என் மலர்
தேர்தல் செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148 முப்படை உயர் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆயுதப்படைகள், எல்லைதாண்டி சென்று நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் ஏற்க இயலாத, வழக்கத்துக்கு மாறான நடைமுறை நிலவி வருகிறது. ஆயுதப்படைகளை ‘மோடி சேனை’ என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
அவர்களின் அரசியல் செயல் திட்டங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும், விமானி அபிநந்தன் புகைப்படத்தை பிரசாரத்துக்கு உபயோகிக்கிறார்கள். இதற்கு எங்கள் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MilitaryVeterans

புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.
நாடு இதுவரை 16 தேர்தலை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்துள்ளோம். ஆனால் இத்தேர்தல் வித்தியாசமானது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கோஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்கிறோம். நாட்டை பிளவுபடுத்தும், பிரிவுபடுத்தும், சீரழிக்கும் கட்சி ஆட்சியில் உள்ளது.
குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக பா.ஜனதா ஆட்சியில் நம் நாடு சிக்கி தவிக்கிறது. தேசத்தை காப்பாற்ற வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தேர்தல் அமைந்துள்ளது.

மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசினால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசு உள்ளது.
ஆனால் மோடியால் அனுப்பப்பட்ட கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கடும் தொல்லைகளை அளித்து வருகிறார். அவர் டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு குடைச்சல், தொல்லை அளித்து வருகிறார். திட்டங்களை செயல்படுத்த விடாமல் அவர் தடுத்து வருகிறார்.
மோடி ஆட்சி மோசடி ஆட்சி. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலேயே தவறான தகவல்களை அளித்தவர்கள். எனவே இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டியது மக்களின் கடமையாக உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு அரசு பதவிகளை அலங்கரித்த தியாகி வெங்கடசுப்பாரெட்டியார் மகன் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த வெற்றியின் மூலம் மத்தியில் ஆளும் மோடி அரசை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரமுகர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். #Mutharasan #PMModi
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
நாடும் நமதே, நாற்பதும் நமதே. முதலில் ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவுதினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உங்கள் காவலாளி உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி பாதிப்பானது.
வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். காங்கிரஸ் நாட்டை கொள்ளையடிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.
கடந்த 60 ஆண்டுகாலமாக நம் தேசத்திற்கு அநியாயம் செய்தவர்கள் தான் காங்கிரஸ் ஆட்சி. தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் நீதி தருமா? காங்கிரஸ் ஆட்சியில் போபால் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு நியாயம் தருமா?
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

முன்னதாக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் நரேந்திர மோடி என்றும், அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நாடே எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
“தலையில்லாத உடம்பு போன்று காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது. நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கிறார்கள். ஸ்டாலினை தவிர வேறு யாரும், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்சசெல்வம் பேசும்போது, நாட்டில் மதக்கலவரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டினார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக, பாஜக செயல்படுகிறது என்றும், தர்மத்தின் கூட்டணியான நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திருச்சி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசியதாவது:

அப்போதெல்லாம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்கள். தற்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள் . அப்போதெல்லாம் மீனவர்கள் மீன்களை பிடித்தார்கள். தற்போது மீனவர்களையே பிடிக்கிறார்கள். அப்போது வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள் இப்போது கட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மேலும் பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது. விவசாய கடன் கட்ட முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்படாது. பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி அவர்கள், ரபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது. பாஜகவின் சேவகர்களாக அதிமுக உள்ளது. இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள் , ஏழைகள் பற்றி யோசித்தீர்களா? கார்ப்பரேட்களுக்கு தான் மோடி காவலாளி. பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டினையே உதாரணமாக கூறலாம். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில், மதுரை மாநகருக்குள் நுழையமுடியாமல் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை நகரில் அதிகாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுவே தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு முன் உதாரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் என்னை திட்டி பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேசவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான கூட்டணி. ஆனால் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைத்துள்ளது. தி.மு.க மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்கியதை தடுக்க பல்வேறு முயற்சி செய்தததையே கூறலாம்.
அதேபோல் தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வி கண்டுள்ளனர்.
நான் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும் பகுதி மு.க.ஸ்டாலினால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தூண்டப்பட்டவையாகும்.
இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வுகண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சூழ்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறிய தி.மு.க.வினர் தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்கள் என கூறமுடியுமா?
அதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என கூறி பிரசாரம் செய்துள்ளார்.
தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் எண்ணம் கொண்டவருக்கு நாம் வாக்களிக்கலாமா? தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விரைவில் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் வாழும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித தன்மை அற்ற அந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறோம். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி அரசு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தயாராக உள்ளது.
எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கல்லூரி, 11 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை, புதிய குடிநீர் திட்டம், புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்திடவும், காவிரி உபரி நீரினை கொண்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதற்கான புதிய பாசனத்திட்டத்தினை நிறைவேற்றிடவும், நதி நீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி கோதாவரி ஆற்றினை இணைப்பதன் வாயிலாக தமிழகம் முழுவதும் பாசன வசதி பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
ஆண்டிப்பட்டி:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் வருகிற 18-ந்தேதி 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்தேதி 4 சட்ட சபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதால் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். முதலில் அவர் மதுரையில் பிரசாரம் செய்தார்.
2-வது கட்ட பிரசாரத்தை ஈரோட்டிலும், 3-வது கட்ட பிரசாரத்தை கன்னியாகுமரியிலும், 4-வது கட்ட பிரசாரத்தை சென்னையிலும் பிரதமர் மோடி மேற்கொண்டார். சமீபத்தில் 5-வது கட்டமாக கோவைக்கு வந்து அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இதற்கிடையே பிரதமர் மோடி ஒரு தடவை தமிழகத்துக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க.- பா.ஜனதா தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டார்.
நேற்று மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி நேற்று இரவு கோழிக்கோடு நகரில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தார். மதுரை பசுமலையில் உள்ள விடுதியில் அவர் தங்கினார்.
இன்று காலை 9.55 மணிக்கு பிரதமர் மோடி, ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டார். 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி புறப்பட்டார். 10.50 மணிக்கு மோடியின் ஹெலிகாப்டர் தேனி சென்று அடைந்தது. அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கானாவிலக்கு பகுதிக்கு சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் அவர் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பேசினார்.

