என் மலர்
புதுச்சேரி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
புதுச்சேரி:
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநில தேர்தலுடன் புதுவை சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி கூட்டணி ஆட்சியை உருவாக்க பா.ஜனதா பல்வேறு வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவையின் 30 தொகுதிக்கும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாகவே சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. காங்கிரஸ் அரசை கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை பா.ஜனதா நடத்தி வருகிறது.
அதோடு பிற கட்சிகளில் செல்வாக்குள்ள வேட்பாளர் கர்நாடக மாநில பிரதிநிதிகளை தங்கள் கட்சியின் பக்கம் இழுப்பதிலும் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர். புதுவையின் பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரசில் உள்ள அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பா.ஜனதா வியூகம் அமைத்துள்ளது. ஒரு அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
மறுநாள் (30-ந்தேதி) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பா.ஜனதாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரை ஆற்றுகிறார். இதில் காங்கிரசை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.
30-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு 2 நாட்கள் முகாமிடுகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மாதம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெறுகிறது. இது, சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சட்டசபை கேபினட் அறையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் போக்குவரத்து விழாவினை தொடங்கிவைத்தார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த குறுந்தகட்டையும் (சி.டி.) வெளியிட்டார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. சாலை விதிகளை கடைபிடிக்காதது, தகுந்த பயிற்சியின்றி வாகனம் ஓட்டுவது போன்றவற்றினால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.
புதுவையில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இதில் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக சிக்னல்களில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் வாகனங்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது.
காலை வேளைகளில் வழுதாவூர், கிருமாம்பாக்கம், மதகடிப்பட்டு பகுதிகளில் இருந்து அதிக அளவில் வாகனங்களில் மக்கள் வேலை, அலுவலக பணிகள், பள்ளி, கல்லூரிகளுக்காக நகரப்பகுதிக்கு வருகின்றனர். அந்த சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் வரை அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். நமது போலீசாரும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 95 ஆக குறைந்துள்ளது. இது இன்னும் குறைக்கப்பட வேண்டும். புதுவை மக்கள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதிவேகமாக செல்பவர்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இளைஞர்களும், மாணவர்களும் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஸ்ணியா, ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போ க்குவரத்துத்துறை செயலாளர் அசோக்குமார், ஆணையர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சார்பு நிறுவனமான அரசு போக்குவரத்துக்கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகர், கிராமப்புற பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
புதுவையிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூரு, நாகர்கோவில், குமுளி, கடலூர், விழுப்புரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்துக்கழக பஸ் வழித்தடங்களை தனியார் மயமாக்குவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தி தனியாருக்கு வழித்தடங்கள் வழங்கப்படாது என உறுதியளித்தார். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த மாதம் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுவையில் ஓடும் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. வெளியூர் களுக்கு நிரந்தர தொழிலாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.
ஒரு சில நாட்கள் நடந்த போராட்டத்துக்கு பிறகு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பஸ்கள் இயங்க தொடங்கியது. ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்தனர்.
நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர். நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அங்கு வாயிலை அடைத்து அமர்ந்தனர். இதனால் பஸ்கள் வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. போராட்டத்தில் நிரந்தர ஊழியர்கள் பங்கேற்காவிட்டாலும் பஸ்களை வெளியே கொண்டுசெல்ல முடியாததால் பணிக்கு வந்த ஊழியர்கள் அமைதியாக நின்றிருந்தனர்.
இதனால் புதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

புதுவையில் வருகிற 25-ந் தேதி பள்ளி மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பேடி உரையாடல் நிகழ்த்த உள்ளார்.
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடி நேற்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகளிடம் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது கவர்னர் அளித்த உத்தரவின் பேரில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களிடம் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம், கல்வி சம்பந்தமான மட்டுமல்ல நிர்வாக திறமையை வளர்த்துக்கொள்வதோடு, மாணவர்களுக்கு அவர்களும் ஒரு வகுப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறும்போது:-
ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறையையும், அவர்கள் சரிவர பாடம் கற்பிக்கிறார்களா என கூர்ந்து கவனித்திட வேண்டும். பள்ளிகளை நல்ல முறையில் இயக்குவதை உறுதி செய்திட வேண்டும். மாணவர்கள் பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்களின் நிலைப்பற்றி ஆராய்ந்து பெற்றோர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும்.
எதிர்கால படிப்புகள் குறித்து தெளிவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு, எந்த படிப்புகளை படிக்கலாம் என விளக்கி வழிகாட்டி தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். அவர்களை அதற்கான போட்டி தேர்வு உள்பட அனைத்திற்கும் தயார் செய்திடவும், படித்து உயர் நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களின் உதவியை நாட வேண்டும். பள்ளி நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு அன்றாட செய்தி தாளின் மூலம் பொது அறிவை உண்டாக்குதல் மற்றும் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
கல்வி சாராத கலை, ஓவியம், கைவினை, விளையாட்டு மற்றும் இசை போன்ற பயனுள்ள செயல்பாடுகளை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தனித்திறன் ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க வேண்டும். பள்ளியில் பயன்பாடற்று, வினியோகப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கும் பாடநூல்கள், குறிப்பேடுகள், சைக்கிள்கள், சீருடைகள் போன்றவற்றை ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.
