என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஓடும் வேனில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

    ஓடும் வேனில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பாப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (21). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்தார். தினமும் வேலைக்கு ஆலைக்குச் சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வழக்கம்போல் வேனில் மகேஸ்வரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென மகேஸ்வரி வேன் கதவைத் திறந்து வெளியே குதித்தார். மகேஸ்வரியின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் சக தொழிலாளர்கள் உடனே வேனை நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்த்தபோது மகேஸ்வரி ரத்த காயங்களுடன் உயிருக்கு  போராடிக்கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி எதற்காக வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×