search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Archive"

    • விருதுநகர் மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் 2 மாணவிகள் மாயமானார்கள்.
    • ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் தொண்டு குழந்தைகள் காப்பக நிர்வாகி எலிசபத் (வயது 40). இவர் பாண்டியன் நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த வாரம் காப்பகத்தில் கீழராஜகுலராமன், தாயில்பட்டியை சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவிகள் சேர்ந்தனர். சம்பவத்தன்று சாப்பிட செல்லும் போது இருவரும் காப்பகத்தில் இருந்து மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி

    சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கார்த்தீஸ்வரி (21). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதே போல் திருத்தங்கலை சேர்ந்த தர்மராஜ் மகள் லட்சுமிபிரியா (22) என்பவரும் மாயமானார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி சங்கரலிங்கபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆவடி அருகே விடுதி காப்பாளர்கள் பாலியல் தொந்தரவு செய்வதாக வந்த புகாரின் பேரில் மீண்டும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு தனியார் காப்பகம் மூடப்பட்டது.
    ஆவடி:

    சென்னை வில்லிவாக்கம் முருகேசன் நகரில் வசிப்பவர் ஜேக்கப் (64). இவரது மனைவி விமலா. இவர்கள் இருவரும் அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் சியான் தெருவில் கடந்த 20 வருடங்களாக நித்திய வார்த்தை என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருகிறார்கள்.

    இங்கு காப்பாளர்களாக அயனாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39), சாமுவேல் மற்றும் உதவியாளராக முத்து (27) வேலைசெய்து வந்தனர். இங்கு ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவ- மாணவிகள் தங்கி திருமுல்லைவாயில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காப்பக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் அம்பத்தூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி அனிதா ஆனந்த் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    அப்போது காப்பகத்தில் விடுதி காப்பாளர்கள் பாலியல் தொந்தரவு செய்வதுடன், அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் சென்று விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அலுவலர் செந்தில் போலீசாருடன் காப்பகத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ள மாணவ- மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, காப்பகத்தின் உரிமையாளர் விமலா, கணவர் ஜேக்கப், காப்பாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு விடுதி காப்பாளர் சாமுவேலை தேடி வருகின்றனர். இதனிடையே காப்பகத்தில் தங்கி இருந்த 24 மாணவிகளை பொத்தூரில் உள்ள மரியாலாய பாதுகாப்பு இல்லத்திலும், 2 மாணவிகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    20 மாணவர்களை சியான் பாதுகாப்பு இல்லத்திற்கும்,2 மாணவர்களை பெற்றோர்களிடமும் அனுப்பி வைத்தனர்.

    பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவ-மாணவிகள் அனைவரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தனியார் காப்பகம் மூடப்பட்டது.

    12 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தால் அவர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது.

    இந்த காப்பகத்தில் ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
    ×