என் மலர்
செய்திகள்

அமைச்சர் கந்தசாமி
பொங்கல் பண்டிகையிலும் நீடித்தது- அமைச்சர் கந்தசாமி 6-வது நாளாக தர்ணா
பொங்கல் பண்டிகையிலும் நீடித்த அமைச்சர் கந்தசாமியின் தர்ணா நேற்று 6-வது நாளாக நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறையின் கீழ் வரும் 15 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கடந்த 10-ந்தேதி இரவு முதல் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
தனது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க நேரம் ஒதுக்கி தருமாறு அவர் கவர்னர் கிரண்பெடிக்கும் கடிதம் அனுப்பினார். அதற்கு பதில் அளித்த கவர்னர் கிரண்பெடி சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுடன் கேட்டு விவாதிப்பதற்கான தேதியும், நேரத்தையும் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து அமைச்சர் கந்தசாமி தனது போராட்டத்தை தொடர்ந்தார்.
பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினமும் அவர் சட்டசபை வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். நேற்று அவரது போராட்டம் 6-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே கோரிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் பேசுவார் என்று மற்றொரு கடிதத்தையும் கவர்னர் கிரண்பெடி அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறும்போது, கவர்னர் கோப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கலாம். அவர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

Next Story