தேசிய மாணவர் படையிலும், தேசிய சேவை திட்டத்திலும் சேர்ந்துள்ள மாணவர்கள் முதலில் தங்கள் பள்ளிகளிலேயே ஒழுக்கம், கட்டுப்பாடு சேவை மற்றும் தூய்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். குடியரசு தினத்தையொட்டி வருகிற 25-ந் தேதி காலை கவர்னர் கிரண்பேடி அரசு பள்ளி மாணவர்களுடன் ‘பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச்செய்தல்’ என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கந்தசாமியை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் நடுரோட்டில் அமர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தனது துறை தொடர்பான கோப்புகள் குறித்து பேச கவர்னர் கிரண்பேடி நேரம் ஒதுக்கி தராததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் இருந்து அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருடன் புறப்பட்டார். வர்த்தக சபை வழியாக அவர்கள் நடந்தே வந்தனர். குபேர் சிலை அருகே வந்தபோது போலீசாரும், துணை ராணுவப்படையினரும் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். அமைச்சரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் வந்தவர்கள் போலீஸ், துணை ராணுவப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளையும் தள்ளிவிட்டதை தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் இறங்கினர்.
மோதலில் ஈடுபட்டவர்களை நாராயணசாமி சமரசப்படுத்தினார். இதன்பின் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து நடுரோட்டில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து காங்கிரசார் திரண்டு வந்து சேர்ந்து கொண்டனர்.
அங்கு கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கவர்னரே திரும்பிப் போ என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். மாலை 4 மணியளவில் அங்கு போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது முதலமைச்சர் நாராயணசாமியை மட்டும் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். கவர்னர் மாளிகை முன்பு சென்ற நாராயணசாமி அமைச்சர் கந்தசாமியை சந்தித்துப் பேசினார்.
காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் நேருநகர் விரிவாக்கத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழக பகுதியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத் தில் செல்வம் புகார் செய் தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் சாவடி அய்யாநகரை சேர்ந்தவர் மனோஜ்நந்தன் (வயது 30). லாரி உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி, தனது நண்பர்கள் கார்த்தி, பிரதாப் ஆகியோருடன் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள காலிமனையில் அமர்ந்து மது குடித்தார்.
அப்போது அவர்களுக்கு அருகில் ஒரு கும்பல் மது அருந்திய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தனர். இதனை மனோஜ் நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர். ரகளையில் ஈடுபட்ட கும்பலுக்கும், மனோஜ்நந்தன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மனோஜ்நந்தன், கார்த்தி, பிரதாப் ஆகியோரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மனோஜ்நந்தன் உயிரிழந்தார். காயமடைந்த கார்த்தி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடலூர் கே.என்.பேட்டை சத்தியசாய் நகர் ராஜ் என்கிற ராஜேஷ் (24) தலைமையிலான கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான திருவந்திபுரம் சாலக்கரை ரஞ்சித்குமார் (22), அரிசி பெரியாங்குப்பம் வினித்குமார் (23), கே.என்.பேட்டை தன்ராஜ் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 4 பேரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது தமிழகத்தில் கொலை, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது:
23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் என்ன செய்ய முடியாது? ஏன் செய்ய முடியாது? தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. என்ன வருவாய் வருகிறது. வருவாய்க்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள். வேலை வாய்ப்பு இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது.
நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன். இந்த மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. புதுச்சேரியை ஒரு புதுமையான, வளமான, உலகத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக இருக்க ஸ்டாலின் தலைமையில், அவருடைய ஆணையோடு திமுக தலைமையில் கூட்டணி அமையும். எந்த இயக்கங்களுடன் கூட்டணி, யாருடன் தேர்தலைச் சந்திப்பது என்பது குறித்து ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்.
நீங்கள் (திமுகவினர்) எனக்கு ஒரு உறுதியைத் தர வேண்டும். ஸ்டாலின் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.
விவாதத்தின்போது, வேளாண் சட்டங்களின் நகல்களை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்திற்காக மக்கள் அல்ல என சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்றது.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1987ம் ஆண்டு முதல் 9 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது 10வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெட்டப்பாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயா (44). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜயா இறந்துவிட்டார். இதையடுத்து மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும், மனைவி இறந்த வேதனையிலும் வேலாயுதம் இருந்துவந்தார்.
சம்பவத்தன்று இரவு மனைவியின் நினைவு வரவே, வேதனையில் மது குடித்துவிட்டு வந்து வீட்டின் பின்புறத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்த அவரது மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக வேலாயுதம் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
அமைச்சர் கந்தசாமி தான் வகிக்கும் துறையின் கீழ் உள்ள 15 கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளிக்கக்கோரி கடந்த 10-ந்தேதி இரவு முதல் சட்டசபை வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவரது போராட்டம் 8-வது நாளாக நீடித்தது.
அமைச்சர் கந்தசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் புதுவை மாநில அனைத்து தலித், பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பழைய சட்டக்கல்லூரி அருகில் செஞ்சிசாலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
புதுவையில் கடந்த 4½ ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் மதசார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எங்கிருந்தோ வந்து புதுவை மக்களை கவர்னர் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். கொரோனாவுக்கு முன்பு அவர் ஒவ்வொரு பகுதியாக சைக்கிளில் சென்று வந்தார். கடந்த 10 மாதமாக கவர்னர் மாளிகையை விட்டு அவர் வெளியே வரவில்லை. ஆனால் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆனால் அவர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நகர பகுதியில் போடப்பட்டுள்ள தடுப்பு கட்டைகள் நாளை (இன்று) நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திற்கு பின் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. விஜயவேணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.