search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர்  குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி
    X

    வீடுகட்டும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி ஒரு நரிக்குறவர் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

    ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணி

    • ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினா்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சா் தங்கம் தென்னரசு அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர்அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் கடந்த வருடம் பெய்த மழையால் வௌ்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான 54 நாிக்குறவா் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இப்பகுதி நாிக்குறவா் இன மக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சா் உத்தரவின்போில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை-சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1.82 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும், ரூ.3.10 லட்சம் மதிப்பில் போர்வெ்ல் அமைத்து குளியல் தொட்டி அமைப்ப தற்காகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.47 லட்சம் மதிப்பில் நாிக்குறவா் காலனி பாதுகாப்பிற்காக அருகில் உள்ள காரியாபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 636 மீ பள்ளி சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.96.51 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், 25 சதவிகித கனிமவள நிதி திட்டத்தின்கீழ், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினருக்கு வீடு ஒன்றிற்கு தலா ரூ.5.90 லட்சம் வீதம் மொத்தம் 54 வீடுகளுக்கு ரூ.3 கோடியே18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய நலத்தி ட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவா் செந்தில், யூனியன் துணைதலைவர் ராஜேந்திரன், பிரமுகர் கண்ணன், செல்லம், கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×