என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் ஜவுளி கடையில் ரூ.6 லட்சம் கொள்ளை
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்.
- ஜவுளி கடையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் ராஜபாளையத்தின் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் ஜவுளி கடையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இன்று காலை கடையை நிர்வாக மேற்பார்வையாளர் பாண்டி என்பவர் திறந்தார். அப்போது பூட்டப்பட்ட கடையில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கடை உரிமையாளர் செல்வராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதில் பூட்டப்பட்ட கடையில் பணம் திருடப்பட்டு இருப்பதால் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து ஜவுளி கடையில் பணம் திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