அதோடு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களையும் அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான லோகி ராஜன் (ஆண்டிப்பட்டி), மயில்வேல் (பெரியகுளம்) ஆகியோரையும் ஆதரித்து பேசினார்.
கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த மக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக 2 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 15 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் பலர் தேனியில் குவிந்து இருந்தனர். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.
தேனி கூட்டத்தை முடித்ததும் பகல் 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமநாதபுரம் புறப்பட்டார். 12.50 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் ராமநாதபுரம் வந்தடைந்தது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மோடி, அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் டி.பிளாக் அம்மா பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
மதியம் 1 மணிக்கு அவர் பேச்சை தொடங்கினார். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந்திரராஜன் (தூத்துக்குடி), டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே தொண்டர்கள் திரண்டதால், பொதுக்கூட்ட திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோர பகுதியில் 24 மணி நேரமும் கடற்படை, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு செய்தனர். அனைத்து தரப்பினரும் கடும் சோதனைகளுக்கு பிறகே பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கடும் வெயிலில் மக்கள் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்காக ராட்சத பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதுபோல பொதுமக்கள் சிரமம் இல்லாமல் நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மதியம் 1.45 மணிக்கு பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, காரில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு சென்றார். 1.55 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
2.40 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்து சேருகிறார். அங்கிருந்து 2.45 மணிக்கு புறப்படுகிறார். தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மங்களூர் செல்கிறார். #PMModi #BJP #LokSabhaElections2019

அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பா. சிதம்பரம் தேர்தல் குறித்து இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PChidambaram
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்றிவிட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அந்த இலக்கை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா? எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவை திரும்பப் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #RajnathSingh
மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அங்கன்வாடி மையங்கள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பள்ளிகளை மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீவைத்து எரிக்க தடை விதிக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும், ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். ‘தினத்தந்தி’ குழும செய்தியாளர்கள் எஸ்.சலீம், அசோக வர்ஷினி ஆகியோர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டி கண்டனர்.
அப்போது பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?
பதில்:- நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். அது மட்டுமல்லாமல் வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் பணியாற்றும் காவல்துறையினர், இரவு-பகல் பாராது உழைக்கும் விவசாயிகள் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர். இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே. நாட்டு மக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
கேள்வி:- சார்... நீங்கள் தற்போது 69 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... வாழ்க்கை உங்களை எப்படி நடத்துகிறது?
பதில்:- என்னை விட சுகானுபாவர் இல்லை என்றே நான் கூறுவேன். இந்த ஜனநாயக நாட்டில், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பெரும் பணி எனக்கு கிடைத்து உள்ளது. இதனை பாக்கியமாக கருதுகிறேன்.
கேள்வி:- ராகுல் காந்தி என்ற பெயரை கேட்டதும் தங்களின் மனதில் தோன்றுவது அன்பா? வெறுப்பா? அல்லது பகைமையா?
பதில்:- இந்த மூன்றில் எதுவும் இல்லை.
கேள்வி:- உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
பதில்:- நான் குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி மதிப்பீடு செய்ய சொன்னால், நான் சாதாரணமானவன். பா.ஜ.க. அல்லது வேறு கட்சியினருடன் பாகுபாடு இன்றி பழகுபவன்.
கேள்வி:- ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க.வில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே?
பதில்:- ஸ்மிரிதி இரானி அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை.. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை..
கேள்வி:- ராகுல் மட்டுமல்லாது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
பதில்:- இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அது அவர்களது குடும்ப கட்சி. எனவே அதனை காப்பாற்ற குடும்பத்தினர் பாடுபடுகின்றனர். செய்துதானே ஆக வேண்டும்.
கேள்வி:- உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவின் தாக்கம் என்னவாக இருக்கும்?
பதில்:- இதற்கு பதில் நான் முன்னதாக கூறி விட்டேன்.
பா.ஜ.க. வடமாநில கட்சியா?
கேள்வி:- கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?
பதில்:- இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.

