என் மலர்
விருதுநகர்
- பொதுமக்களிடம் ரூ. 68 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 63). இவர் சாத்தூர் வெள்ளக்கரை ரோட்டில் நிதிநிறுவனம் நடத்தி வந்த சையது பாஷா என்பவரி டம் ரூ. 1லட்சம் சீட்டில் சேர்ந்தார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தினார்.
தவணைக்காலம் முடிந்த பின் பணத்தை தராமல் சையது பாஷா ஏமாற்றினார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ. 68 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சந்திர போஸ் சாத்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு தொட ர்ந்தார். வழக்கு விசாரணை யின் போது சையது பாஷா ஆஜராகவில்லை. இதனால் மனு தள்ளுபடியானது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் சையது பாஷா ஆஜராக வில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார் பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 40). இவரது மனைவி புவனேஸ்வரி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து கமலக்கணன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது மனைவி பானு. நேற்று காலை வெளியே சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்.
- ஜவுளி கடையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் ராஜபாளையத்தின் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் ஜவுளி கடையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இன்று காலை கடையை நிர்வாக மேற்பார்வையாளர் பாண்டி என்பவர் திறந்தார். அப்போது பூட்டப்பட்ட கடையில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கடை உரிமையாளர் செல்வராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதில் பூட்டப்பட்ட கடையில் பணம் திருடப்பட்டு இருப்பதால் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து ஜவுளி கடையில் பணம் திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதியில் தங்கியிருந்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- அப்போது அவர் செவிலியரை கன்னத்தில் கடித்து உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் செவிலியர் சத்தம் போட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நர்சு ஒருவர் அங்குள்ள செவிலியர் விடுதியில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் பாளையம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். அவர் டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதியில் தங்கியிருந்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் செவிலியரை கன்னத்தில் கடித்து உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் செவிலியர் சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் விடுதிக்குள் நுழைந்த மணிகண்டனை பிடித்து வைத்துகொண்டு அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் நர்சை தாக்கிய மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து வாலிபர் கடித்ததில் காயமடைந்த நர்சுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து 4 அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைவில் செயல்படுத்திடும் வகையில், ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்து றையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அதிகாரி ழயகளுடனான ஆய்வு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூடுதல் தலைமைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மேலாண்மை இயக்குநர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவின்குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் , சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, டபிள்யூ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், சேத்தூர், செட்டியார்பட்டி ஆகிய 9 பேரூராட்சிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துர், சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிவகாசி மாநகராட்சி.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள், ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகள் என அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் தனித்தனியாக அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட சாலை வசதி, குடிநீர், சுகாதாரம், நீர்த்தேக்க தொட்டிகள், பஸ் நிலையம், பேவர் பிளாக், பாதாள சாக்கடை, மயானம், குடிநீர் குழாய் சீரமைத்தல், அனைவருக்கும் வீடு, பூங்கா மேம்பாடு, கூட்டுக்குடிநீர் திட்டம், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக நடப்பாண்டில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாநகராட்சி ஆணையர்கள், மாநகர பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், மண்டல செயற்பொறியாளர்கள், நகராட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் வருவாய் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் தலைமை தாங்கினார். குளத்தில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று மீட்டு வருவது போன்றும் ஒத்திகை காண்பித்தனர்.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் அந்தோணி, சுந்தரகுருசாமி, மாவட்ட கலால் உதவி ஆணையர் சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் ராமதாஸ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், சிவகாசி சுகாதாரத்துறை இயக்குநர் கலுசிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.
- விருதுநகர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பொன் இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில், புதிதாக பொன் விநாயகர் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நூர்சாகிபுரத்தில் பொன் இருளப்ப சுவாமி சாமியாடி அழைப்பு, வைத்தியலிங்காபுரம் கோவில் வீட்டில் இருந்து பொங்கல்பானை அழைத்தல், இரவு சாமி அலங்காரம், அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி பாலகணேஷ் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடந்தது. 'பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன. இன்று (3-ந் தேதி) அதிகாலை பொங்கல் வைத்தல், அன்னதானம், கிடா வெட்டு நிகழ்வோடு ஆவணித்திருவிழா நிறைவடைந்தது.
