என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் இன்று(28ந் தேதி) தொடங்கியது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் மாவட் டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளும், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளும், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளும், ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளும், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு களும் என 171 வார்டுகள் உள்ளன.
இதேபோல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் உள்ளன. இதில் செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங் கிணறு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப் பட்டி பேருராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. மம்சாபுரம், சேத்தூர், வத்ராயிருப்பு பேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 144 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தத்தில் மாவட் டத்தில் 363 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியதை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்நாள் என்பதால் இன்று குறைந்த அளவு நபர்களே மனுத்தாக்கல் செய்தனர்.
Next Story






