என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏரியா சபை கூட்டம் குறித்த முறையான தகவல் இல்லை
  X

  ஏரியா சபை கூட்டம் குறித்த முறையான தகவல் இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியா சபை கூட்டம் குறித்த முறையான தகவல் இல்லை.
  • இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

  விருதுநகர்

  நாளை (1-ந் தேதி) உள்ளாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

  உள்ளாட்சி தினமான நாளை கிராமசபை கூட்டங்கள் போல் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி கள், மாநகராட்சிகளில் வார்டு வாரியாக ஏரியாசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  இந்த கூட்டத்தில் கவுன்சி லர்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அந்தந்த வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து விதிமுறைக ளுக்கு உட்பட்டு அதனை நிவர்த்தி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதே போல் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அமுதா, அரசின் செயல் திட்டங்கள், வெளிப்படை தன்மை குறித்த இயக்கங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

  மேற்படி முதல்-அமைச்சர் அறிவித்த ஏரியாசபை கூட்டம் குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏரியாசபை கூட்டங்கள் வார்டு வாரியாக நடத்தப்படுமா? அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடைபெறுமா? என்று தெரியவில்லை. 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில் ஏரியாசபை கூட்டம் குறித்து அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடாதது பொது மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

  Next Story
  ×