பதில்:- இல்லவே இல்லை... குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளோம். இதுபோல் தென்னிந்தியாவில் நாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி:- கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி மக்களவை தேர்தலை எதிர்கொண்டீர்கள். ஆனால் தற்போது தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து கொண்டது ஏன்?
பதில்:- திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 2014-ம் ஆண்டு எங்களது நோக்கம் வேறாக இருந்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். நாங்களும் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம். தற்போது, கூட்டணி வைக்க முடிவு செய்து போட்டியிடுகிறோம். இதற்கு முன்பும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து உள்ளது.
கேள்வி:- மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக்காக தி.மு.க.வை தவிர்த்து, அ.தி.மு.க.வை தேர்வு செய்தது ஏன்?
பதில்:- அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. பாராளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.
கேள்வி:- ஆனால் ஒரு சில கட்சிகள், அ.தி.மு.க.வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே?
பதில்:- அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா.ஜ.க.வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர்.
கேள்வி:- ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி முழக்கமிடும் போது, தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். இதற்கு தங்களின் பதில் என்ன?
பதில்:- தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சிறிய அளவிலான பங்குதாரர் மட்டுமே. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் முடிவடையாது.
கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்குமா? அதன் நிலை என்னவாகும்?
பதில்:- நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது.
கேள்வி:- ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான வரி செலுத்துவதாக, புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனரே?
பதில்:- இதில் உண்மை இல்லை. ஜி.எஸ்.டி வரிக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் (செக்போஸ்ட்) தலா இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, செலவானது. தற்போது அவை நீக்கப்பட்டதும் அத்தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்படுகிறது.
கேள்வி:- அது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக கூறுகின்றனர். சாமானிய மக்களுக்கு இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறதே?
பதில்:- இதில் உண்மை இல்லை. உணவகம் போன்ற இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. சாமான்ய மக்களும் பயன் அடைகின்றனர். இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
கேள்வி:- மத்திய பா.ஜ.க. அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா?
பதில்:- கடந்த 1992-ம் ஆண்டு, மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு, பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்திய முதல் இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது.

கேள்வி:- நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார். இதை, புகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறீர்களா? இல்லை சந்தேகத்தோடு பார்க்கிறீர்களா?
பதில்:- இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. பந்து வீசுவதை போல, அவருடைய சமீபத்திய கருத்து இந்தியாவின் தேர்தலில் தலையீடு செய்வதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, இம்ரான்கான் வீசிய பந்தை எப்படி சிக்சர் அடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் தேர்தலின் போது, நவாஸ் ஷெரீப்பை அவர் எவ்வாறு விமர்சித்தார் என்றும் தெரியும். மோடியின் நண்பர் (நவாஸ் ஷெரீப்) ஒரு துரோகி என்றார்.
கேள்வி:- உங்களுடைய 5 ஆண்டு பணியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? தேர்தலில் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன? குறிப்பாக தமிழகத்திற்கு என்ன செய்வீர்கள்?
பதில்:- கடந்த 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை நிறைவேற்றப்பட்டு விடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய நாங்கள், முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
கேள்வி:- ‘பி.எம். நரேந்திர மோடி’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?
பதில்:- தேர்தல் கமிஷன் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். நான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் பட்சத்தில், இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
கேள்வி:- பிரசார கூட்டங்களில் பாலகோட், புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதற்கு, உங்களிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு உள்ளதே?
பதில்:- தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் இதன் கட்டுப்பாட்டில் அடங்குவர். பா.ஜ.க.விடம் இது குறித்து விளக்கம் கேட்டால் அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும். தேச நலனுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் புகழை பேசக்கூடாது என தேர்தல் கமிஷனின் விதிகளில் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.
கேள்வி:- பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே?
பதில்:- ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா? அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா? அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #BJP #ADMK






