என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாணவிகள் திறந்து வைத்தனர்.
    • சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட 3 வகுப் பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் பிளஸ்-2 மாணவிகள் ரிப்பன் வெட்டி கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை திறந்து வைத்த னர்.

    விழாவில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது. சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக இதுவரையில் (2021-22, 2022-23) 70 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட் டுள்ளது. தற்போது பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான கலை யரங்கம் ஆடிடோரியம் கட்டிடத்திற்கு முதல் கட்ட மாக சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கலை யரங்கம் அமைக்கப்படும்.

    ஆடிட்டோரிய கட்டி டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தி.மு.க விற்கு வாக்களித்தவர்களுக்கும் மற்றும் வாக்களிக்காதவர்கள் ஏன் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை என்று எண்ணுமளவிற்கு அனை வருக்கும் சேர்த்து உழைக்க வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார். அவர் வழி யில் ராஜபாளையம் தொகுதி யில் அனைத்து பொது மக்களின் வளர்ச்சிக் காகவும் செயல்பட்டு வரு கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பரம சிவம், பாலசுப்பிர மணியன் கிளைச் செய லாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், தங்கப்பன் வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் வாரிய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்க படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2582 பணிக்காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இத்தேர்வுக்கு https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் 07.01.2024 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி TET PAPER-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது பிரிவி னருக்கு அதிக பட்சமாக 53 வயதும், மற்ற பிரிவினருக்கு 58 ஆகவும் இருக்கும்.

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.600 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் இதற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்ப முள்ளவர்கள் https://forms.gle/vXF8VpohQTKp8c4v9 என்ற இணைப்பினை பயன்படுத்தி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள நேரடி அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும் https://t.me/vnrstudycircle என்ற TELEGRAM CHANNEL வாயிலாக அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (18-ந் தேதி) தொடங்கி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, 04567-230160, 7867080168 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    • விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 14 வாரம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரிகளுக்கும், பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியும் உள்ளேன். இதன் எதிரொலியாக தற்போது 13 வாரங்களுக்கு மட்டும் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நடவடிக்கை எடுத்த மத்திய நிதி மந்திரிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க படவில்லை. இதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பிரதமர் கிஷான் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசை தவிர்த்து நேரடியாக விவசாயிகளுக்கு நிதி அனுப்ப நடவடிக்கை எடுப்பது நல்ல நடைமுறையாகாது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசு அரசியல் சாசனப்படி இதற்காக சட்ட சபையை கூட்டி மசோதா தாக்கலை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பிரச்சி னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சுதந்திர போ ராட்டத்தில் பழங்குடியினர் பங்கு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்.

    விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய நிதி மந்திரியின் நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு இதுவரை எந்த தகவலம் இல்லை. இதில் என்னை புறக்கணிப்பது மாவட்ட மக்களை புறக்கணிப்பது ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாகன், நாகேந்திரன், வெயிலுமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    100 நாள் தொழிலாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 14 வார கால ஊதியம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தார். மேலும் போராட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 13 வார கால ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருதுநத்தத்தை சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் சகுந்தலா கூறுகையில், மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நடவடிக்கையால் சம்பள நிலுவை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.13 வார கால நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றும் சில நாட்களில் மீதியுள்ள சம்பள நிலுவை தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    • நகை இல்லாமல் பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எடுத்துக் கூறினார். உழவன் செய லியை பதிவிறக்கம் செய்ய வும், அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கவும் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை துறையின் கீழ் இருக்கும் அனைத்து பண்ணைகளிலும் நன்றாக விளைந்த நாற்றாங்கால்கள் உரிய நேரத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுக்கள் பருவ காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் வருவாய் துறை அலுவலர்களால் வழங்கப் படும் அடங்கலுடன், ஒப்பம் செய்யப்பட்ட நகலும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் கருவி, வெட்டும் கருவி, மரம் ஏறும் கருவி ஆகியவற்றை மானி யத்தில் வழங்க வேண்டி அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட உள்ளது என்றும் கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவில் யூரியா உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப் பட்டது.

