என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் அருகே, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கொடியேற்றினார்.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ராஜபாளையம்,
தமிழர் திருநாளை முன்னிட்டு ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணாபுரம், சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சிகள் உள்பட பல்வேறு ஊராட்சிகளிலும், பேரூர் பகுதிகளிலும் தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிசெல்வம், கூட்டுறவு சங்கத்தலைவர் பாஸ்கர், கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய நிர்வாகிகள் காந்தி, குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி தலைமை தாங்கினர்.
தலைமை ஆசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்து சிறந்த ஆசிரியர்களுக்கு பிள்ளையார் நத்தம் ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழாவும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு வழங்கப்பட்டது.
பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சேதுராமன், ஊர் தலைவர் குணசேகரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் சுந்தரி கோவிந்தராஜ், பூவாணி கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நுண்கலை நாள் விழா நடந்தது.
- துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிவகாசி,
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நுண்கலை நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முகத்தில் வர்ணம் பூசுதல், சைகை மொழி, வினாடி-வினா, கழிவில் இருந்து கலை, நா பிறழ் பயிற்சி, குறள் முழக்கம், 3டி ஓவியம், விளம்பரம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரதீபா வரவேற்றார். துணைத் தலைவர் கமலவேணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் செய்தி ருந்தனர்.
- விருதுநகர் அருகே நடந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்-முதியவர் பலியாகினர்.
- வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் விருதுநகர் அருகில் உள்ள வச்சககாரப்பட்டிக்கு சவாரி சென்று விட்டு மீண்டும் பந்தல்குடி திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை மாரிமுத்து வேகமாக திருப்பினார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி முதியவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
மேலும் இந்த விபத்தில் ஆட்டோவை திருப்ப முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் மாரிமுத்துவின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மாரிமுத்துவின் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனராஜ் கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணகுமாரிடம் சென்று தனது மனைவியை கொன்றதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
- நாராயணகுமார் கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திகோவில் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்தவர் வனராஜ் (வயது30). இவரது மனைவி ஏசுராணி (எ) உமா (28). இவரும் அதே தோப்பில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த வனராஜ் டார்ச்லைட்டால் மனைவி ஏசுராணியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து வனராஜ் கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணகுமாரிடம் சென்று தனது மனைவியை கொன்றதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதுபற்றி நாராயணகுமார் கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனர்.
திருச்சுழி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (50). விவசாயியான இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து குடிபோதையில் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன்கள் ராஜேந்திரன் (23), ராம்குமார் ஆகிய இருவரும் ஆத்திரமடைந்தனர்.
ராம்குமார் தூண்டுதலின் பேரில் தந்தை குருசாமியை ராஜேந்திரன் கம்பால் அடித்து துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுபற்றி ராஜேந்திரன் ராஜகோபாலபுரம் கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமியிடம் சென்று தனது தந்தையை கொன்று விட்டதாக கூறினார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பரளச்சி போலீசில் புகார் செய்தார். குருசாமியின் மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் ஆகிய இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர். அவர்களில் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ராம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்டம் சார்பில் பொதுப்பிரிவு பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்/வீராங்கனைகளின் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தங்களின் அனைத்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த போட்டிகளுக்கு இணைதளத்தில் விண்ணப்பிக்க நாளை (17-ந்தேதி) கடைசிநாள் ஆகும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவருக்கான பரிசுத் தொகை விபரம் முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.ஆயிரம் ஆகும்.
இதில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கிரிக்கெட், தடகளம், கூடைபந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேஜைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டம், அடேப்டட் வாலிபால், மன வளர்ச்சி குன்றியோர்- 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து. செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் - 100மீட்டர் ஓட்டம், கபடி. (உ) அரசு ஊழியர்கள் விளையாட்டு போட்டிகள், வயது வரம்பு இல்லை.
மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விபரங்கள் www.sdat.tn.gov.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகரில் ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நகை கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலைக் கரையை சேர்ந்தவர் கருப்ப சாமி (வயது 36). இவருக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டில் சேர்ந்துள்ளார். அந்த நகை கடையின் வரதராஜன், சுப்பிர மணியன், பாலவிக்னேஷ், பவுன்ராஜ் ஆகியோர் நிர்வாக பங்குதாரர்களாக உள்ளனர். கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் பணம் கட்டி வந்துள்ளனர்.
இதற்கிடையே அதன் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நகை சீட்டு பணம் செலுத்துவதற்காக கருப்பசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
கருப்பசாமி அடுத்த மாதம் சென்று பார்த்தபோது, கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்ததும் கடை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. இதே நகை கடையின் உரிமையாளர்கள் மதுரையில் நடத்தி வரும் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த நகை கடையில் கருப்பசாமி 3 கால் லட்சம் செலுத்தியுள்ளார். கருப்ப சாமிக்கு நகைக்கடையை அறிமுகம் செய்தார். வாழவந்தான் ரூ. 40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருவதாகவும், மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் நகை சீட்டு தொகை சேர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. நகைசீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் நகைக்கடை மூடப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து கருப்பசாமி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் வரதராஜன் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
- இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). இவர் தனது நண்பர்கள் முத்துக்குமார், நாகூர்கனி ஆகயோருடன் விடத்தகுளத்தில் இருந்து வீரசோழன் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் கணேசமூர்த்தி என்பவர் மலைச்சாமி என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தினேஷ்குமார், கணேசமூர்த்தி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் ஆகியவற்றில் தோல் கழலை நோய் பரவி அங்குள்ள கால்நடைகளை தாக்கி அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் இந்த நோய் கால்நடைகளை தாக்கியுள்ளது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் ஆகும்.
உண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட கால்நடை களுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல்களில் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும். இந்த நோயானது சிறு கன்றுகள் முதல் கறவைமாடுகள் வரை அனைத்தையும் தாக்கக் கூடியது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்தவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவ நிலை யங்களிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப் புத்துறையினர் குழுக்கள் அமைத்து இந்த நோயின் நிலைமை குறித்தும், நோய் கிளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு லட்சம் தோல் கழலை நோய் தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து முன் அறிவித்து விளம்பரம் செய்து குழுக்கள் மூலமாக இந்த நோய்க்கான தடுப்பூசி பணியை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசிப்பணி குழுவினர் வருகை தரும்போது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும், பிறருக்கு அறிவுறுத்தவும் விவசாயிகள் கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசியினை போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசி செலுத்திய பின்னர் 21 நாட்கள் கழிந்த பிறகே கால்நடைகளின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அதற்குள் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது அவசியம் ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நோய் தடுப்பூசி பணி தொடர்ந்து மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தங்கள் பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
- 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.
மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறுகையில், நகராட்சியில் வரியற்ற வருவாயை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் தினசரி சந்தை அமைப்பதற்காக 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.
அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறி யாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி
சிவகாசி அருகே உள்ள கீழதாயில்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 23). தாயில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மோகன்ராஜ்.
நண்பர்களான இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தாயில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கொங்கலாபுரம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் மோகன்ராஜ், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
- ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.






