத்தை சட்டையால் கட்டிக்கொண்டு, அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக குருவிநத்தம் நோக்கி புறப்பட்டார்.
அப்போது அங்குள்ள பால் சொசைட்டி அருகில் மனோஜ்நந்தா மயங்கி விழுந்தார். இதை அறிந்து அங்கு வந்த அவரது நண்பர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மனோஜ்நந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் கத்தி வெட்டில் காயமடைந்த கார்த்தி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொலை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட உள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கடலூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர்கள் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். இந்த நிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.
அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியது. இதையடுத்து இவ்விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார். இவர் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்தவர்.
சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2ஆக குறைந்துள்ளது.

பொங்கல் பண்டிகையிலும் நீடித்த அமைச்சர் கந்தசாமியின் தர்ணா நேற்று 6-வது நாளாக நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறையின் கீழ் வரும் 15 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கடந்த 10-ந்தேதி இரவு முதல் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
தனது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க நேரம் ஒதுக்கி தருமாறு அவர் கவர்னர் கிரண்பெடிக்கும் கடிதம் அனுப்பினார். அதற்கு பதில் அளித்த கவர்னர் கிரண்பெடி சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுடன் கேட்டு விவாதிப்பதற்கான தேதியும், நேரத்தையும் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை தொடர்ந்தார்.
பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினமும் அவர் சட்டசபை வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். நேற்று அவரது போராட்டம் 6-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே கோரிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் பேசுவார் என்று மற்றொரு கடிதத்தையும் கவர்னர் கிரண்பெடி அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறும்போது, கவர்னர் கோப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கலாம். அவர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி என்று தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
புதுச்சேரி:
திருவள்ளுவர் தினவிழா புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவையில் தி.மு.க.வின் நிலை குறித்து அறிந்துகொள்ள இந்த முறை எப்போதும் இல்லாத வகையில் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைய நேரம் ஒதுக்கி கருத்துகளை முழுமையாக கேட்டார். கழக மேலிட பொறுப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நியமித்துள்ளார். அவர் வருகிற 18-ந்தேதி புதுவை வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.
பின்னர் காலாப்பட்டில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். அன்றைய தினம் கழகத்தினர் அண்ணா சிலைக்கு வந்து அங்கிருந்து ஊர்வலமாக காலாப்பட்டிற்கு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியில் இருந்து 300 வாகனங்களில் கட்சியினர் வந்து பங்கேற்க வேண்டும். குறைந்தது 10 ஆயிரம் பேரையாவது நாம் திரட்ட வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமைய உள்ளது. தி.மு.க.விடம் எந்த கட்சி வந்தாலும் தி.மு.க.தான் தலைமை தாங்கும். முன்பு நம்மைப்பற்றி நினைக்காதவர்கள்கூட தற்போது நம்மிடம் பேசி வருகின்றனர். தி.மு.க.வின் கூட்டணிக்காக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து அண்ணா அறிவாலய கதவை தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களின் எண்ணப்படி தி.மு.க.வும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் 100 சதவீதம் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை தாண்டி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத்தான் ஆட்சி அதிகாரத்தில் முழு உரிமை இருக்கவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. 2 மாதத்தில் புதுவையில் புதிய ஆட்சி அமையும். அதன்பிறகு மாநிலத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 30-ந்தேதி புதுவைக்கு வருகிறார். அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், வேட்பாளராக களம் காண நினைப்பவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு வழங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
புதுவையில் காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் கவர்னருக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது.
பா.ஜனதா மாநிலம் முழுவதும் தாமரை யாத்திரை நடத்தி முடித்துள்ளது. 2-ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து வரும் 19-ந்தேதி 30 தொகுதியிலும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பின்னர் ஒரு வாரத்திற்கு தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம், பூத் நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.
வருகிற 30-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுவைக்கு வருகிறார். அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர். ஓய்வுபெற்ற கல்வியாளர்களும் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.
பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா புதுவைக்கு வருகிறார். அப்போது முதல்- அமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். பா.ஜனதாவின் அதிரடி அரசியலால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் என்ற புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள்) பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் காப்பீட்டுக்கான பிரீமியத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் செலுத்துகிறது. இதன்படி புதுவையில் உள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளன. இதற்கான ஒப்புதலை கவர்னர் கிரண்பேடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் முதன்மை திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன ஆரோக்கியா யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒருங்கிணைக்க ஒப்புதல் அளித்துள்ளார். புதியதாக ஒன்று சேர்க்கப்பட்ட திட்டத்தின்படி புதுவை யூனியன் பிரதேசத்தின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் இப்போது ரொக்கமில்லா சிறப்பு சிகிச்சை (வருடத்துக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை) பெற முடியும்.
தனியார் மருத்துவமனைகளில் சிவப்பு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை சமர்ப்பித்தால் அரசு நேரடியாக மருத்துவமனை செலவை செலுத்த முடியும். தற்போது யூனியன் பிரதேச திட்டத்தின்கீழ் நோயாளிகள் ரூ.3.25 லட்சம் வரை மட்டுமே பெற முடியும். அதுவும் திருப்பி செலுத்துதல் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (அதாவது நோயாளிகள் மருத்துவமனை கட்டணங்களை செலுத்தி அதன்பின்னர் பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிக்க வேண்டும்).
பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 1.75 லட்சம் ேரஷன் கார்டு தாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு செய்யும் கோப்பினை முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி உள்ளார். இந்த கோப்பிற்கும் அவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் மஞ்சள்கார்டுதாரர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அவ்வாறு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் சுமார் 1.75 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

பரபரப்பான சூழ்நிலையில் புதுவை சட்டசபை 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) கூடுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமன்றமானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்படவேண்டும். தற்போது 6 மாதம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இந்தநிலையில் 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) மீண்டும் சட்டசபை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
புதுவை அரசியலில் பரபரப்பு அதிகமாக உள்ள சூழ்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. ஏனெனில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சரான நமச்சிவாயமும் விரைவில் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக்கு தற்போது ஆதரவு அளித்து வரும் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுவை சட்டசபை கூட உள்ளது.
நெட்டப்பாக்கம் அருகே கல்லூரி சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் புது காலணியை சேர்ந்தவர் முருகன். கரும்பு வெட்டும் மேஸ்திரி. இவரது மனைவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மகள் சுபலட்சுமி. (வயது 19). இவர் லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை சுபலட்சுமி கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.
இதையடுத்து முருகன் தனது மகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.