என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பறிமுதல்
    X
    புகையிலை பறிமுதல்

    போலீசார் சோதனையில் 50 கிலோ புகையிலை பறிமுதல்

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில்  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம்கரிசல்குளத்தை  சேர்ந்த   நவநீதகிருஷ்ணன் (வயது 38) என்பவரிடம் இருந்து 43 கிலோ புகையிலை  பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்மீது  ஏற்கனவே 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவரை  போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் எம்.புதுப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக பாபு (42), முத்துமாரி (35), மாரிமுத்து (39), மற்றொரு மாரிமுத்து  (63), அருள்ராஜ் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அருப்புக்கோட்டை கலைஞர் நகரைச் சேர்ந்த ரமேஷ் (37) என்பவரும் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக  கைது செய்யப்பட்டார். 

    மொத்தத்தில் மாவட்டத்தில் சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுளளது.
    Next Story
    ×