என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர் கைது
    X

    சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர் கைது

    • அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் எம்.டி.ஆர். 4-வது தெருவை சேர்ந்தவர் கோகிலா.
    • போலீசார் அன்புகுமாரை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் எம்.டி.ஆர். 4-வது தெருவை சேர்ந்தவர் கோகிலா (34). இவர் அங்குள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் கோகிலாவிடம் பேசிய மர்ம நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என கூறிக்கொண்டு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் குறிப்பிட்ட நாளில் விருதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அந்த நபர் குறிப்பிட்டார். இதையடுத்து மொபட்டில் சென்ற கோகிலாவிடம் போனில் சி.பி.ஐ. அதிகாரி என பேசிய வாலிபர் கப்பலூர் வரை அழைத்துச் சென்று அங்கு அவரிடம் 4 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோபியா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து நகை, மோட்டார் சைக்கிளை பறித்தது வேலூர் மாவட்டம் குப்பம் பகுதியில் உள்ள சத்திரம்புதூரைச் சேர்ந்த அன்புகுமார் என தெரியவந்தது.

    வேலூருக்கு சென்ற தனிப்படை போலீசார் அன்புகுமாரை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×