என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வம் 6,84,004 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே. மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
நாம் தமிழர் கட்சி 62771 வாக்குகளும், அமமுக 55213 வாக்குகளும் பெற்றன.
நாம் தமிழர் கட்சி 62771 வாக்குகளும், அமமுக 55213 வாக்குகளும் பெற்றன.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
லக்னோ:
ரேபரேலி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
அங்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் சோனியா காந்தி 5 லட்சத்து 34 ஆயிரத்து 918 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 3 லட்சத்து 67 ஆயிரத்து 740 வாக்குகளையும் பெற்றனர்.
ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா காந்தி இங்கு வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம், தும்கூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா தோல்வி அடைந்தார்.
பெங்களூரு:
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும் அம்மாநிலத்தின் முதல் மந்திரி குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தொகுதிமாறி தும்கூரில் போட்டியிட்டார்.
அங்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பசவராஜ் 5 லட்சத்து 96 ஆயிரத்து 127 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 5 லட்சத்து 82 ஆயிரத்து 788 வாக்குகளை பெற்ற தேவேகவுடா 13 ஆயிரத்து 339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

கோவை பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 5,67,741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கோவையில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜனும் போட்டியிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிஆர் நடராஜன் 5 லட்சத்து 67 ஆயிரத்து 741 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.பி. ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 90 ஆயிரத்து 823 வாக்குகள் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி 60,391 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 144809 வாக்குகளும், அப்பாத்துரை 37989 வாக்குகளும் பெற்றனர்.

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனும், அதிமுக கூட்டணியில் பாமக-வின் சாம் பாலும் போட்டியிட்டனர். மத்திய முன்னாள் அமைச்சரான தயாநிதிமாறன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாம் பால் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்றார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92047 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 30809 வாக்குகள் பெற்றது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92047 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 30809 வாக்குகள் பெற்றது.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்தார்.
அமராவதி:
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இன்றிரவு கவர்னர் நரசிம்மனை சந்தித்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் தேர்தலின்போது கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆந்திராவின் முதல் மந்திரியாக பதவியேற்கும் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இன்றிரவு டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது தொண்டர்கள் முழக்கமிட்டு எழுச்சியுடன் வரவேற்றனர்.
புதுடெல்லி:
மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு அமித் ஷா, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர் வருகை தந்தனர்.
அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் மேளதாள இசையுடன் உற்சாகமாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர். அமித் ஷா வாழ்க, மோடி வாழ்க என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷாவும் மோடியும் அவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல்கள் இவை அத்தனையையும் கடந்து அங்கு நாம் 18 இடங்களை பெற்றுள்ளோம்.
50 ஆண்டுகால இந்திய தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த கட்சியும் இதுபோல் தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பெற்றதில்லை. பிரதமர் மோடி தலைமையிலான நல்லரசு மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்பி மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர்களை வணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளர் பி காளியப்பனை தோற்கடித்தார்.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி. சின்ராஜ் 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பி. காளியப்பன் 361142 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
அமமுக 23347 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 30947 வாக்குகளும், நாம் தமிழர் 38531 வாக்குகளும் பெற்றன...
அமமுக 23347 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 30947 வாக்குகளும், நாம் தமிழர் 38531 வாக்குகளும் பெற்றன...
ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக-வின் கணேஷமூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஈரோடு தொகுதியில் மதிமுக-வைச் சேர்ந்த கணேஷமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜி மணிமாறன் போட்டியிட்டார். கணேஷ மூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணிமாறன் 352973 வாக்குகள் பெற்றார்.
மக்கள் நீதி மய்யம் 47719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 39010 வாக்குகளும் பெற்றன.
மக்கள் நீதி மய்யம் 47719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 39010 வாக்குகளும் பெற்றன.
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 575295 வாக்குகள் பெற்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் என்.ஆர். நடராஜனை தோற்கடித்தார்.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் எஸ்எஸ் பழனிமாணிக்கமும், அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் (மூப்பனார்) சார்பில் என்.ஆர். நடராஜனும் போட்டியிட்டனர். 3,58,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 5,75,295 வாக்குகளும், என்ஆர் நடராஜன் 2,17,183 வாக்குகளும் பெற்றனர்.
நாம் தமிழர் கட்சி 56707 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 22948 வாக்குகளும், அமமுக 100568 வாக்குகளும் பெற்றன.
நாம் தமிழர் கட்சி 56707 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 22948 வாக்குகளும், அமமுக 100568 வாக்குகளும் பெற்றன.
பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் புதிதாக அமையும் ஆட்சியில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் சுமார் 350 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன், அமைதியும் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.