search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி மேல் வரிசை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 40). இவர் கீழரத வீதி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க சென்றார்.

    அப்போது அவர் கார்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சரியாக நுழையவில்லை. இந்தநிலையில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த முக கவசம் அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார்.

    பின்னர் லட்சுமியிடம் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு லட்சுமியின் கார்டை வாங்கி அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்தார். ஆனால் லட்சுமியிடம் உங்களது கணக்கில் இருந்து பணம் வரவில்லை என கூறிவிட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதனை நம்பிய லட்சுமியும் வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பிறகு தான் தனது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல சாத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது26). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு இருந்த மர்மநபர் ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து கார்டை வாங்கிய மர்மநபர் பின் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார். பின்னர் பணம் எடுக்க முடியவில்லை என கூறி தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விட்டு வெளியேறி சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஆர். ஆர். நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்துள்ளதாக செல்போனில் தகவல் வந்துள்ளது. 

    இதுகுறித்து அவர் சாத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×