காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

சிவகாசி

சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com