    கூட்டுறவுத்துறையில் நகை இல்லாமல் பயிர்க் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வழி வகை செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கோ.பத்மாவதி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் பண்பாட்டின் அடையாளங்கள் பரவிக்கிடக்கின்றன.
    • இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.



    விருதுநகர்

    நமது மரபு சின்னங்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து, அவற்றை பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் கொண்ட கோவில்கள் உள்ளிட்ட பண்பாட்டின் அடையாளங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் பரவிக்கிடக்கின்றன. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:-

    சிவகாசி அருகிலுள்ள பிரபலமான கிராமம் எதிர்கோட்டை. இங்குள்ள கல்வெட்டுகளில் வெண்பைக்குடி நாட்டுக்கூத்தன்குடி என குறிக்கப்பட்டுள்ளது. இங்கு பாற்சுனைக்குடிப் படாரர் என்ற சிவன் கோவிலும், நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோவிலும் உள்ளன. சிவன் கோவிலுக்கு எதிரில் பாறையில் இரு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன.

    இதில் கி.பி.10-ம் நூற்றாண்டு சடையமாறன் கல்வெட்டு, இவ்வூரில் பூசலில் இறந்த கூலிச்சேவகன் மாறம்பட்டனுக்காக, மாகாணக்குடி சேவகன் ஒருவன் இந்த கோவில் இறைவனுக்கு பொன் அளித்துள்ளதையும், கி.பி.965-ம் ஆண்டு சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு, சுனைக்குடி படாரருக்கு, அவ்வூர் அறுவை வாணியச்சேரி ஆச்சன் என்பவர், திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக 55 ஆடுகள் அளித்ததையும் கூறுகிறது.

    பெருமாள் கோவிலில், முதலாம் ராஜராஜசோழனின் கி.பி.1006-ம் ஆண்டு கல்வெட்டில் கூத்தன்குடி நகரத்தார் இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றியும், மற்றொரு கல்வெட்டில் சாலியன் கன்றாடைக்காவிதி என்பவர் பெயரும் காணப்படுகிறது. சாலியர் துணி வணிகர்கள் ஆவர். கோவில் உவச்சுப் பணியாளர்களுக்கு தானம் கொடுத்த ராஜராஜனின் இன்னொரு கல்வெட்டில், திசையாயிரத்து என்ற சொல் காணப்படுவதன் மூலம் இவ்வூரில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகக்குழு தங்கி வணிகம் செய்திருப்பதை அறிய முடிகிறது.

    அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தொப்பலாக்கரை. 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட சிவன் கோவில், பெருமாள் கோவில், விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி ஆகிய தொல்லியல் சின்னங்கள் இங்கு உள்ளன.இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இவ்வூர் அளற்றுநாட்டு குளத்துார் எனப்படுகிறது. பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோவில் இறைவனை திருமேற்கோயில் உய்யவந்த விண்ணகர எம்பெருமான் என்கின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இங்கு விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்ததையும், அதற்கு பள்ளிச்சந்தமாக நிலம் இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    இதற்கு ஆதாரமாக இவ்வூரில் உள்ள இரு சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை கொள்ளலாம். தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ள இடத்தில் பழமையான ஒரு லிங்கமும் உள்ளது. பெருமாள் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் குலசேகர பாண்டியன் கல்வெட்டும், சிம்மவாகனத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் பாடல் கல்வெட்டும் உள்ளன.

    சமூகத்தில் உயர் நிலையில் இருந்து இறந்த அரசர்களுக்கு அமைக்கப்படும் கோவில்கள் பள்ளிப்படை கோவில்கள் என அழைக்கப்படுகி ன்றன. இதன் கருவறையில் லிங்க அமைப்பு காணப்படும். அத்தகைய பள்ளிப்படைக் கோவில்கள் சோழநாட்டில் பல உள்ளன. எனினும் பாண்டிய நாட்டில் திருச்சுழி அருகிலுள்ள பள்ளிமடத்தில் மட்டுமே பள்ளிப்படை கோவில் காணவப்படுகிறது.

