என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் வெடி விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி இறந்ததால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி புதூரில் சிவகாசியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று மாலை பட்டாசு ஆலையில் இருந்த கழிவு பட்டாசுகளை தொழிலாளர்கள் சிலர் எரித்தனர். அப்போது அதில் கிடந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.  இதில் பட்டாசு ஆலை தொழிலாளியான சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) என்பவர்  பலத்த தீக்காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பட்டாசு ஆலை தொழிலாளியான அம்மன்கோவில்பட்டி புதூரை சேர்ந்த குபேந்திரன் (28),  பட்டாசு ஆலை போர்மேன் சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வேந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் போலீசாரும் வந்தனர். 

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குபேந்திரன், தெய்வேந்திரன் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி குபேந்திரன் இன்று இறந்தார்.  இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.  தெய்வேந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தினர்.  இதுதொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான செல்வம் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
    சிவகாசி சிவன் கோவிலில் அன்னதான கூடம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்திபெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன்  அருள் பாலிக்கின்றனர். 

    சிவகாசியின் மையப்பகுதியில் சிவன் கோவில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசின் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    இங்கு தினமும் 100 பேருக்கு மதியம் 12 மணி வரை இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும் அடிக்கடி சமபந்தி நடைபெற்று வருகிறது. 

    இதனால் கோவிலின் பிரதான நுழைவாயிலில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதில் சிரமப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த  ஆண்டு  புனரமைப்பு பணி நடைபெற்று, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. 

    இதன் பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சிவன் கோவில் தெற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் அன்னதான கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை அன்னதானக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  அறநிலையத்துறையினர் உடனடியாக இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விருதுநகர் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
    விருதுநகர்

    சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் வடமலாபுரத்தைச்சேர்ந்த பெருமாள்சாமியிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாரியப்பன் என்பவரை காரில் அழைத்து சென்றார். சோரம்பட்டி பகுதியில் ரெயில்வே பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக காரில் தீ பிடித்தது.

    இதனை கண்டதும் நாகராஜ் மற்றும் மாரியப்பன் அவசரமாக கீழே இறங்கிவிட்டனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.4Ñ லட்சம் ஆகும்.

    சரியான நேரத்தில் காரில் இருந்து இறங்கியதால் நாகராஜ் மற்றும் மாரியப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில்  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளத்தை  சேர்ந்த   நவநீதகிருஷ்ணன் (வயது 38) என்பவரிடம் இருந்து 43 கிலோ புகையிலை  பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்மீது  ஏற்கனவே 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவரை  போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் எம்.புதுப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக பாபு (42), முத்துமாரி (35), மாரிமுத்து (39), மற்றொரு மாரிமுத்து  (63), அருள்ராஜ் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அருப்புக்கோட்டை கலைஞர் நகரைச் சேர்ந்த ரமேஷ் (37) என்பவரும் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக  கைது செய்யப்பட்டார். 

    மொத்தத்தில் மாவட்டத்தில் சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுளளது.
    சிவகாசியில் மர்மமாக இறந்த கார் டிரைவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது50),  கார் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

    கருப்பசாமிக்கு சொந்தமாக தேவர்குளத்தில் வீடு உள்ளது. 8 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டு பத்திரத்தை வைத்து தங்கபூபதி என்பவரிடம் ரூ.26 லட்சம் கடன் வாங்கியிருந்தனர்.

    இந்தநிலையில் சிவகாசி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் தாமோதரன் (வயது 39) என்பவர் அந்த வீட்டை, தான் வாங்கிவிட்டதாக கூறி கருப்பசாமி, அவரது மனைவி பாண்டிசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட கருப்பசாமி திடீரென இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி திருத்தங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், வீடு விவகாரம் தொடர்பாக தாமோதரன் எனது கணவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் அவர் இறந்திருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவத்தன்று கருப்பசாமியை தாமோதரன் தாக்கியது தெரியவந்தது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் இறந்துள்ளார். இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி மாநகராட்சியில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
    சிவகாசி

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 4-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலாகும். மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 48 வார்டுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியானது. 

    சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட வருடங்களாக பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஆளுங்கட்சியான தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளன. 

    சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பெண் என்பதால் பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் 7 வார்டுகள் எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 16, 17, 20, 21 எஸ்.சி. பெண்களுக்கும், வார்டு எண் 23, 24, 46, எஸ்.டி. பெண் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வார்டு எண் 4, 5, 6, 10, 13, 16, 19, 22, 25, 36, 38, 40, 43 ஆகியவை பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு யாருக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது? மதுரையில் யாரிடமிருந்து புகையிலை பொருட்கள் அனுப்பப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் இருந்து லாரியில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று காலை புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தன.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த லாரியை மறித்து டிரைவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனையிட்டனர்.

    அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 30 புகையிலை மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் வயது (வயது37), சுப்புராஜ் (27), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மணிகண்டன் (25), வத்திராயிருப்பை சேர்ந்த சக்தி முருகன் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு யாருக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது? மதுரையில் யாரிடமிருந்து புகையிலை பொருட்கள் அனுப்பப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    வருகிற 31-ந் தேதி தை மாதம் அமாவாசை என்பதால் சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிலுக்கு வர அனுமதியில்லை.

    அதேபோல இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. நீர் ஓடையில் குளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் உள்ள நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு சேவை கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ. 5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேவை கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
    விருதுநகர்


    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் இன்று(28ந் தேதி) தொடங்கியது. 

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. 

    அதேபோல் மாவட் டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளும், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளும், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளும், ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளும், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு களும் என 171 வார்டுகள் உள்ளன.

    இதேபோல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங் கிணறு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப் பட்டி   பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. மம்சாபுரம், சேத்தூர், வத்ராயிருப்பு பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 144 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

    மொத்தத்தில் மாவட் டத்தில் 363 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியதை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  முதல்நாள் என்பதால் இன்று குறைந்த அளவு நபர்களே மனுத்தாக்கல் செய்தனர்.
    சிவகாசியில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 50),  கார் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

    கருப்பசாமிக்கு சொந்தமாக தேவர்குளத்தில் வீடு உள்ளது. 8 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டு பத்தி ரத்தை வைத்து தங்கபூபதி என்பவரிடம் ரூ.26 லட்சம் கடன் வாங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் அந்த வீட்டை தான் வாங்கி விட்டதாககூறி கருப்பசாமி, அவரது மனைவி பாண்டிசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோவில் திடீர் உடல்நலக்குறைவுடன் வந்த கருப்பசாமியை குடும்பத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  கருப்பசாமியின் திடீர் சாவு மனைவி மற்றும் அவர்களது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இது குறித்து அவரது மனைவி பாண்டிசெல்வி திருத்தங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், வீடு விவகாரம் தொடர்பாக தாமோதரன் எங்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். 

    நேற்று மாலை எனது கணவர் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில்  சென்றார். சிறிது நேரத்தில் அவர் என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது தாமோதரன் உள்பட 3 பேர் தன்னிடம் வந்து பிரச்சினை செய்து என்னை தள்ளி விட்டதாகவும், இதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார். 

    மேலும் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் நிற்பதாகவும் தன்னை அழைத்துச்செல்ல வருமாறும் கூறினார். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவர் (கருப்பசாமி) இல்லை.
     
    இதற்கிடையே ஆட்டோவில் மயக்க நிலையில் வீட்டுக்கு வந்த கணவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


    ஓடும் வேனில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (21). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு ஆலைக்குச் சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வழக்கம்போல் வேனில் மகேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென மகேஸ்வரி வேன் கதவைத் திறந்து வெளியே குதித்தார். மகேஸ்வரியின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் சக தொழிலாளர்கள் உடனே வேனை நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்த்தபோது மகேஸ்வரி ரத்த காயங்களுடன் உயிருக்கு  போராடிக்கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி எதற்காக வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் 136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    விருதுநகர்



    விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    அதன்படி ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது முத்தா நதியை சேர்ந்த ஜான் (வயது 45) என்பவர் தனது பெட்டிக்கடையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 133 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து ஜானை கைது செய்தனர்.

    அருப்புகோட்டை டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு ரோந்து சென்றபோது சொக்கலிங்கபுரம் பகுதியில் நாகம்மாள் (60) என்பவர் தனது பெட்டிகடையில் 3 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து நாகம்மாளை கைது செய்தனர்.

    இதேபோல் வீரசோழனை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவரிடம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×