என் மலர்
விருதுநகர்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டு கண்ணாடி, கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி சுப்புராஜ் (வயது 38). இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் தினமும் மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் சாத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியே உடலில் காயங்களுடன் பாண்டி சுப்புராஜ் நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். திருடன் என சந்தேகப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திடீரென ஆவேசமடைந்த பாண்டி சுப்புராஜ் கொரோனா ரத்த பரிசோதனை செய்யும் வார்டுக்குள் புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், பரிசோதனை கருவிகள் மற்றும் அறை கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் யூனியனில் 3 கிராமங்களில் அம்மா மினிகிளினிக்குகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர்:
விருதுநகர் யூனியனில் உள்ள வள்ளியூர், சத்திரரெட்டியபட்டி, இனாம் காசி ரெட்டியபட்டி ஆகிய 3 கிராமங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினிகிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாக்களில் கலந்து கொண்டு கிளினிக்குகளை திறந்து வைத்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் அவற்றின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதியிலேயே சிகிச்சை கிடைக்கக் கூடிய அளவிற்கு தமிழகம் முழுவதும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா மினிகிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்க ஏற்பாடு செய்துள்ளார். இம்மாவட்டத்தில் 3 கட்டங்களாக 47 அம்மா மினிகிளினிக்குகள் சிறப்பான முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட்டுவருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
6 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 9கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதி உதவியையும் அமைச்சர் வழங்கினார்.
இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர்எஸ்.ஆர். விஜயகுமரன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், விருதுநகர் யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றியச்செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் தவசிலிங்கசாமி கோவில் அருகே ரூ.81 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை யில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு திட்ட பணியை தொடங்கிவைத்தார். மேலும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரின்அலுவலகத்திற்கான புதுப்பிக்கப்பட்டகட்டிடத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான்ராஜ் தலைமையிலும், கலெக்டர்கண்ணன் முன்னிலையிலும் அமைச்சர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடிேயறும் போராட்டம் நடைபெற்றது.
சாத்தூர்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாத்தூரில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அழகுராணி தலைமை தாங்கினார். சீதா, நந்தினி, முனீஸ்வரி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெலுங்கானா, புதுச்சேரியை போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
பராபட்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் திரளான பேர் கலந்து கொண்டனர்.
அதேபோல சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்திரகாந்த் (வயது32). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (30). சந்திரகாந்த் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. ஆதலால் சாந்தி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது சந்திரகாந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே போக்குவரத்து கழக கண்டக்டர் தனது மனைவி கண் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம் (வயது 37). சாத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர் தனது வீட்டின் முன்பு இருந்த மரத்தை வெட்டியபோது மின் கம்பியில் பட்டு அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிகள் குணசேகரன், சந்திரசேகரன், ராஜா மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இந்தநிலையில் இரவில் சந்தனமகாலிங்கம் வீட்டில் இருந்து வெளியே கிளம்பினார். மாலையில் பிரச்சினை நடந்ததால் அவரது மனைவி சுதாவும் (30) அவருக்கு பின்னால் சென்றார்.
அப்போது சந்திரசேகரன், குணசேகரன், ராஜா, ஐயப்பன் ஆகிய 4 பேரும் அவரை பின்தொடர்ந்து சென்று அவருடன் தகராறு செய்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சுதா, தனது கணவர் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற போது 4 ேபரும் சேர்ந்து சுதாவை மிரட்டி, விரட்டி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த சந்தனமகாலிங்கம் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை வெட்டிய 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர் இந்தநிலையில் ராஜாவை போலீசார் கைது செய்தனர். குணசேகரன் பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி கண் முன்பு அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வரை மாவட்டம் முழுவதும் 4,652 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த வேகம் இல்லாத நிலையில் தடுப்பூசி போட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,602 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 4 லட்சத்து 2,891 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,594 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,334 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் சோதனை முடிவுகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காத நிலையே தொடர்கிறது.

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி:
வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து தாயில்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சல்வார் பட்டி, மீனாட்சிபுரம், வெம்பக்கோட்டை, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் அதிகம் வந்து செல்கின்றனர். அவர்களை அழைத்து சென்று வர ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக வாடகை வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
ஆகையால் தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 சேவை ஆம்புலன்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சாத்தூர் அல்லது சிவகாசியி்ல் இருந்து வர தாமதம் ஆகிறது.
சமீபத்தில் வனமூர்த்திலிங்காபுரம் அருகே காயமடைந்தவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதம் ஆனது. ஆதலால் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் மூலமாக காயம் அடைந்தவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு என 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை கலெக்டர் கண்ணன் திறந்துவைத்தார்.
விருதுநகர்:
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-
இந்த மையமானது சூலக்கரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பகவளாகத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.48லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மையத்தின் நோக்கமானது தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகளை உடனடியாக அவசர கால அடிப்படையில் எளிதாக பெற ஏற்பாடு செய்வது ஆகும். பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு உதவி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மையத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், அவசரகால மருத்துவ வசதி, போலீசாரின் சட்ட உதவி மற்றும் ஆலோசனை தற்காலிகமாக தங்கும் வசதி ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரண், சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முக கனி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மருதுபாண்டி நிஷாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருவாசகமணி, சமூகநலத்துறை அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் ரேச்சல்அருமை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி மேல் வரிசை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 40). இவர் கீழரத வீதி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது அவர் கார்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சரியாக நுழையவில்லை. இந்தநிலையில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த முக கவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார்.
பின்னர் லட்சுமியிடம் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு லட்சுமியின் கார்டை வாங்கி அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்தார். ஆனால் லட்சுமியிடம் உங்களது கணக்கில் இருந்து பணம் வரவில்லை என கூறிவிட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனை நம்பிய லட்சுமியும் வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு தான் தனது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல சாத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு இருந்த மர்மநபர் ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து கார்டை வாங்கிய மர்மநபர் பின் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார். பின்னர் பணம் எடுக்க முடியவில்லை என கூறி தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விட்டு வெளியேறி சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஆர். ஆர். நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்துள்ளதாக செல்போனில் தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து அவர் சாத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்தி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொள்ளுர்பட்டி தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (43), அண்ணாமலை என்ற மகாலிங்கம் (33). இவர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளிகள்.
சம்பவத்தன்று சிவலிங்கம் அவரது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அண்ணாமலை வந்து சிவலிங்கத்தை கூப்பிட்டார். உடனே சிவலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கிருந்த வெள்ளைச்சாமி ஓடிவந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சிவலிங்கத்தின் தலையில் தாக்கினார். இதையடுத்து மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
சிவலிங்கத்தின் அலறல் கேட்டு அவரது மகன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் (49) நகர போலீஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி, அண்ணாமலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ஆகிய 3 பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
ரெயில்வே மேம்பால பணிகள் தற்காலிகமாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முழுமை அடையாமல் தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்தநிலையில் தற்போது காந்தி கலை மன்றத்தில் இருந்து சத்திரப்பட்டி சாலை ரெயில்வே கேட் வரை சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் புழுதிகள் நிறைந்து காணப்படுகிறது. புழுதி நிறைந்த சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதிலிருந்து ராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை மட்டுமே தற்போது தப்பியுள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள் முழுவதும் குழிதோண்டி மக்களின் அன்றாட பணிகள் செய்வதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்நகருகென்று தனியாக மாற்று வழி சாலை கிடையாது. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ற சாலை வசதி இல்லை.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பணிகளை விரைந்து முடிந்து புதிய தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (44). இவர்கள் இருவரும் வ.புதுப்பட்டியிலிருந்து கோபாலபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கருப்பனும், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பரலோகம் என்பவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.