    குண்டாற்றின் கரையில் உள்ள பள்ளிமடத்தில் இறந்த தன் அண்ணன் சுந்தரபாண்டியனுக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் உருவாக்கியதை அறிய முடிகிறது. இவர்கள் இருவரும் 3ம் ராஜசிம்ம பாண்டியனின் மகன்கள். கி.பி.10-ம் நூற்றாண்டில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் இடையில் பல போர்கள் நடந்தன. அந்த சமயம் இந்த ஊரில் சுந்தரபாண்டியன் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    கல்வெட்டுகளில் பருத்திக்குடி நாட்டு திருச்சுழியல் பள்ளிபடை சுந்தரபாண்டீஸ்வரம் என இந்த கோவில் குறிப்பிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்தும், அவற்றின் பின்புல வரலாறு குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.

    • வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது.
    • யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முத்து முருகன் மகன் குரு பிரவீன் (வயது 16) மற்றும் தங்கப்பாண்டி மகன் யோகேஷ் பாண்டி (9). இவர்கள் தீபாவளிக்கு முதல் நாள் அதே பகுதியில் பட்டாசுகள் வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது குருபிரவீன் கையில் குருவி சுடும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியை வைத்திருந்தான். அவன் விளையாட்டாக அருகில் இருந்த யோகேஷ் பாண்டியை நோக்கி துப்பாக்கியை இயக்கி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு யோகேஷ் பாண்டியின் வயிற்றுக்குள் புகுந்தது. ஆனால் அதை உணராமல் வயிற்றில் அடிபட்டதாக நினைத்து வலியில் யோகேஷ் பாண்டி துடித்துள்ளார்.

    உடனடியாக அவரை திருச்சுழி மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று சிறுவன் வீடு திரும்பினான். ஆனால் சிறுவனுக்கு மீண்டும் வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேட்டை துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பால் ரஸ் குண்டு சிறுவனின் வயிற்றுக்குள் புகுந்திருந்தது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து யோகேஷ் பாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து சிறுவனின் தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி சிறுவனின் கைக்கு எப்படி வந்தது? அல்லது வேறு யாரிடமாவது வாங்கி வந்து வேட்டையில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், தப்பாட்டம், ஓவியம், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து, வாய்ப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல், மரக்கால் ஆட்டம், தவில், ராஜா ராணி ஆட்டம், தவில், வில்லிசை, எருது கட்டும் மேளம் உள்ளிட்ட கலை களில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலை ஞர்களுக்கு 2022-23-ம் ஆண்டு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள், பொற்கிழிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2-வது முறையாக கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட் காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை 12 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமக்கு பொது அறிவு, பழைய நினைவுகள், நிகழ்ச்சிகள், புதிய கவிதைகள் இதெல்லாம் கிடைப்பதற்கு புத்தகங்கள் தான் சரியான ஒரு தேர்வு ஆகும். பய ணங்களின் போதும், நேரம் கிடைக்கும் போதெல் லாம் புத்தகங்கள் வாசித்து பழக வேண்டும்.இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள், பாடநூல் புத்தகங்கள் என, லட்சக் கணக்கான புத்த கங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாரம்பரிய இசைப் பொருட்கள் கண் காட்சி, அறிவோம் பயில் வோம் பயிலரங்கம், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்த கங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், திட்ட இயக்குநர் தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருது நகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜ சேகர், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
    • இந்த தகவலை மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், கொத்தன்குளம் காப்பு காட்டிற்கு கீழ்புறம் உள்ள நிலம் 17.67.5 ஹெக்டேர் பரப்பில் பூமிதான அமைப்பிற்கு சொந்தமான இடம் ஆகும். இதனை வருவாய் துறை மற்றும் பூமிதான அமைப்பு வனத்துறைக்கு இந்த நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைத்து உள்ளது.

