என் மலர்
விருதுநகர்
சிங்கம்புணரியில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிங்கம்புணரி:
தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்ததை தொடர்ந்து இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அதன்பிறகு அரசு தேர்வுகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது 9-ம் வகுப்பு, பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர். அதோடு பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சிங்கம்புணரியில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறைந்த பஸ்களே செல்வதால் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். இதை பார்க்கும் பொதுமக்கள் மனம் பதைபதைக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் பாலா கூறும் போது, கொரோனா தொற்றுக்கு குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. பள்ளிகளும் திறக்கப்பட்டு இருப்பதாலும் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் மாணவர்களும், பொதுமக்களும் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளி நேரங்களில் சிங்கம்புணரியில் இருந்து சுற்றுவட்டார பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 19 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த சம்பவத்திற்கு விதிமீறலே காரணம் என கூறப்படுகிறது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. இது விதிகளுக்கு புறம்பானது என கூறப்படுகிறது.
பட்டாசு ஆலை விபத்துக்களை தவிர்க்க மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர், வருவாய் அலுவலர், பட்டாசு ஆலை அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து கூட்டம் நடத்தி குறைபாடுகளை களைய வேண்டும். ஆனால் இந்த குழு சரிவர ஆய்வு நடத்தவில்லை என பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் பலரும் குறை கூறுகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2000 முதல் 2020-ம் ஆண்டு வரை 336 பட்டாசு விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 482 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் (2010-2020) 161 விபத்துக்களில் 310 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய-மாநில அரசுகள் இதில் தீவிர கவனம் செலுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிவகாசி அருகே இன்று மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 19 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரிகளில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது விருதுநகர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அந்த ஆலையில் சுமார் 120 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். சிறிது நேரத்தில் ரசாயன மருந்து கலவை தயாரிக்கும் இடத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு கரும்புகை மண்டலமாக காணப்பட்டது.
வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இங்கு வெடி விபத்தில் சுரேஷ் (வயது32) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆலையில் இருந்த 15 அறைகள் தரைமட்டமாயின.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தன.
இங்கு அன்பின்நகரம், ஏழாயிரம் பண்ணை, படந்தால், மேட்டுப்பட்டி, மார்க்கநாதபுரம், அச்சன்குளம், சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்துவந்தனர்.
நேற்று 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.
அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களும், ஆலையில் மற்ற அறைகளில் பணியாற்றியவர்களும் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியானவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த சம்பவத்தில் 17 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிவிபத்தில் பலியானவர்களின் உடல்கள் மிகவும் சிதைந்து போயும், கருகியும் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பலியான 17 பேரில், போலீசார் விசாரணைக்கு பின்னர் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-
1. அன்பின்நகரை சேர்ந்த சந்தியா (வயது20).
2. மார்க்கநாதபுரம் சின்னதம்பி (34).
3. மேலப்புதூர் நேசமணி (38).
4. நடுசூரக்குடி கற்பக வள்ளி (22).
5. ஓ.கோவில்பட்டி ரெங்கராஜ் (57).
6. சத்திரப்பட்டி ரவிச்சந்திரன் (58).
மற்றவர்களின் உடல்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காயம் அடைந்தவர்களில் 26 பேர் சாத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அச்சன்குளம் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்த வெடி விபத்தால் ஏற்பட்ட பயங்கர சத்தம் சுற்றும்முற்றும் பல கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டு்ள்ளது. அந்த ஆலையில் இருந்த பல அறைகள் தரைமட்டமாகின.
தீப்பிடித்து எரிந்ததால் தொடர்ந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறிய வண்ணமாக இருந்தது. சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை முழுவதுமாக அணைக்க 4 நேரம் பிடித்தது.
