என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருமண வயதை எட்டிய விக்னேஷ் ரகுராமுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாகவே பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
    • விக்னேஷ் ரகுராமின் உறவினர்கள் சிலருக்கு செல்போனில் வாட்ஸ்அப் தகவல் ஒன்று வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக்கடை இறக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் விக்னேஷ் ரகுராம் (வயது 29). சட்டம் படித்துள்ள இவர் தற்போது மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    திருமண வயதை எட்டிய விக்னேஷ் ரகுராமுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாகவே பெண் பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திக்கொள்ளுமாறும் விக்னேஷ் ரகுராம் தனது பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்தார்.

    இருந்தபோதிலும் பெற்றோர் தொடர்ந்து மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் மதுரை ஐகோர்ட்டில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ் ரகுராம், சிறிது நேரத்தில் யாரிடமும் எதுவும் கூறாமல் வெளியில் புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே விக்னேஷ் ரகுராமின் உறவினர்கள் சிலருக்கு செல்போனில் வாட்ஸ்அப் தகவல் ஒன்று வந்தது. அதில் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அத்துடன் அவர் தற்கொலை செய்துகொள்ளும் இடத்தையும் லொக்கேஷன் மூலம் பகிர்ந்து இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவில்-அழகாபுரி சாலையில் முனியாண்டி கோவில் எதிரே உள்ள முள்காட்டிற்குள் விக்னேஷ் ரகுராம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின்பேரில் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்னேஷ் ரகுராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது தந்தை வீரபத்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20 முகாம்கள் வீதம் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை கிராமத்தில் கலெக்டரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழு வினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    நிகழ்ச்சி தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.

    அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, கே.சி.சி. விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற் கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவச மாக தாதுஉப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்க ளிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்று களை விவசாயிகள் தங்க ளது பெயர்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணை யாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படும். எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வ லர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரம், என்.ஏ.ராமச் சந்திரராஜா அறக்கட்டளை சார்பில் இயங்கும் ராஜபா ளையம் விவேகானந்த கேந் திர கிளையும் இணைந்து, விருதுநகர் மாவட்ட அள வில் நகர்ப்பு றப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகளை ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் நடத்தின.

    ராஜபாளையம் விவேகா னந்த கேந்திரக் கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்திராஜா தலைமை தாங்கி பேசினார். என்.ஏ. ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ண மூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டி களைத் தொடங்கி வைத் தார். கேந்திரக்கிளைச் செய லர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

    விவேகானந்தக் கேந்திரம் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பேச்சியப் பன் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு இடையேயான ஒப்பு வித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, போன்ற பல்வேறுவிதமான போட்டிகளின் விவரங் களை விளக்கமாகக் கூறி நடுவர்களை அறிமுகப்படுத் தினார். போட்டிக ளில் 32 பள்ளிகளிலிருந்து 350-க் கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்ற னர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக ளுக்கு நூல், சான்றிதழ்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவி கள் கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரத்தில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டுநாள் முகாமில் கலந்து கொண்டு அங்கு மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர் என் பது குறிப்பிடத்தக்கது. முடி வில் கேந்திர பொருளாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • கலசலிங்கம் பல்கலையில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது.
    • இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூா்

    ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலையில் வணிக நிர்வாகத்துறை சார்பில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலா் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநா் உமாசங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார்.

    அங்கு மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசு தேவன், டி.ஐ.ஆா். சரசு, முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.இ.டி.சி. இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

    • தொழிலாளி தீக்குளித்து இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கணபதியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள். இவர்களின் 2 மகள்கள், 1 மகனுக்கு திருமணமாகி விட்டது.

    திருமுருகன் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொலை நடப்பது போல் ரீல்ஸ் செய்து பதிவிட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
    • நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    விருதுநகர்

    சாத்தூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழா முடிந்த பின்னர் 6 மாணவர்கள் சேர்ந்து பார் ஊழியர் கொலை செய்யப்படுவது போல் நடித்து ரீல்ஸ் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் மாணவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

    இதையடுத்து அம்மாபட்டி போலீசார் அந்த மாணவர்களை கைது செய்து முதல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவராகவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (19). இவர் விருதுநகர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மகேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார்.

    எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வகுமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப்பதிவு நடைபெற்றது தெரிய வந்தது.
    • ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பெத்துலெட்சுமி என்பவர் சார்பதிவாளராக (பொறுப்பு) பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பத்திரப்பதிவின்போது பொதுமக்களிடமிருந்து பதிவு கட்டணம் போக ஒரு குறிப்பிட்ட தொகையினை அப்பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், அந்த சொத்தின் மதிப்பிற்கு ஏற்பவும் கூடுதலாக பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பலர் புகார்களாகவும் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கத்தைவிட கூடுதல் பத்திரப்பதிவு நடைபெற்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பத்திரப்பதிவுகளின் கட்டணத்தைவிட கூடுதல் பணத்தை (லஞ்ச பணத்தை) சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர்கள் மூலமாகவும் இடைத்தரகர்கள் மூலமாகவும் பெற்று வந்துள்ளார்.

    மேலும் அந்த பணத்தை தனது அலுவலக வளாகத்தில் வைத்து வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி, அலுவலக நேரம் முடிந்த பின்னர் மேற்படி ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களை ராமநாதபுரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வரச்சொல்லி அவர்களிடமிருந்து வசூலித்து செல்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

    இதனை ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இடைத்தரகர்களிடம் வசூல் செய்த பணத்தை பெற்றுக்கொண்டு பஸ்சில் ஏறி தப்ப முயன்ற சார்பதிவாளர் பெத்துலெட்சுமி மற்றும் சில அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு துறையினரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களிடம் கணக்கில் காட்ட முடியாத அளவிற்கு பணம் இருந்துள்ளது.

    அதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறையினர் இது சம்பந்தமாக அவரை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அலுவலகத்தையும் சோதனை செய்தனர். இதன் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,84,500-ஐ கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே பரமக்குடி புதுநகரில் உள்ள பெத்துலட்சுமி வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் அவரது வீட்டிற்கு முன்பு வந்து நீண்ட நேரம் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6.30 மணிக்கு மேல் வீட்டிற்குள் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதிய மகளிர் சுகாதார வளாகம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தங்க பாண்டியன்எம்.எல்.ஏ. மகளிர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அங்கிருந்த பெண்களிடம் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து விட்டதா? என கேட்டார். அவர்கள் கிடைத்து விட்டது என கூறினர்.

    இந்த சுகாதார வளா கத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வசந்தகுமார், ராம மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தினருக்கு காங். தொழிலாளர் யூனியன் ஆறுதல் கூறினார்.
    • வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த கிச்ச னாயக்கம்பட்டி அருகிலும், ஸ்ரீவில்லிபுத் தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையத்திலும் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 12 பெண்கள் உள்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குறிப்பாக லட்சுமியாபு ரம், அழகாபுரி, காந்திநகர், மூவறைவென்றான் பகுதி களை சேர்ந்தவர்கள் பலி யாகினர். இந்த தொழிலா ளர்களின் குடும்ப உறுப்பி னர்களை ராஜபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் விருது நகர் மாவட்ட தலைவ ரும், பட்டாசு மற்றும் தீப் பெட்டி நலவாரிய உறுப்பி னருமான தளவாய் பாண்டி யன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பாதிக்கப்பட்டவர்க ளுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டி அழகாபு ரியில் முகாமிட்டிருந்த சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வத்திராயி ருப்பு வட்டாட்சியர் முத்து மாரி ஆகியோரை நேரில் சந்தித்து உயிரிழந்த தொழி லாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,

    பெற்றோர்களை இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

    அப்போது வத்திராயி ருப்பு முன்னாள் வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் பாண்டிசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    தமிழக அரசின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமானது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் வருகிற (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இம்முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரி விக்கப்படுகிறது.

    இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://tinyurl.com/yu5728lz என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக் கப்படுகிறது.

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

    எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

    ×