    மாவட்ட பசுமைக்குழு கூட்ட நடவடிக்கையின்படி வனத்துறையினர் மேற் கண்ட நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா வாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

    ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் 200 ஹெக் டேர் பரப்பில் கொத்தன்கு ளம் பாதுகாப்பு காடு அமைந்து உள்ளது. இந்த காப்புக் காட்டில் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் வளமிக்க காடாக மாற்றுவதற்கும் அதன் அருகில் அமைந்துள்ள பூமிதான அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சஞ்சீவி மலை சுற்றுச்சூழல் பூங்காவாக அமைப்பதற்கும், ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை மதுரை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் அறக்கட்டளை (Tiger foundation) அமைப்பின் கணக்கு எண். 74390100010561, IFSC code. BARBOVJMADU, MICR 625012013 மூலமாக செலுத் தலாம்.

    மேலும் இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ராஜபாளையம் வனச்சரக அலுவலர் செல்போன்எண்: 99423 28515-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில் லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.

    அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் சஞ்சீவிமலை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிறுவனங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
    • இந்த தகவலை மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், கொத்தன்குளம் காப்பு காட்டிற்கு கீழ்புறம் உள்ள நிலம் 17.67.5 ஹெக்டேர் பரப்பில் பூமிதான அமைப்பிற்கு சொந்தமான இடம் ஆகும். இதனை வருவாய் துறை மற்றும் பூமிதான அமைப்பு வனத்துறைக்கு இந்த நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைத்து உள்ளது.

    மாவட்ட பசுமைக்குழு கூட்ட நடவடிக்கையின்படி வனத்துறையினர் மேற் கண்ட நிலத்தினை சஞ்சீவி சுற்றுச்சூழல் பூங்கா வாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள் ளது.

    ராஜபாளையம் நகரின் கிழக்கு பகுதியில் 200 ஹெக் டேர் பரப்பில் கொத்தன்கு ளம் பாதுகாப்பு காடு அமைந்து உள்ளது. இந்த காப்புக் காட்டில் மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் வளமிக்க காடாக மாற்றுவதற்கும் அதன் அருகில் அமைந்துள்ள பூமிதான அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சஞ்சீவி மலை சுற்றுச்சூழல் பூங்காவாக அமைப்பதற்கும், ஆர்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை மதுரை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் அறக்கட்டளை (Tiger foundation) அமைப்பின் கணக்கு எண். 74390100010561, IFSC code. BARBOVJMADU, MICR 625012013 மூலமாக செலுத் தலாம்.

    மேலும் இது பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ராஜபாளையம் வனச்சரக அலுவலர் செல்போன்எண்: 99423 28515-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில் லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • கலெக்டரின் உத்தரவுப்படி உடனடியாக சீரமைக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பேருந்து நிலையம் அருகே தரைப்பா லம் இருந்தது. அந்த பாலமானது சேதம் அடைந்த காரணத்தினாலும், பாலத்திற்கு அடி யில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றதன் காரணமாகவும், போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

    இந்த நிலையில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கி கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு பாலப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து. பாலத்தின் இருபுறமும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகள், ஆட்டோக்கள், வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வந்து செல் கின்றன.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் கட்டப் பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது மீண் டும் பள்ளம் விழுந்துள்ள தால் தரமற்ற முறையிலேயே பாலம் கட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு பாலத்திற்கு கம்பிகள் கட் டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அந்த சமயம் எதிர்பா ராத விதமாக பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவச மாக பணியாளர்கள் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    பாலத்தில் பள்ளம் விழுந் துள்ளதன் காரணமாக பேருந்துகள் கூமாபட்டி பேருந்து நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் தற் போது இரண்டாவது முறை யாக இந்த விபத்து ஏற்பட் டுள்ளதால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன், உடனடியாக பள் ளத்தை சரி செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளம் சரி செய் யப்பட்டது.

    • 13-ம் நூற்றாண்டில் கட்டபட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
    • அரசுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியமான முடுக்கன்குளம் சிவகாமி அம்மன் சமேத அம்பல வாண சுவாமி கோவில் 13-ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த கோவிலில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோவி லில் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவ தற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனை தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோவிலாகும்.

    இவ்வாறாக மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் அம்பலவாணர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல வருடமாகி விட்டது.தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முடுக்கன் குளம் பழமை வாய்ந்த அம்பலவாணர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×