என் மலர்
செய்திகள்

பாண்டி சுப்புராஜ்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ரகளை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டு கண்ணாடி, கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி சுப்புராஜ் (வயது 38). இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் தினமும் மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் சாத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியே உடலில் காயங்களுடன் பாண்டி சுப்புராஜ் நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். திருடன் என சந்தேகப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திடீரென ஆவேசமடைந்த பாண்டி சுப்புராஜ் கொரோனா ரத்த பரிசோதனை செய்யும் வார்டுக்குள் புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், பரிசோதனை கருவிகள் மற்றும் அறை கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story