என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினா்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சா் தங்கம் தென்னரசு அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர்அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் கடந்த வருடம் பெய்த மழையால் வௌ்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான 54 நாிக்குறவா் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இப்பகுதி நாிக்குறவா் இன மக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சா் உத்தரவின்போில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை-சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1.82 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும், ரூ.3.10 லட்சம் மதிப்பில் போர்வெ்ல் அமைத்து குளியல் தொட்டி அமைப்ப தற்காகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.47 லட்சம் மதிப்பில் நாிக்குறவா் காலனி பாதுகாப்பிற்காக அருகில் உள்ள காரியாபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 636 மீ பள்ளி சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.96.51 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், 25 சதவிகித கனிமவள நிதி திட்டத்தின்கீழ், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினருக்கு வீடு ஒன்றிற்கு தலா ரூ.5.90 லட்சம் வீதம் மொத்தம் 54 வீடுகளுக்கு ரூ.3 கோடியே18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய நலத்தி ட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவா் செந்தில், யூனியன் துணைதலைவர் ராஜேந்திரன், பிரமுகர் கண்ணன், செல்லம், கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

    இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி.

    சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன் திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயந்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி.

    சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்.

    ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், விருதுநகர் நகர செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலி ங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாள கருபப்சாமிபாண்டியன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

    விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மனைவியை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தார்.
    • இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவரை பிரிந்து மாசிலாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கோவையில் கட்டிடவேலைக்கு சென்று வந்த பாண்டியராஜ், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கோவைக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் மது குடித்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை சண்முகவேல் கண்டித்தார்.

    நேற்று வீடு திரும்பாத பாண்டியராஜ், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கொண்டனேரி கண்மாய் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் மது குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது.
    • விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

    விருதுநகர்:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் முக்கிய நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விருதுநகரில் பாவாளி ரோட்டில் உள்ள கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை காரணமாக நிர்வாகிகள் காலி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ராஜ சுலோச்சனா ஆகியோர் அந்த அலுவலகத்தில் ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.

    விருதுநகர் பாவாளி ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • விருதுநகர் அருகே மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார்.
    • இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது சிலைகளுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணை செயலாளர் வீரேசன், நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜய குமரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல் பாண்டியன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், நடிகர் பிரபாத், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மச்சராசா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
    • நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர் அவினாஷ் எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரிதாளாளர்ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிசாமி தொடக்க உரையாற்றினார். கணிப்பொறியியல் துறை தலைவர் ராமதிலகம் வாழ்த்துரை வழங்கினார்.

    கணிப்பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி கனகதுர்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி இன்க்ரீக்ஸ் டெக் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மொஹமத் நவ்சத்தும் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினர் அவினாஷ் பேசுகையில், நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சவால்களை சந்திப்பது குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் தொழில் அதிபர்களாகவும், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் மூலமாக சிறு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழில் அதிபராக வளர வேண்டும் என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசண்ேடசன், பிளைண்ட் கோடிங், கேப் பெஸ்ட் , மக்ல்ஸ் இன்டலக்ட் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த போட்டிகளும், கிரேசி சேஸ், தம் சரசட்ஸ், டல்கோனா கேன்டி, ஜியூக்பாக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இந்த போட்டிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான நிறைவு விழாவில், 4-ம் ஆண்டு மாணவி லிதியா ஸ்ரீ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்- ஒருங்கிணைப்பாளர்கள் அருண் சண்முகம், பாலகணேஷ், இறுதியாண்டு மாணவ ஒருங்கிணைப்பாளர்களான விக்னேஷ், மணிகண்டன், மதுபாலா, வைஷ்ணவி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.
    • காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுத லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக அமுதலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாளாக அமுதவல்லி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.

    வருடா வருடம் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று கோவிலில் மகா ருத்ரயாகம் உலக நன்மைக்காக நடைபெற்றது.இந்த யாகத்தை சிவாச்சா ரியார்கள் நடத்தினர். இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைபொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் காமராஜ், செய லாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், துணைத் தலைவர் முத்துக்குமார். உறவின்முறை சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன், எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    மேலும் இந்த மகா ருத்ரயாகத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட ருத்திராட்சம் வழங்கப்பட்டது. இங்கு கந்த சஷ்டி விழாவின் போது குழந்தை இல்லாத தம்பதியினர் விரதம் இருந்து கோவிலில் இருக்கும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானையை வணங்கி வந்தால் குழந்தை பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.

    காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நமஸ்கரித்தான்பட்டி, மங்களம், புதுக்கோட்டை, செவலூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆனையூர் ஊராட்சியில் உள்ள சமத்து வபுரம் பகுதிகளில் புதுப்பிக்க ப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள சமு தாயக்கூடம், அங்கன்வாடி மையத்தையும், செங்கம லநாச்சி யார்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.22 லட்சம் மதிப்பில் ஊருணி சீரமை க்கப்பட்டு வரும் பணிகளையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் அமை க்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிக ளையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் கட்டுப்பட்டு வரும் பணிகளையும், புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.311 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மாடாத்தி அம்மாள். இவரது மகள் பிரியலட்சுமி (வயது 19). சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் மாயம்

    சாத்தூர் வெங்கடாசல புரத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தர்ஜித் (5) என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அணிந்திருந்த 5 ½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து வீரகுமார் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரியா தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தேக்கங்குளத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் நித்தின் (16). இவர் காரியாபட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று நித்தின் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது மகள் ராஜரா ஜேஸ்வரி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைனைச் சேர்ந்தவர் கதிரேஷ். எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீமா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவி செல்போனில் பேசுவதை கதிரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த லீமா மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் முத்தண்டியா புரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஈஸ்வரபாண்டி (17). தீபாவளி மறுநாள் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    ×