- விருதுநகர் மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் 2 மாணவிகள் மாயமானார்கள்.
- ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள தனியார் தொண்டு குழந்தைகள் காப்பக நிர்வாகி எலிசபத் (வயது 40). இவர் பாண்டியன் நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த வாரம் காப்பகத்தில் கீழராஜகுலராமன், தாயில்பட்டியை சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவிகள் சேர்ந்தனர். சம்பவத்தன்று சாப்பிட செல்லும் போது இருவரும் காப்பகத்தில் இருந்து மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கார்த்தீஸ்வரி (21). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதே போல் திருத்தங்கலை சேர்ந்த தர்மராஜ் மகள் லட்சுமிபிரியா (22) என்பவரும் மாயமானார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி சங்கரலிங்கபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகம், வெளிமாநில வியாபாரிகளும் சிவகாசிக்கு நேரடியாக வந்தும் பட்டாசு ஆர்டர் கொடுக்கின்றனர்.
- சிவகாசியில் பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு பட்டாசு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இப்பகுதி ஆலைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவு காரணமாக பட்டாசு உற்பத்தி குறைந்து விட்டது. கடந்த ஆண்டை விட 40 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் தற்போது பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு வெளி மாநில பட்டாசு வியாபாரிகள் வருகை தொடங்கியுள்ளது. அவர்கள் 2 மாதங்களுக்கு முன்னரே ஆர்டர் கொடுத்திருந்த நிலையில் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகம், வெளிமாநில வியாபாரிகளும் சிவகாசிக்கு நேரடியாக வந்தும் பட்டாசு ஆர்டர் கொடுக்கின்றனர்.
ரூ.5 லட்சம், அதற்கு மேல் ஆர்டர் கொடுப்பவர்கள் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக வருகின்றனர். அதற்கு கீழ் ஆர்டர் கொடுப்பவர்கள், சில்லறை வியாபாரிகள், மொத்த பட்டாசு விற்பனை கடைகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு ஆலையின் விலைக்கே பட்டாசு கிடைக்கும் என்பதால் ஒரு சிலர் தங்கள் சொந்த தேவைகளுக்கு முன்னதாகவே சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைந்து விட்டது. பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 40 சதவீதம் அளவில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சிவகாசியில் பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்து விட்டதால் இந்த ஆண்டு பட்டாசு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 1000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று கவலை அடைந்துள்ளனர் என்றார்.
- சாத்தூர் அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தூர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் இருக்கும் சகோதரி வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் அருேக வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மாரீஸ்வரி (40), அவரது மகன்கள் மாரி ரமேஷ் (20), மாரி பாபு (19), தாய் கங்கா தேவி, டிரைவர் சுரேந்திரன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரி, கங்காதேவி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- சிவகாசியில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- கணவர் மகேஸ்வரனின் பெயரில் உள்ள காசோலையை கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டிைய சேர்ந்தவர் கோமதி (வயது 30). இவரிடம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவர் கடந்த 9-9-2021 அன்று ரூ.3 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். அதற்கு தனது கணவர் மகேஸ்வரனின் பெயரில் உள்ள காசோலையை கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அதுபற்றி அறிந்த கோமதி அவரிடம் ேகட்டதற்கு சங்கரேஸ்வரி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோமதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார், சங்கரேஸ்வரி மீது மோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் டவரில் காப்பர் கம்பி திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
- திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர நாச்சியார்புரத்தில் தனி யார் செல்போன் நிறு வனத்தின் டவர் உள்ளது. அதனை பராமரித்து வந்த வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் நேற்று பார்க்க சென்றனர்.
அப்போது செல்போன் டவரில் இருந்த காப்பர் கம்பிகளை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். ஈஸ்வரனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்று பிடித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டவர் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேஷ்ராம் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