பலியானவர்கள் குறித்து போலீசார் கூறும் போது, “பட்டாசு ஆலை வேலைக்கு வந்தவர்கள் பற்றிய வருகை பதிவேடு எதுவும் ஆலை நிர்வாகத்தால் சரிவர பின்பற்றப்படவில்லை. இதனால் யார்-யார் நேற்று பணிக்கு வந்தனர் என்ற விவரத்தை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்து உராய்வு காரணமாக இந்த கோர விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வெடிவிபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிவிபத்தினால் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கின. பட்டாசு ஆலை வேலைக்கு வந்தவர்களை பிணமாகவும், படுகாயத்துடனும் மீட்டெடுத்து ஆம்புலன்சில் ஏற்றிய காட்சிகளை பார்த்து பெண்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பலியானவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்தும், கருகியும் இருந்ததும் சோகத்திலும் சோகம் ஆகும்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘விருதுநகரில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ராஜபாளையம் முடங்கியாறு, அய்யனார் கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது மாலையாபுரம். முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எனவே அந்தப் பகுதியில் விபத்துகளை குறைக்க 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் காந்தி சிலையில் இருந்து, முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது மாலையாபுரம் பகுதியில் இருந்த 2 வேகத்தடைகளும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு அளித்துள்ளனர். ஆனாலும் வேகத் தடைகளை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முடங்கியாறு சாலையில் ஏற்கெனவே இருந்த இடங்களில் புதிய வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் பகுதியை மட்டும் அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே விபத்தை தடுக்க விரைவில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் முடங்கியாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தனியார் கல்லூரிக்கு செல்லும் பஸ் பாதியில் நிறுத்தப்பட்டதால், கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தே கல்லூரிக்கு சென்றனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையாபுரம் பகுதியில் வேகத் தடை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் முடங்கியாறு சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் சந்தன மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யப்பன் என்பவரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர். குணசேகரன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். ஞானசேகரன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் தளவாய் பாண்டியன் (வயது 49). முன்னாள் ராணுவ வீரர். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி நேற்று தளவாய்பாண்டியனும், அவரது சகோதரர் சஞ்சீவி பாண்டியனும் நடைபயிற்சி சென்றனர். ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று தளவாய் பாண்டியன் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தளவாய் பாண்டியனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தளவாய் பாண்டியன் மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரோபிஜெஸ்டஸ் என்பவரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போலி இரிடியம் விற்கும் கும்பல் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் தங்கமாரியப்பன் (வயது34), டி.வி. மெக்கானிக்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர் மூக்கையா என்பவர் மூலம் பாண்டிச்சேரியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் அறிமுகமானார்.
அப்போது ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதாகவும், இதற்கு எனக்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டுமென்றும், அதற்குரிய பணத்தை தருவதாகவும் என்னிடம் கூறினார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவே, ஜெய் சங்கர் ரூ. 1 லட்சத்தை கொடுத்தார்.
இதையடுத்து நான் எலக்ட்ரானிக் போர்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதற்காக ரூ. 60 ஆயிரத்துக்கு அதற்குரிய பொருட்களை வாங்கினேன்.
இந்த நிலையில் என்னால் குறிப்பிட்ட காலத்திற்குள் எலக்ட்ரானிக் போர்டை செய்து தரமுடியவில்லை. எனவே நான் ரூ. 40 ஆயிரத்தை திருப்பி வாங்கிக் கொள்ளுமாறு கூறினேன். இதனால் ஜெய்சங்கருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவத்தன்று ஜெய்சங்கர் தனது ஆதரவாளர்களுடன் காரில் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் அங்கு இல்லை.
இதையடுத்து வீட்டில் இருந்த என் தாயாரை அந்த கும்பல் கடத்தி சென்றது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த நான் எனது தாயாரை விட்டுவிடுமாறும், ரூ. 1 லட்சத்தை தருவதாகவும் கூறினேன்.
இதையடுத்து ஜெய்சங்கர் எனது தாயாரை விடுவித்து விட்டு, என்னை கடத்தி சென்றனர். கண்ணில் கருப்பு துணி கட்டிய அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காட்டுக்குள் அழைத்து சென்றனர்.
அங்கு என்னை சரமாரியாக தாக்கிய அவர்கள் பல பத்திரங்களில் கையெழுத்துவாங்கி விட்டு, பணத்தை உடனே தரவேண்டும் என கூறி விடுவித்தனர்.
எனவே என்னை கடத்தி சென்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய ஜெய்சங்கர், மங்கல்ரேவை சேர்ந்த முருகன் உள்பட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை தேடி வருகின்றனர்.

சாத்தூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று 2-வது நாளாக சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
போராட்டத்தில் அழகுராணி, சீதா, நந்தினி, முனீஸ்வரி, கருப்பசாமி ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா, புதுச்சேரி போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கேயே சமைத்து, அலுவலக வாசலில் தூங்கினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெம்பக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் திருமலை ராஜா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முனியசாமி, கிளைச்செயலாளர் பெருமாள் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது எனவும், 17-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சேத்தூர் மேட்டுப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மான், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் அணை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை ஆகியவற்றை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
பிளவக்கல் அணை பகுதி வழியாக இறங்கும் காட்டு யானைகள் தோப்புக்குள் நுழைந்து தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
பிளவக்கல் அணை பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஏராளமான வாழை, தென்னை, மரங்களை சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தொடர்ந்து இது போன்று விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காட்டு யானையை விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.