search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியில் கடத்தப்பட்ட ரூ 4. லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

    மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு யாருக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது? மதுரையில் யாரிடமிருந்து புகையிலை பொருட்கள் அனுப்பப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரையில் இருந்து லாரியில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று காலை புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தன.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து வந்த லாரியை மறித்து டிரைவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனையிட்டனர்.

    அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 30 புகையிலை மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் வயது (வயது37), சுப்புராஜ் (27), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மணிகண்டன் (25), வத்திராயிருப்பை சேர்ந்த சக்தி முருகன் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு யாருக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது? மதுரையில் யாரிடமிருந்து புகையிலை பொருட்கள் அனுப்பப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×