என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
    • மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.

    • ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
    • மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவி னைப்பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து க்குள் இருப்பின், ஆண் 5 சதவீதம், பெண் 4சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    கடன் பெற இணைக்க ப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3.

    கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர் மாவட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் நடந்தது.
    • இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையம் சார்பில் அனைத்து இளங்கலை, இளநிலை மற்றும் முதுகலை, முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் திறன் வெளிப்பாட்டின் அவசியத்தை மாணவர்க ளிடையே ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரை யாளராக சிவகாசி அப்தான் கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர் தினேஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசுகையில், நிகழ்காலச் சூழலில் அரசு வேலைகளைப் பெறும் முறைகள் குறித்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

    கல்லூரி பணி அமர்வு மைய பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். குமாரபாலாஜி நன்றி கூறினார். இதில் 796 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் எம்.டி.ஆர். 4-வது தெருவை சேர்ந்தவர் கோகிலா.
    • போலீசார் அன்புகுமாரை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் எம்.டி.ஆர். 4-வது தெருவை சேர்ந்தவர் கோகிலா (34). இவர் அங்குள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் கோகிலாவிடம் பேசிய மர்ம நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என கூறிக்கொண்டு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் குறிப்பிட்ட நாளில் விருதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அந்த நபர் குறிப்பிட்டார். இதையடுத்து மொபட்டில் சென்ற கோகிலாவிடம் போனில் சி.பி.ஐ. அதிகாரி என பேசிய வாலிபர் கப்பலூர் வரை அழைத்துச் சென்று அங்கு அவரிடம் 4 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோபியா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து நகை, மோட்டார் சைக்கிளை பறித்தது வேலூர் மாவட்டம் குப்பம் பகுதியில் உள்ள சத்திரம்புதூரைச் சேர்ந்த அன்புகுமார் என தெரியவந்தது.

    வேலூருக்கு சென்ற தனிப்படை போலீசார் அன்புகுமாரை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    • விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விருதுநகர்:

    ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

    இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, சாமுத்ரிகா, உறவினர்கள் கோவர்த்தணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவணராஜ் ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.

    முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.

    நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.

    முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.

    • அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திகழும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பார்வையிட்டார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர்முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம்.

    வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகா தாரமான முறையில் 2 ஸ்லேட்டர்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது.

    ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கலிடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் பக்தர்களுக்கு அதிக விலையில் பொரு ட்களை விற்கின்றார் என்ற நிலை இல்லாமல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிேறாம்.

    ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்து க்கொண்ட பணிகளில் இப்போது கோவில் உள்ளே இருக்கிற உற்சவர் மண்டபம் ரூ.40 லட்சத்திலும், முடிகாணிக்கை மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கோவில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    விருதுநகர்

    ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, உறவினர்கள் கோவர்த்த ணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவ ணராஜ் ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியா சபை கூட்டம் குறித்த முறையான தகவல் இல்லை.
    • இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    விருதுநகர்

    நாளை (1-ந் தேதி) உள்ளாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    உள்ளாட்சி தினமான நாளை கிராமசபை கூட்டங்கள் போல் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி கள், மாநகராட்சிகளில் வார்டு வாரியாக ஏரியாசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சி லர்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அந்தந்த வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விதிமுறைக ளுக்கு உட்பட்டு அதனை நிவர்த்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதே போல் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அமுதா, அரசின் செயல் திட்டங்கள், வெளிப்படை தன்மை குறித்த இயக்கங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேற்படி முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியாசபை கூட்டம் குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏரியாசபை கூட்டங்கள் வார்டு வாரியாக நடத்தப்படுமா? அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடைபெறுமா? என்று தெரியவில்லை. 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில் ஏரியாசபை கூட்டம் குறித்து அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடாதது பொது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

    ×