search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு தொழிலாளர்கள்"

    • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிலாளர்களும் விபத்து தடுப்பு பயிற்சி பெற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப் படுவதை உறுதி செய்வது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுடன் கலெக்டர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் நடைபெறும் விபத்துகளை தவிர்ப்பது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விபத்துகளை குறைக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டரால் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது. ஆய்வின்போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப்பட்டால் பட்டாசு தொழிற்சாலை உரிமை யாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்ற வியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

    ஆலை உரிைமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிக கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் சிறப்பு ஆய்வு குழுக்களை தவிர்த்து, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களால் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். உயர் அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்யும்பொழுது, அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவிலான வெடி பொருட்கள் இருப்பு வைத்தல் மற்றும் தயாரித்தல், உள்குத்தகை போன்ற மிகக் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, இந்திய தண்டனை சட்டம், பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

    மேலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்ளிட்ட இதர பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அனைத்து பட்டாசு தொழிற்சா லைகளில் பணிபுரியும், போர்மேன், மேலாளர் மற்றும் ரசாயனக் கலவைப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி நடவடிக்கைகளை முழுமைப்படுத்தும் நோக்கத்தில் குறுகிய காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் வெடி விபத்துகளை தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, பாது காப்பான முறையில் தொழில் செய்து, விபத்தில்லா விருதுநகரை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×